தரமான ‘சாட்’ ஃபுட் சாப்பிடனுமா..? - ‘Kailash Parabat’-தான் உங்களுக்கான முகவரி! #FoodReview

எல்லாமே வட இந்திய ஸ்ட்ரீட் ஃபுட் ஆக இருந்தாலும், அனைத்திலும் ஒரு தனித்துவம் தெரிந்தது.

एनडीटीवी  |  Updated: August 30, 2019 14:32 IST

Reddit
Food review of Kailash Parabat hotel

எந்த வயிற்று உபாதைகளும் நேராமல், சுவையிலும் குறையில்லாமல் ‘ஸ்ட்ரீட் ஃபுட்’-களை சாப்பிட்டால்…

சின்ன வயதில் ரோட்டுக் கடைகளில் கிடைக்கும் கமரக்கட்டு முதல் பானி பூரி வரை வகைவகையாக வாங்கித் தின்றதைக் கொஞ்சம் அசைபோட்டுப் பாருங்கள். ஆதி காலத்தில் நடந்தது போல் இருக்கும் அந்த நினைவுகளின் அனுபவத்தை மீண்டும் நாம் பெறுவதில்லை. வயது ஏற, வசதிகள் கூட, ஆரோக்கியத்தில் கவனம்வர ரோட்டுக் கடை உணவுகளை நாம் குறைத்துக் கொள்வோம். அதையும் மீறி நாக்குச் சப்புக்கொட்டுவதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் என்றைக்காவது யாருக்கும் தெரியாமல் சாப்பிட்டாலும், வயிறு இரவு முழுவதும் தனிக் கச்சேரி செய்துவிடும் கஷ்டத்தை சந்தித்த அனுபவம் பலருக்கு இருக்கும். 

ஆனால், இப்படி எந்த வயிற்று உபாதைகளும் நேராமல், சுவையிலும் குறையில்லாமல் ‘ஸ்ட்ரீட் ஃபுட்'-களை சாப்பிட்டால்… குறிப்பாக வட இந்திய ஸ்ட்ரீட் ஃபுட்களான பானி பூரி, கச்சோரி, சமோசா, பாவ் பஜ்ஜி, சேவ் பூரி, சோலா பூரி, குலோப் ஜாமூன் உள்ளிட்டவற்றை எந்தவித பயமும் இல்லாமல் ருசிக்க நேர்ந்தால்… கண்டிப்பாக நாஸ்டால்ஜியா உணர்வைத் தரும் அல்லவா. அப்படிப்பட்ட நாஸ்டால்ஜியா உண(ர்)வுக்காகவே ‘Kailash Parabat'-க்கு ஒரு முறையாவது சென்று வாருங்கள் என்று சொல்வேன்.

ov2cn9qo

முதலில் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்திக் கொள்வோம். ரோட்டுக் கடைகளில் மிகவும் மலிவான விலைகொண்ட, ருசியை மட்டும் பிரதானப்படுத்தும் உணவுகள்தான் கிடைக்கும். அதனால் இந்த Kailash Parabat-ற்கு சென்றால் மிகவும் அதிக விலையில்தான் உணவு கிடைக்கும் என்று புரிந்துகொள்ள வேண்டாம். முடிந்தவரை நடுத்தர வர்க்கம் சென்று சாப்பிடும் அளவுக்குத்தான் விலைப் பட்டியல் இருக்கின்றன.

முதலில் பானி பூரியுடன் ஆரம்பித்தேன்… வட இந்திய உணவுகளில் எத்தனை வகைகள் வேண்டுமானாலும் இருக்கலாம். அதை எவ்வளவு நேர்த்தியுடனும் செய்திருக்கலாம். ஆனால், பானி பூரிக்கு இணையான வட இந்திய உணவு ஒன்று இருக்க வாய்ப்பேயில்லை. அதனால்தான் என்னவோ, சென்னையில் பானி பூரி கடை இல்லாத தெருவே இல்லை. தொடர்ந்து சேவ் பூரி, தாஹி பூரி, பாவ் பஜ்ஜி உள்ளிட்ட ‘ரெகுலர்ஸை' சாப்பிட்டேன். கச்சோரி, சமோசாக்களை உள்ளே தள்ளி முடிக்கும்போதே, மேங்கோ லஸ்ஸி ஒன்றையும் முடித்தேன். சோலா பட்டூரா, மசாலா பட்டூரா பூரிகளையும் ஒருகை பார்த்தாயிற்று. இந்த தருணத்திலேயே வயிறு போதும் என்றது… மனம் வேண்டும் என்றது…

pgbclrao

எனது ஹோஸ்ட், ‘சார் ஸ்டார்ட்டர்ஸ்தான் முடிச்சிருக்கீங்க… இன்னும் நிறைய இருக்கு' என்றார். பேன்ட்-ஐ லூஸ் செய்து கொண்டு அடுத்த சுற்றுக்குத் தயாரானேன். மெயின் கோர்ஸுக்கு பட்டர் நான், புதினா நான், சப்பாத்தி வகைகளுடன் பனீர் பட்டர் மசாலா, டால் மக்காணி வைக்கப்பட்டது. ‘மூக்கு முட்ற ஆளவுக்கு சாப்பாட வந்திருச்சு' என சொல்லி முடிப்பதற்கு முன்னரே அவர்களின் தனித் தன்மையுடைய குல்ஃபி, குலோப் ஜாமூன் வைக்கப்பட்டது. எவ்வளவு சாப்பிட்டு, வயிற்றை நிரப்பியிருந்தாலும், அந்த குல்ஃபியை சாப்பிட்டுக் கொண்டே இருக்கலாம். அப்படியொரு சுவை… 

எல்லாமே வட இந்திய ஸ்ட்ரீட் ஃபுட் ஆக இருந்தாலும், அனைத்திலும் ஒரு தனித்துவம் தெரிந்தது. அது குறித்து விசாரித்தோம். “இந்த உணவகத்தை நிர்ணயிப்பது சிந்தி கலாசார குடும்பம். அவர்களின் மூதாதையர்கள் அப்போது ஒருங்கிணைந்த பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்தவர்கள். இப்போது பாகிஸ்தானாக அறியப்படும் இடத்தில் வசித்து வந்தார்கள். பிரிவினைக்குப் பிறகு அவர்கள் இந்தியாவுக்கு வந்து செட்டில் ஆனார்கள். பாகிஸ்தானில் இருந்தபோதும் சரி, இந்தியாவுக்கு வந்த பின்னரும் சரி, அவர்கள் தொடர்ந்து பாரம்பரியமாக உணவைச் சமைத்து விற்று வந்தார்கள். தற்போது உலகின் பல்வேறு இடங்களில் கைலாஷ் உணவகங்கள் வந்துவிட்டாலும், அப்போது எப்படி சமைத்தார்களோ அதே மூலப் பொருட்களைக் கொண்டு இன்னும் சமைத்து, பசியாற்றி வருகிறார்கள்” என்று பெரிய விளக்கத்தைக் கொடுத்து முடித்தார். அத்தனை உணவைச் சாப்பிட்ட பின்னரும் இன்னொரு பானி பூரி ப்ளேட் கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது. என்ன சாப்பிடத்தான் வயிறு இல்லை…

gqv2a6j8

-பரத்ராஜ் ர

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement