ரமலான் பார்ட்டிக்கு ரெடியா?

புதுமையான உணவு வகைகளுடன் இந்தாண்டிற்கான ரமலான் விருந்து அளித்து கொண்டாடுங்கள்

Sushmita Sengupta  |  Updated: June 16, 2018 21:34 IST

Reddit
Eid Party: A Delicious Menu for a Delectable Eid Spread
Highlights
  • ரமலான் ஸ்டார்டர்ஸ் கோழி சீக்-கபாப் வழக்கமாக செய்யப்படும்
  • பிரியாணி அற்ற ரமலான் பண்டிக்கை முழுமையடையாது
  • சுவையான ஷீர் குர்மா ரமலான் பண்டிகையின் பாரம்பரிய இனிப்பு வகையாகும்

இந்த ஆண்டு ரமலான் விருந்தை கலக்க வேண்டுமா ?

இன்று புனித ரமலான் பண்டிகை உலகெங்கிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இறை வழிபாடுகளின் நம்பிக்கைகளை புதுக்கும் காலமாக  புனித ரமலான் மாதம் அமையும். இந்த மாதத்தில், நோண்பு இருந்து இறை வழிபடுவர். இறுதி நாளான ரமலான் பண்டிகையில், ஷவால் தொடங்க இருப்பதால், நோண்பு முறைகளை விருந்துடன் முடித்து வழிபடுவர். புதுமையான உணவு வகைகளுடன் இந்தாண்டிற்கான ரமலான் விருந்து அளித்து கொண்டாடுங்கள்...

 

 

ரமலான் ஸ்டார்டர்ஸ்

பாரம்பரிய ரமலான் ஸ்டார்டர்ஸ் கோழி சீக்-கபாப் வழக்கமாக செய்யப்படும் உணவுகளில் ஒன்று. கோழி கறி மற்றும் மசால சேர்த்து கோல்டன் நிற துண்டுகளால் ஆனது கோழி சீக்-கபாப். மற்றொரு வவையான அவாத் நாட்டு பாரம்பரிய சுவை கொண்ட கலொட்டி கபாப் செய்யலாம்.


kebabs

ரமலான் பானம்

ரமாலான் விருந்தின் இளைப்பாறுதலுக்கு, ரமலான் பானம் பரிமாறப்படுவது வழக்கம்.  சுவையான பாதாம் ஷர்பத் அல்லது மாம்பழம் மஸ்தானி பானங்களை இந்த ஆண்டு ரமாலான் பண்டிகைக்கு தயார் செய்யலாம். ஆல்மண்டு,  ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து பாதாம் சர்பத்தை எளிதாக தயாரிக்கலாம். அல்லது, மாம்பழங்களை அரைத்து, அதனுடன் மாம்பழ ஐஸ்க்ரீம், ஏலக்காய், ஆல்மண்டு சேர்த்தால்  இந்த ஆண்டின் ஸ்பெஷல் மாம்பழ மஸ்தானி பானம் தயார்.

 

thandai

ரமலான் உணவு

பிரியாணி அற்ற ரமலான் பண்டிக்கை முழுமையடையாது.  இந்த ஆண்டு ஸ்பெஷலாக தம் முறையில் செய்யப்படும் மட்டன் ஷாஹி பிரியாணியுடன் மட்டன் பூனா கோஸ்ட் தயார் செய்து பாருங்கள். சிறியதாக நறுக்கப்பட்ட மட்டன் துண்டுகளுடன், மசாலா, தயிர், பால், ஆகியவற்றை சேர்த்து சமைத்தால் மட்டன் பூனா கோஸ்ட் தயார். பிரியாணியுடன் சேர்த்து சாப்பிட சுவையான கிரேவியாக அமையும். மட்டன், மசாலா, உடைந்த கோதுமை ஆகியவற்றை சேர்த்து செய்யப்படும் பாரபம்பரிய உணவு ஹலீம் ரமலான் பண்டிகையில் தவிர்க்க முடியாதது. மட்டன் அல்லாது கோழி உணவு பிரியர்கள், இனிப்பு ப்ரெட் ஷீர்மாலுடன் சுவையான கோழி குருமா சேர்த்து சாப்பிடலாம்.

 

mutton curry 620
 

ரமலான் இனிப்பு

இனிப்புகள் இல்லாத பண்டிகை இல்லை. ஏலக்காய், தேங்காய், சேமியா சேர்த்து செய்யப்படும் சுவையான ஷீர் குர்மா ரமலான் பண்டிகையின் பாரம்பரிய இனிப்பு வகையாகும். ‘ஷீர்’ என்றால் பாரிசீக மொழியில் பால் என்றும், ‘குர்மா’ என்றால் பேரிச்சம்பழம் என்றும் பொருள் தரும் என்பது கூடுதல் செய்து.

 

எளிமையாக செய்யக்கூடிய மற்றொரு இனிப்பு வகை குலாப் பிர்னி. பால், ஏலக்காய், கும்குமப்பூ, பன்னீர் நீர், பன்னீர் பொடி ஆகியவை சேர்த்து சுவையான குலாப் பிர்னி செய்யலாம்.
 

அனைவருக்கும் இனிய ரமலான் தின நல்வாழ்த்துக்கள்!

 

 

phirni

 

About Sushmita SenguptaSharing a strong penchant for food, Sushmita loves all things good, cheesy and greasy. Her other favourite pastime activities other than discussing food includes, reading, watching movies and binge-watching TV shows.

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement