வாரத்துக்கு மூன்று முட்டைகள் சாப்பிடுபவரா நீங்கள்? - எச்சரிக்கும் நிபுணர்கள்

அவித்த முட்டை, ஆம்லெட், ஸ்க்ரம்பில்டு எக் என அனைத்து விதமான உணவுகளுக்கும் முட்டை ஒரு சூப்பர் சைடு டிஸ்!

Edited by: Kamala Thavanidhi  |  Updated: March 31, 2019 11:12 IST

Reddit
Eating Three Eggs A Week May Be Harmful For Your Heart, Say Experts

காலை உணவுக்கு பர்ஃபெக்ட்டானது முட்டை. அதிக அளவு புரோட்டீன் உள்ளதால் நம்மில் பலர் முட்டையை உடல் எடை குறைக்கவும் சாப்பிடுகிறார்கள். அவித்த முட்டை, ஆம்லெட், ஸ்க்ரம்பில்டு எக் என அனைத்து விதமான உணவுகளுக்கும் முட்டை ஒரு சூப்பர் சைடு டிஸ்!

இதற்கிடையே பல ஆண்டுகளாக விவாதத்தில் இருப்பது முட்டை நல்லதா? கெட்டதா? முட்டையில் சர்க்கரை நோயாளிகளின் இதயம் சம்பந்தமான பிரச்னைகள் இருப்பவர்கள்கூட சாப்பிடலாம் என்று சிலர் கூறி வருகின்றனர்.   பிரிட்டிஸ் ஹார்ட் ஃபவுண்டேஷன் மற்றும் பிரிட்டிஷ் எக் இன்டஸ்ட்ரி கவுன்ஸில் முட்டையை தினமும் சாப்பிடுவதைத் தவிர்க்க அறிவுறித்தியிருக்கிறது. மேலும், முட்டையை ஒரு வாரத்துக்கு மூன்று அல்லது அதற்கு மேல் முட்டை சாப்பிட்டால் இதயம் சம்பந்தமான பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என்று எச்சரிக்கிறது.

அமெரிக்கன் மெடிக்கல் அசோஷியேஷன் ஆய்விம் படி அதிக அளவு முட்டையை எடுத்துக்கொண்டால், கொழுப்பு அதிகரித்து இதயசெயல்பாட்டை பாதிக்கும் என்று தெரிவித்திருக்கிறது. வாரத்த்துக்கு மூன்ற் முட்டைகள் எடுத்துக்கொள்வது 300மிகி அளவு கொழுப்பை சாப்பிடுவதற்கு சமம் என்றும் எச்சரிக்கிறது. இதனால் ஸ்ட்ரோக் மற்றும் மாரடைப்பு வரும் அபாயமும் உள்ளது. c8kcciao

 

Listen to the latest songs, only on JioSaavn.com

17.5 வருடங்களாக, அமெரிக்காவில் 30,000 மேற்பட்டவர்களுக்கு மேற்கொண்டார் Juliet Gray. அவரது அறிக்கையில்,  யாருக்கும் எந்தவித சீரியஸ் பிரச்னைகளும் வந்ததாக தெரியவில்லை என்றே குறிப்பிடுகிறார். 

முட்டையில் உள்ள கொழுப்பால் மட்டுமே பிரச்னைகள் வரும் என்று சொல்ல முடியாது. வாழ்க்கைமுறை மாற்றம், ஜெனடிக் பிரச்னையால்கூட நோய்கள் வரலாம். ஆகவே சத்தான உணவை சாப்பிட்டு ஆரோக்க்யமாக வாழ்வதே சிறந்தது. 

Commentsஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement