வால்நட்ஸ் சாப்பிடுவதால் சுகர், பிரஸர் கட்டுப்படுமா..? முறையான ஆய்வு கூறும் பதில் இதுதான்

வளர்சிதை மாற்றத்தில்  நேர்மறையான முன்னேற்றங்கள் இருப்பதாக ஆய்வு அறிக்கை கூறுகிறது. 

   |  Updated: March 19, 2019 17:20 IST

Reddit
Eating Walnuts Daily May Improve Blood Sugar, Blood Pressure Levels: Study

ஆரோக்கியத்திற்கு வால்நட்ஸ் மிகவும் ஏற்றது. இந்த நட்ஸில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் நார்ச்சத்துகள் அதிகமாக உள்ளன. புதிய ஆய்வில், வளர்சிதை மாற்ற நோய்த்தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வால்நட்ஸை சாப்பிடுவதால் சிறப்பான பயன்களைப் பெற முடியும் என்று கூறியுள்ளது. மேலும் நீரிழிவு நோயின் ஆரம்ப கட்ட அபாயத்தையும் வால்நட்ஸ் நீக்குகிறது. 

ஏனென்றால் வால்நட்ஸ் உள்ள நல்ல கொழுப்புச் சத்துகள் அல்லது உயர் அடர்த்தி கொழுப்பு புரதத்தை அதிகரிக்கிறது. மேலும், வளர்சிதை மாற்ற நோய்கள் டைப் 2 சர்க்கரை நோய்,  ஸ்ட்ரோக் மற்றும் இதய நோய்களால் பாதிக்கப்படுவதைப் பார்க்கலாம். இந்த ஆய்வு சிறப்பான உணவு முறையினால் சர்க்கரை நோய் அபாயத்தை குறைப்பதுடன் வளர்சிதை மாற்ற நோய்களுக்கான அபாயத்தையும் குறைக்கிறது.

Newsbeep

Listen to the latest songs, only on JioSaavn.com

இந்த ஆய்வின் முடிவுகள் ஊட்டச்சத்து பத்திரிக்கையில் வெளியானது. இந்த ஆய்வில், ஆய்வாளர்கள் 119 கொரிய ஆண்கள் மற்றும் பெண்களிடம் நடத்தப்பெற்றது. இரண்டு பிரிவாக  தோராயமாக பிரித்து வளர்சிதை மாற்றத்தை கவனித்து வந்தனர். முதல் குழுவினர் தினமும் 45 கிராம் வால்நட்ஸை 16 வாரங்களுக்கு சாப்பிட்டு வந்தனர். இரண்டாவது குழுவினர் பிரட் மற்றும் ஸ்நாக்ஸ்களை சாப்பிடும் படி கேட்டுக் கொள்ளப்பட்டது. 

au6bari
 

16 வாரங்களின் முடிவில் இரண்டு குழுவிற்கும் 6 வாரம் ஓய்வு காலம் கொடுக்கப்பட்டது. பின் மீண்டும் 16 வாரங்கள் இரண்டு குழுவும் அதேபோல் வால்நட்ஸு மற்றும் பிரட், ஸ்நாக்ஸ்களை சாப்பிட அறிவுறுத்தப்பட்டனர். இரண்டு குழுவின் சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம், கொழுப்பு அளவுகள் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டன. இதில் வால்நட்ஸை அதிகம் சாப்பிட்டவர்களின்  வளர்சிதை மாற்றத்தில்  நேர்மறையான முன்னேற்றங்கள் இருப்பதாக ஆய்வு அறிக்கை கூறுகிறது. 

Commentsஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement