“என்ன கறி சாப்பிட்டாலும் மீனைப் போல வருமா…”- Foodies இந்த உணவுத் திருவிழாவை மிஸ் பண்ணிடாதீங்க! #FoodReview

இந்திய ரெஸ்டாரென்ட் கலாசாரத்திற்கே உரிய ‘ஸ்டார்ட்டரஸில்’ இருந்து தொடங்கினேன்...

एनडीटीवी  |  Updated: December 20, 2019 16:42 IST

Reddit
Food review about Asia Kitchen by Mainland China

Asia Kitchen (Mainland China) அறிவித்திருந்த உணவுத் திருவிழாவிற்கு ‘கொலப்பசியுடன்’ சென்றிருந்தேன். அங்கு சென்ற பிறகுதான் தெரிந்தது, அது ‘பிரத்யேக கடல் உணவுத் திருவிழா’ என்று. 

‘உணவே திருவிழா' என்று நம் நாட்டில் இருந்த காலமெல்லாம் மலையேறி, உணவகங்கள் வாரம் ஒரு ‘உணவுத் திருவிழாவை' அறிவிக்கும் காலமிது. அதுவும் தீபாவளியில் ஆரம்பிக்கும் ‘ஃபெஸ்டிவ் சீசன்' பொங்கல் முடியும் வரை தொடரும் நேரத்தில்தான் எத்தனை எத்தனை உணவுகளை ரசிக்க முடிகிறது. புரட்டாசி முடிய, புத்தாண்டுப் பிறக்க, பொங்கலுக்கு ஊருக்குச் சென்று கறி சோறு ருசிக்க என வீட்டில் செய்யும் உணவுகளிலேயே வெரைட்டி இருக்கும் இந்த குறுகிய காலத்தில்தான், பல உணவுத் திருவிழாக்களும் அறிவிக்கப்படும். அப்படி, Asia Kitchen (Mainland China) அறிவித்திருந்த உணவுத் திருவிழாவிற்கு ‘கொலப்பசியுடன்' சென்றிருந்தேன். அங்கு சென்ற பிறகுதான் தெரிந்தது, அது ‘பிரத்யேக கடல் உணவுத் திருவிழா' என்று. 

இங்கு நான் வேறொரு இடத்தில் படித்த முக்கியமான செய்தியைச் சொல்ல வேண்டும். புவி வெப்பமாதலினாலும், மாறும் தட்பவெப்பச் சூழல்களினாலும், கடல் சார்ந்த உயிரினங்கள் அருகி வருவதாகவும், 2050 ஆம் ஆண்டுக்குள் நாம் சாப்பிடும் பல கடல் உயிரினங்கள் அழிந்துவிடும் அபாயம் இருப்பதாகவும் சில ஆய்வுகள் சொல்கின்றன என்பதுதான் அது. பொதுவாகவே உணவை வீணாக்கக் கூடாது என்றாலும், இந்த கடல் உணவுத் திருவிழாவில் வேண்டியதை மட்டும் வாங்கிச் சாப்பிட வேண்டும் என்ற பிரக்ஞையோடு படையலை ஆரம்பித்தேன்.

u2morddg

இந்திய ரெஸ்டாரென்ட் கலாசாரத்திற்கே உரிய ‘ஸ்டார்ட்டரஸில்' இருந்து தொடங்கினேன். ஸ்டார்ட்டர்ஸிலேயே எண்டு கார்டு போட்டுவிடக் கூடாது என்று வறுத்த சால்மன், இறால் மோமோஸ், பாம்பே வாத்து வறுவல், பொறித்த கடமா என எல்லாவற்றிலும் ஒரு பிளேட் சாப்பிட்டேன். இறாலும், இந்திய சால்மனும் வாயில் வைத்த மறு கணம் கரைந்து ஓடுவது போல இருந்தது. மீண்டும் அதன் சுவையை நாக்கின் அனைத்து சுவை நரம்புகளும் உணரச் செய்ய நான் எடுத்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன. இரு டிஷ்ஷையும் நாவில் வைக்கும் மறு கணம், சுவையில் மெய் மறப்பது மட்டுமே என்னால் செய்ய முடிந்தது. 

மெயின் டிஷ்ஷுக்கு மெனுவின் பக்கங்களை எடுத்துப் புரட்டினேன். இறால் பிரட்டிய சோறு, கடமா - மீன் போட்ட நூடுல்ஸ் போன்றவற்றை வயிறாறச் சாப்பிட்ட பின்னர், டெசர்டுக்கு வந்தேன். அதிலும் ஒரு புதுமை. பால் மனம் மாறாத வெண்ணிலா ஐஸ் கிரீமுடன் லிச்சி பழங்கள் கொண்ட ஒரு புதுமையான இளைப்பாறும் டிஷ் வைக்கப்பட்டது. லிச்சியின் சுவையை வெண்ணிலாவும், வெண்ணிலாவின் குளிர்ச்சியை லிச்சியும் மாறி மாறி தோற்கடித்துக் கொண்டிருந்தன. கண்ணிமைக்கும் நேரத்தில் டெசார்ட் ‘மாயமானது'.

et38s90g

பொதுவாக அசைவ வகை உணவுகளைச் சாப்பிட்டால், ஒரு ‘உப்பிய' உணர்வு இருக்கும். ஏனென்றால், அதீத மசாலா சேர்க்காமல் சிக்கன் முதல் பீஃப் வரை எதுவும் சுவைக்காது. அந்தக் காரணத்தினாலே அசைவ பிரியாணி முதல், எவ்வகை கிரேவி சாப்பிட்டாலும் ஒரு ‘அன் ஈஸி' உணர்வு தெரியும். ஆனால், மீன் வகை உணவுகளில் அப்படியொரு விஷயத்தை உணர முடியாது. பல பிளேட்டுகளை வாங்கி வாங்கி உள்ளே தள்ளிய பின்னரும் இலகுவான ஓர் உணர்வு. புத்துணர்வூட்டும் சுவை. சிலாகிக்கவைக்கும் வாசம். மீனுக்கு நிகர் எதுவுமல்ல.

-பரத்ராஜ் ர

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement
 
Listen to the latest songs, only on JioSaavn.com