லோ-கார்ப் டயட்டால் அறிவாற்றல் குறையுமா?

தொடர்ச்சியாக உணவில் கார்போஹைட்ரேட் குறைந்து வந்தால் வயது முதிர்ச்சி மற்றும் அறிவாற்றல் திறன் குறையும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Edited by: Kamala Thavanidhi  |  Updated: May 23, 2019 06:57 IST

Reddit
Beware! Extreme Low-Carb Diets May Speed Up Ageing And Lead To Cognitive Decline

உடல் எடையை குறைத்து, ஆரோக்கியமாக இருக்க நினைப்பவர்கள் தான் லோ-கார்ப் உணவுகளை அதிகம் உட்கொள்கின்றனர்.  உலகம் முழுவதுமே இந்த லோ-கார்ப் உணவுகளின் மேல் உள்ள மோகம் அதிகரித்து விட்டது.  பெண்கள் ஸீரோ சைஸ் உடலுக்கும், ஆண்கள் சிக்ஸ் பேக்கிற்கும் முயற்சி செய்து கொண்டிருப்பதால், இந்த லோ-கார்ப் உணவுகள் பிரபலமடைந்துவிட்டது.  நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் கார்போஹைட்ரேட்டை குறைத்து கொண்டாலே போதும் உடல் எடை தானாக குறையும்.  ஆனால் கார்போஹைட்ரேட்டை குறைப்பதனால் சில உடல் உபாதைகளும், ஊட்டச்சத்து குறைபாடுகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.  சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், தொடர்ச்சியாக உணவில் கார்போஹைட்ரேட் குறைந்து வந்தால் வயது முதிர்ச்சி மற்றும் அறிவாற்றல் திறன் குறையும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.  அதேபோல், லோ-கார்ப் டயட்டால் உடலில் கொழுப்புகள் கரைந்து, இரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக இருக்கும்.  ஆனால், லோ-கார்ப் டயட்டை பின்பற்ற நினைத்தால் சரியான ஆலோசனை பெற வேண்டும்.  அறிவாற்றல் திறனை பரிசோதிக்க, ஆராய்ச்சியாளர்கள் எலிகளை கொண்டு சோதனை செய்தார்கள்.  அதில் சில எலிகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் சமமாக வழங்கப்பட்டது.  மற்ற எலிகளுக்கு கொழுப்புகள் நிறைந்த உணவுகள் வழங்கப்பட்டது.  மேலும் உள்ள எலிகளுக்கு லோ-கார்ப் உணவுடன் புரதம் மிகுதியான உணவுகள் வழங்கப்பட்டது.  இதில் லோ-கார்ப் உணவுகள் உட்கொண்ட எலிகளுக்கு கார்போஹைட்ரேட் 20 சதவிகிதம் மட்டுமே கிடைக்க பெற்றது.  மேலும் அவற்றின் ஆயுள் எட்டு முதல் ஒன்பது வாரங்களாக குறைந்திருந்தது.  ஊட்டச்சத்துக்கள் சமமாக வழங்கப்பட்ட எலிகள் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தன.  மேலும் லோ-கார்ப் உணவுகளை உட்கொண்ட எலிகளின் அறிவாற்றலில் பின்னடைவு ஏற்பட்டிருப்பதும் தெரிய வந்தது.  அத்துடன் அதன் ஆயுட்காலமும் மிகவும் குறைந்துள்ளது.  காரணம், லோ-கார்ப் டயட்டால் குடலில் நன்மை செய்யக்கூடிய பாக்டீரியாக்கள் குறைந்து, கெட்ட பாக்டீரியாக்கள் அதிகரித்திருந்தது.  இந்த ஆய்வறிக்கை, ஜப்பானில் ஆரோக்கியம் குறித்த மாநாடு ஒன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.  ஆக, லோ-கார்ப் உணவுகளை தொடர்ச்சியாக உட்கொள்ளாமல் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை சமமாக உட்கொள்வதே சிறந்தது.  

Listen to the latest songs, only on JioSaavn.com

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement