வெவ்வேறு நாடுகளில் ரம்ஜான் கொண்டாடப்படும் விதம்

வட இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில், கடைசி நோன்பின் இரவு ‘Chaand Raat - நிலவின் இரவு’ எனும் பெயரில் மிகப்பெரிய பண்டிகையாகவே கொண்டாடப்படுகிறது.

एनडीटीवी फूड  |  Updated: June 14, 2018 01:00 IST

Reddit
Eid 2018: This is How Different Countries Celebrate the Holy Festival
Highlights
  • ‘ஈத் பெருநாள்’ இஸ்லாமியர்கள் நோன்பு நோற்கும் புனித ரமலான் மாதத்தின் முடிவ
  • ஆப்கானிஸ்தானில் ஈத் பெருநாள் அன்று முட்டை சண்டைகள் நடக்கும்
  • உணவு என்கிற மையப்புள்ளியே இங்கே எல்லா கொண்டாட்டங்களையும் இணைக்கிறது

ஈத் பெருநாள் – வெவ்வேறு நாடுகளில் ரம்ஜான் கொண்டாடப்படும் விதம்!

ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு மரபு உண்டு; காலம் காலமாக தொடரும் அந்த மரபு நம் வாழ்வின் முக்கிய அங்கமாகவே இருக்கும். ஒவ்வொரு மதத்தின் கலாச்சாரமும் அதன் பண்டிகைகளுக்கு ஒரு தனித்துவமான அழகான அடையாளத்தை கொடுத்திருக்கும். ஈத்-உல்-ஃபித்ர் என அழைக்கப்படும் ரம்ஜான் என்கிற முக்கியமான இஸ்லாமிய பண்டிகைக்கும் அது பொருந்தும்.

‘ஈத் பெருநாள்’ இஸ்லாமியர்கள் நோன்பு நோற்கும் புனித ரமலான் மாதத்தின் முடிவை குறிக்கிறது. ஒரு மாதம் நீண்ட நோன்பு காலம், தடையற்ற விருப்பங்களை நிறைவேற்றும்படியான வகை வகையான உணவுகளுடன் முடிகிறது. புதிய நிலவின் பிறையை பார்த்து உறுதி செய்த பின்னரே, ‘ஈத் பெருநாள்’ கொண்டாட்டங்கள் தொடங்குகிறது.உலகம் முழுக்க இருக்கும் நாடுகளில் ஈத் பெருநாளின் மரபுகளும் சடங்குகளும் வேறுபட்டாலும் கூட, உணவு என்கிற மையப்புள்ளியே இங்கே எல்லா கொண்டாட்டங்களையும் இணைக்கிறது. ஈத் பெருநாள் என்றாலே ஆடம்பரமான, வகை வகையான சுவையான உணவுகள் இல்லாமல் முழுமை அடையாது அல்லவா?

இந்த பதிவில் உலகம் முழுக்க ஈத் பெருநாள் எப்படி கொண்டாடப்படுகிறது என்பதை காணலாம்:

தென் கிழக்கு ஆசியா

புருனே, இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் ஈத் பெருநாள் உற்சாகமாக கொண்டாடப்படுவது உண்டு. இந்தோனேசியாவில் ‘லெபரான்’ என்கிற பெயரில் கொண்டாடப்படுகிறது ரம்ஜான். கறி உணவும், பாலாடை இனிப்புகளும், லெமாங் என அழைக்கப்படும் மூங்கிலில் சமைக்கப்பட்ட உணவும் விருந்தில் ஒரு பகுதியாக இருக்கும்.      

எகிப்து
 

எகிப்து நாட்டில் ஈத் பெருநாள் நான்கு நாள் பண்டிகையாக விமரிசையாக கொண்டாடப்படுகிறது. எகிப்து நாட்டு ஈத் விருந்தில் மீன் வகை உணவுகளே பெரும்பாலும் இருக்கும்.

ஈராக்

ஈராக்கில் ரமலான் மாதத்தில், பேரீச்சம்பழம் மிக அதிக முக்கியத்துவத்தை கொண்டிருக்கும். முந்திரி பருப்பு, பேரீச்சம்பழங்களை கொண்டு செய்யப்படும் cookie வகை உணவான ‘Klaicha’ இல்லாமல் ஈத் விருந்துகள் இருக்காது.   


ஆப்கானிஸ்தான்


ஆப்கானிஸ்தானில் ஈத் பெருநாள் அன்று முட்டை சண்டைகள் நடக்கும் தெரியுமா? Tokhm-Jangi எனும் நிகழ்வில், திறந்தவெளியில் ஆண்கள் ஒருவர் மீது ஒருவர் அவித்த முட்டைகளை விட்டெறியும் சண்டை கொண்டாட்டமாக நடப்பதுண்டு. 


பர்மா

பர்மா நாட்டு ரமலான் விருந்துகளில் ரவையால் ஆன இனிப்பு பண்டங்கள் நிரம்பி கிடக்கும். முந்திரி பருப்பும், சுவையான கறியும் நிரம்பி கிடக்கும் பிரியாணியும் இருக்கும்.
 

துருக்கி

துருக்கியில் 'Seker Bayrami' என்றே  ஈத் பெருநாள் அழைக்கப்படுகிறது. குழந்தைகள், உற்றார் உறவினர், நண்பர்கள் என அனைவருக்கும் இனிப்பு பண்டங்களை பரிமாறுவது முக்கிய மரபாக இருக்கும். 

சவூதி அரேபியா


எல்லா நாடுகளைக் காட்டிலும் சவூதி அரேபியாவில் தான் ஈத் பெருநாள் மனப்பூர்வமாக கொண்டாடப்படுகிறது என்றே சொல்லலாம். வீட்டின் முன் தரை விரிப்புகளை விரித்து, நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கத்து வீட்டாரோடு அமர்ந்து உணவை பகிர்ந்து உண்டு மகிழும் வழக்கம் கூட உண்டு.

சோமாலியா

சோமாலியா நாட்டின் ஈத் கொண்டாட்டங்கள், ஆடம்பரமான விருந்துகளுக்கு பெயர் போனது. Halvo என அழைக்கப்படும் இனிப்பு, சோமாலியாவில் மிக பிரபலம் (நம்ம ஊர் அல்வாவை போலவே தான், கிட்டத்தட்ட அதே). 
 

இந்தியா

வட இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில், கடைசி நோன்பின் இரவு ‘Chaand Raat - நிலவின் இரவு’ எனும் பெயரில் மிகப்பெரிய பண்டிகையாகவே கொண்டாடப்படுகிறது. பெண்கள் கை, கால்களில் மருதாணி அணிவது வழக்கம். நாடு முழுக்க இருக்கும் இஸ்லாமியர்கள் தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு பணமாகவோ, இனிப்புகளாகவோ, பரிசுப் பொருட்களாகவோ கொடுத்து தங்கள் அன்பை வெளிப்படுத்துவது வழக்கம். பிரியாணி, சேமியா, பாயாசம், கபாப், ஹலீம் என நாவில் நீர் சொட்டவைக்கும் உணவு வகைகள் இந்திய விருந்துகளில் நிரம்பி கிடக்கும்.

Commentsஈத் பெருநாள் வாழ்த்துக்கள்!உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement