ப்ரெட் பக்கோடாவை ஆரோக்கியமாக தயாரிப்பது எப்படி?

உடல் எடை குறைக்க நினைப்பவர்களும் இந்த எண்ணெய் சேர்க்கப்படாத ப்ரெட் பக்கோடாவை செய்து சாப்பிடலாம்.  இதில் கொலஸ்ட்ரால் அளவு துளியும் இல்லை என்பதால் உடல் எடை குறைப்பிற்கு ஏற்ற ஸ்நாக்ஸ். 

Translated by: Kamala Thavanidhi  |  Updated: August 21, 2019 12:09 IST

Reddit
Indian Cooking Tips: Ever Heard Of Oil-Free Bread Pakodas? Here's How You Can Make Them At Home
Highlights
  • ப்ரெட் பக்கோடா அனைவராலும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்று.
  • எண்ணெய் பயன்படுத்தாமல் எளிமையாக தயாரிக்கலாம்.
  • டீப் ப்ரை செய்யப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது.

மாலை நேரத்தில் நம்மில் பெரும்பாலானோர்க்கு சூடாக தேநீர் அல்லது காபி குடிப்பது மிகவும் பிடித்தமான பழக்கமாக இருக்கும்.  மாலை நேரத்தை இன்னும் நிறைவானதாக்க சூடான தேநீருடன் சூடான மற்றும் சுவையான ஸ்நாக்ஸ் வகைகளும் கட்டாயமாக தேவை.  ஆனால் கடைகளில் தயாரிக்கக்கூடிய பலகாரங்களில் எண்ணெய் அதிகமாக இருப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.  வீட்டிலேயே ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் ரெசிபிகளை செய்து சாப்பிடலாம்.  அதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோராலும் விரும்பி சாப்பிடக்கூடிய ப்ரெட் பக்கோடாவை எப்படி ருசியாக செய்யலாம் என்பதை பார்ப்போம்.   டீப் ஃப்ரை செய்து சாப்பிடும் பழக்கத்தை முதலில் கைவிடுங்கள்.  வழக்கமான கடலைமாவு கொண்டு ப்ரெட் பக்கோடாவை தயாரிக்க எளிமையான வழிகள் உங்களுக்காக!!
 

ei0o24g8

 


 

ப்ரெட் பக்கோடா தயாரிப்பு முறை:

* ப்ரெட் பக்கோடா தயாரிப்பதற்கு உங்கள் முதலில் தேவைப்படுவது நாண்-ஸ்டிக் தவா.  வீட்டில் நீங்கள் தோசை தயாரிக்க பயன்படுத்தக்கூடிய தவாவையே பயன்படுத்தலாம்.   

* கடலைமாவு கரைசலை சற்றே நீர் அதிகம் விட்டு கலந்து கொள்ளவும்.  கெட்டியாக கரைக்கும்போது தவாவில் சரியாக வேகவைக்க முடியாமல் மாவு அப்படியே இருக்கும். 

* ப்ரெட்டை உங்கள் விருப்பப்படி எந்த வடிவில் வேண்டுமானாலும் நறுக்கி கொள்ளுங்கள்.  ஒரு மேஜைக்கரண்டி கடலைமாவு கரைசலை எடுத்து ப்ரெட்டின் ஒருபுறத்தின் மேல் தடவி தவாவில் வைக்கவும்.  

* அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, பொன்னிறமாக வரும்வரை வைத்திருந்து எடுக்கவும்.  அதேபோல அதன் மற்றொரு புறத்திலும் செய்ய வேண்டும்.  

* டூத் பிக் கொண்டு ப்ரெட்டின் நடுப்பகுதியில் பல முறை கீறிவிடவும்.  

* தவாவில் நீங்கள் விரும்பினால் ப்ரெட்டை வறுப்பதற்கு முன் ஒரு தேக்கரண்டி எண்ணெய் தடவி கொள்ளலாம். 

உடல் எடை குறைக்க நினைப்பவர்களும் இந்த எண்ணெய் சேர்க்கப்படாத ப்ரெட் பக்கோடாவை செய்து சாப்பிடலாம்.  இதில் கொலஸ்ட்ரால் அளவு துளியும் இல்லை என்பதால் உடல் எடை குறைப்பிற்கு ஏற்ற ஸ்நாக்ஸ்.  நீங்கள் இதே பக்கோடாவை ஏர் ஃப்ரையரிலும் செய்யலாம்.  ப்ரெட்டில் கடலைமாவை தடவி குக்கிங் ட்ரேயில் வைத்து, 5-6 நிமிடங்கள் வரை வைத்திருந்து எடுத்து சாப்பிடலாம்.  

 

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement
 
Listen to the latest songs, only on JioSaavn.com