முட்டை சாப்பிடுவது இதயம் தொடர்பான நோய்களைக் கட்டுப்படுத்தும்: ஆய்வு!

ஆய்வின் படி, முட்டை சாப்பிடுவது மற்றும் இருதய நோய் (சிவிடி) சம்பவங்கள் மற்றும் மக்களிடையே மொத்த இறப்பு ஆகியவற்றுக்கு இடையே யு-வடிவ உறவு இருந்தது.

NDTV Food (with inputs from ANI)  |  Updated: April 06, 2020 12:01 IST

Reddit
Eating Eggs May Lower The Risk Of Heart-Related Diseases - Experts Reveal

முட்டை, பல காலங்களாக மிகவும் பிரபலமான உணவுப் பொருட்களில் ஒன்றாக உள்ளது. அதன் மாறுபட்ட சமையல் பயன்பாடு முதல் அதிக ஊட்டச்சத்து வரை, முட்டை நம்மைச் சுற்றியுள்ள மிகவும் மலிவு மற்றும் எளிதில் கிடைக்கக்கூடிய உணவுகளில் ஒன்றாகும். முட்டைகள் அதிக புரதச்சத்து இருப்பதால் அதை உட்கொள்ள நிபுணர்கள் எப்போதும் பரிந்துரைக்கின்றனர். இது பல வைட்டமின்கள் மற்றும் தாதுகளால் நிரம்பியுள்ளது. அதில் உடல்நல நன்மைகள் அதிகம் இருப்பதால், வாரத்திற்கு 3 முதல் 6 முட்டைகள் சாப்பிடுவது இதயம் தொடர்பான நோய்கள் மற்றும் இறப்பு அபாயங்களைக் குறைக்கும் என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. சீன மருத்துவ அறிவியல் அகாடமியின் புவாய் மருத்துவமனையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் சியா மற்றும் அவருடைய அலுவலக ஊழியர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.ஆய்வின் படி, முட்டை சாப்பிடுவது மற்றும் இருதய நோய் (சிவிடி) சம்பவங்கள் மற்றும் மக்களிடையே மொத்த இறப்பு ஆகியவற்றுக்கு இடையே யு-வடிவ உறவு இருந்தது. ஒரு விரிவான விளக்கம், வாரத்திற்கு 1 முட்டையை உட்கொள்வது சிவிடி யின் 22 சதவிகித அதிக ஆபத்து மற்றும் மொத்த இறப்புக்கு 29 சதவிகிதம் அதிக ஆபத்துடன் தொடர்புடையது என்பதைக் காட்டுகிறது; மற்றும் வாரத்திற்கு 10 முட்டைகள் சிவிடியின் 39 சதவிகிதம் அதிக ஆபத்து மற்றும் மொத்த இறப்புக்கு 13 சதவீதம் அதிக ஆபத்து ஆகியவற்றுடன் தொடர்புடையது. இருப்பினும், வாரத்திற்கு 3 முதல் 6 முட்டைகளை உட்கொண்டவர்களுக்கு எந்தவிதமான இருதய நோய்களுக்கும் மிகக் குறைவான ஆபத்து இருப்பது கண்டறியப்பட்டது. குறைவு அல்லது அதிக எண்ணிக்கையிலான முட்டை நுகர்வு மனித இதயத்திற்கு நல்லதல்ல என்பதை இது குறிக்கிறது.

சிவிடி துணை வகைகளில், முட்டை நுகர்வு செல்வாக்கு மாறுபடுகிறது என்பதையும் இந்த ஆய்வு எடுத்துக்காட்டுகிறது. அங்கு அதிக நுகர்வு கரோனரி இதய நோய்கள் (சிஎச்டி) மற்றும் இஸ்கிமிக் ஸ்ட்ரோக் ஆகியவற்றின் அபாயத்துடன் இணைக்கப்பட்டுள்ளது; ; குறைந்த நுகர்வு ரத்தக்கசிவு, பக்கவாதம் அதிகரிக்கும் அபாயத்துடன் இணைக்கப்பட்டது.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement
 
Listen to the latest songs, only on JioSaavn.com