பச்சை மிளகாய் ஊறுகாய் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா??

கடுகு எண்ணெய், புளி, வினிகர், பச்சை மிளகாய் போன்றவை சேர்த்து இந்த ஊறுகாயை செய்து சாப்பிட்டால் உடல் எடை குறையும்.  ஆரோக்கியமும் ருசியும்,  மணமும் நிறைந்தது.  

Translated by: Kamala Thavanidhi  |  Updated: July 05, 2019 12:19 IST

Reddit
Weight Loss Diet: Forget Oily Pickles! Make This Low-Cal Green Chilli Pickle Instead  
Highlights
  • எண்ணெய் மற்றும் கலோரிகள் குறைந்த ஊறுகாய் இது.
  • கொலஸ்ட்ரால் மற்றும் நீர்ச்சத்து குறைந்த உணவு இது.
  • பச்சை மிளகாய் ஊறுகாய் செய்வது மிகவும் எளிமையானது.

இந்திய உணவுகளுக்கு இணையான உணவுகளும், சமையல் குறிப்புகளும் உலகில் எங்குமே இருக்க முடியாது.  எல்லா உணவுகளுமே சுவையில் மட்டுமல்லாது ஆரோக்கியத்தையும் சார்ந்தே இருக்கும்.  ஊறுகாயில் தொடங்கி இனிப்பு வகை வரை அனைத்திலுமே ஆரோக்கியம் தான் பிரதானமாக இருக்கும்.  சரி, இப்போது ஊறுகாயில் இருந்து தொடங்குவோம்.  பசி நேரத்தில் அவசரத்திற்கு உதவுவது ஊறுகாய்.  சாதம், தோசை, சப்பாத்தி போன்றவற்றிற்கு ஊறுகாய் தொட்டு சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கும் இருக்கும்.  ஊறுகாய் என்றாலே எண்ணெய், மிளகாய் பொடி போன்றவை தான் நினைவிற்கு வரும்.   எண்ணெய் இல்லாத, கலோரிகள் குறைவான ஊறுகாயை ருசியாக எப்படி தயாரிப்பது என்பது குறித்து தான் இப்போது பார்க்க போகிறோம்.  அதுவும் பச்சை மிளகாய் கொண்டு எப்படி ஊறுகாய் செய்வதென்று பார்ப்போம்.  
 

k5ngm26o

நன்மைகள்: 

பச்சை மிளகாயில் நீர்ச்சத்து அதிகம்.  கலோரிகள் குறைவாக இருக்கும் பச்சை மிளகாயை சாப்பிடுவதால் உடல் எடை குறையும் வாய்ப்பு அதிகம்.  இதில் நார்ச்சத்து இருப்பதால் மலச்சிகலை போக்கி செரிமானத்தையும் சீராக்குகிறது.  வைட்டமின் சி மற்றும் பீட்டா கெரட்டின் இருப்பதால் இருதய ஆரோக்கியத்தை பாதுகாத்து, நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.  பச்சை மிளகாயில் கேப்சைசின் இருப்பதால் சளி, இருமலை உண்டாக்கும் நோய் தொற்றில் இருந்து பாதுகாக்கிறது.

கடுகு எண்ணெய், புளி, வினிகர், பச்சை மிளகாய் போன்றவை சேர்த்து இந்த ஊறுகாயை செய்து சாப்பிட்டால் உடல் எடை குறையும்.  ஆரோக்கியமும் ருசியும்,  மணமும் நிறைந்தது.Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய சமையல்

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement