மாரத்தான் ஓடுபவர்களுக்கான ஆரோக்கிய குறிப்புகள்

Sarika Rana  |  Updated: September 12, 2018 13:54 IST

Reddit
Essential Health And Diet Tips For Marathon Runners

சாதாரண ஓட்டப்பந்தயங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டதுதான் மாரத்தான்.  பயிற்சியின் போது உடலில் இருந்து அதிகப்படியாக வியர்வை வெளியேறும் என்பதனால், உடலில் நீர்ச்சத்து தக்கவைக்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டும்.  மாரத்தான் ஓடுவதற்கு முன், ஓடும்போது, ஓடி முடித்தபின் மற்றும் பயிற்சியின் போது என அதற்கான உணவை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும்.  ஓட்டத்தின் போது அல்லது பயிற்சியின் போது நீங்கள் அயர்ச்சி அடையாமல் இருக்க மாவுச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.  சிக்கன் சாண்ட்விச், பழங்கள், பீனட் பட்டர் போன்றவற்றில் புரதம் மற்றும் கொழுப்பு சத்து நிறைந்திருக்கிறது என்பதால், பயிற்சிக்கு முன் சாப்பிடலாம்.  போதிய அளவு திரவ உணவுகளை எடுத்துக் கொள்வதும் அவசியம்.  மாரத்தான் ஓடுபவர்கள் பின்பற்ற வேண்டிய குறிப்புகளை தெரிந்து கொள்ளுங்கள்.  

2no6bvco

 

மாரத்தான் ஓடுபவர்களுக்கான டயட் மற்றும் ஆரோக்கியக் குறிப்புகள்

  • கலோரிகள் நிறைந்த உணவை மட்டும் தேர்வு செய்து சாப்பிடுங்கள்.
  • ஓடுவதற்கு முன் பட்டினியாகவோ அல்லது அதிகபடியாகவோ சாப்பிடுவதை தவிர்த்து, சரியான கால இடைவெளியில் உணவு எடுத்து கொள்ள வேண்டும். 
  • மூன்று வேளையும் வயறு நிரம்ப சாப்பிடாமல், உணவை ஆறு வேளையாக பிரித்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துக் கொண்டால், இரத்த சர்க்கரை அளவு சீராக இருக்கும். 
  • உங்கள் இரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக வைக்க உடலுக்கு புரதம் நிச்சயம் தேவை.  வொர்க் அவுட் செய்து 20 நிமிடங்கள் கழித்து புரதம் நிறைந்த உணவை கட்டாயமாக சாப்பிட வேண்டும்.  மேலும், பால் மற்றும் பால் பொருட்கள், சாமை, முட்டை, சோயா மற்றும் பார்லி போன்றவற்றை தினசரி சேர்த்து கொள்ள வேண்டும்.  
  • மாரத்தான் அல்லது பயிற்சிக்கு முன் சிறிதளவு ஏதேனும் சாப்பிட வேண்டும்.  இல்லையென்றால், பசியால் சோர்வடைந்து விடுவீர்கள்.  
  • புரதம் எப்படி உடலுக்கு தேவையோ அதேபோல் கார்போஹைட்ரேட்டும் அவசியமான ஒன்று.  கார்போஹைட்ரேட்டை உடல் எரித்து க்ளுக்கோஸாக மாற்றி உடலுக்கு ஆற்றலும், தசைகளுக்கு வலிமையும் தருகிறது.  
  • ஆலிவ் எண்ணெய், விதைகள், கொட்டைகள், சிக்கன் மற்றும் மட்டன் போன்றவற்றில் கொழுப்பு நிறைந்திருக்கிறது.  பயிற்சிக்கு பின் உடலுக்கு தேவையான சத்துக்களை சேமித்து வைக்க இந்த உணவுகள் உதவியாக இருக்கும்.  
  • காய்கறிகள் மற்றும் பழங்களில் வைட்டமின், மினரல் இருப்பதுபோல், அதில் ஆன்டி ஆக்ஸிடென்ட் மற்றும் ஆன்டி இன்ஃப்ளமேட்ரி குணங்களும் உண்டு என்பதால் உடல்நலன் குறைபாடுகள் விரைவில் குணமடையும்.
  • பயிற்சியின் போது வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் இருக்க நார்ச்சத்து நிறைந்த உணவை சேர்த்து கொள்வது அவசியம்.  
n79o9h0g

 

நீங்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்
முட்டை, பாதாம், சர்க்கரைவள்ளி கிழங்கு, முழு தானியங்கள், ஆரஞ்சு, பச்சை காய்கறிகள் மற்றும் கீரைகள், பழங்கள், தயிர், சாலட், பெர்ரீஸ், சிக்கன் மற்றும் மீன் போன்றவற்றில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது.  தினசரி உங்கள் உணவில் இவற்றை சேர்த்துக் கொண்டால் உடலுக்கு தேவையான கலோரிகள் கிடைத்து உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.  மேலும் நிறைய தண்ணீர் குடிப்பதனால் உடலில் உள்ள செல்கள் சிதைவடையாமல் பாதுகாக்கலாம். 

தவிர்க்க வேண்டிய உணவுகள்
வெள்ளை சர்க்கரை, பருப்பு வகைகள், கொழுப்பு அல்லது பதப்படுத்தப்பட்ட உணவுகள், கொழுப்பு நீக்கப்படாத பால், மசாலா உணவுகள் மற்றும் ஸ்போர்ட்ஸ் ட்ரிங்க்ஸ் போன்றவற்றை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.  இந்த உணவுகள் எளிதில் செரிக்காமல் குடல் சம்பந்தமான பிரச்சனைகளை ஏற்படும்.  மாரத்தானில் பங்கேற்பவர்கள் எப்போதும் ஆரோக்கியமான உணவுகளையே எடுத்துக் கொள்ள வேண்டும். 

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Advertisement