ஒரு வாரத்திற்கு எத்தனை முட்டை சாப்பிடலாம்!!

வாரத்தில் மூன்று முதல் நான்கு நாட்கள் முட்டை சாப்பிடலாம்.  முட்டையை பேக்கான், மைதா, சர்க்கரை நிறைந்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளுடன் சேர்த்து சாப்பிடும்போது அதில் உடலுக்கு  கேடு விளைவிக்கக்கூடிய கொழுப்புகள் அதிகம் இருக்கும். 

Translated by: Kamala Thavanidhi  |  Updated: August 16, 2019 16:47 IST

Reddit
How Many Eggs Should You Eat In A Week? Expert Reveals
Highlights
  • முட்டையை அளவாக எடுத்து கொள்வதே சிறந்தது.
  • வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு நாட்கள் முட்டை சாப்பிடலாம்.
  • 180-300 மில்லிகிராம் அளவு கொழுப்பு சத்து முட்டையில் இருக்கிறது.

முட்டையில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் இருப்பது எவ்வளவு உண்மையோ அதில் இருக்கக்கூடிய ஆரோக்கியமற்ற கொழுப்புகள் உடல் உபாதைகளை ஏற்படுத்தும் என்பதும் அவ்வளவு உண்மை.  முட்டையில் புரதத்துடன், பொட்டாஷியம், மக்னீஷியம், சோடியம், நியாசின், ரிபோஃப்ளேவின், வைட்டமின் ஏ, பாஸ்பரஸ், சிங்க், வைட்டமின் டி, பி6, பி12, ஃபோலிக் அமிலம், தையாமின் மற்றும் இரும்புச் சத்து இருக்கிறது.  சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் இருதய நோய்கள், பக்கவாதம், உயர் இரத்த அழுத்தம், போன்றவை முட்டை சாப்பிடுவதால் ஏற்படுகிறதென தகவல் வந்துள்ளது.  ஒரு முட்டையில் 180 - 300 மில்லிகிராம் கொலஸ்ட்ரால் முட்டையின் மஞ்சள் கருவில் இருக்கிறது.  அதனால் ஒரு வாரத்திற்கு எத்தனை முட்டை சாப்பிட வேண்டும் என்பது குறித்து ஆலோசகர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.  

 

ruehhpe8

  

வாரத்தில் மூன்று முதல் நான்கு நாட்கள் முட்டை சாப்பிடலாம்.  முட்டையை பேக்கான், மைதா, சர்க்கரை நிறைந்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளுடன் சேர்த்து சாப்பிடும்போது அதில் உடலுக்கு  கேடு விளைவிக்கக்கூடிய கொழுப்புகள் அதிகம் இருக்கும்.  அப்படிப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் நீரிழிவு நோய், இருதய நோய்கள் ஏற்படலாம்.  குழந்தைகள் தினமும் ஒரு முட்டை சாப்பிடலாம்.   

Listen to the latest songs, only on JioSaavn.com

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement