உங்களுடைய உணவை மேலும் சுவையாக்க இந்த மசாலாவை சேர்த்துப் பாருங்கள்!

மசாலா தயாரிக்க தேவையான பொருட்கள் - சீரகம், தனியா, ஓமம் மற்றும் மிளகாய் வத்தல். இந்த ஒவ்வொரு மசாலாவுக்கும் தனிச் சுவை உண்டு. இவை அனைத்துக்கு நிறைய மருத்துவ குணங்களும் உண்டு.  

NDTV Food  |  Updated: March 17, 2020 15:29 IST

Reddit
From Chaas To Chaat, This Roasted Masala Mix Can Spice Up Any Dish You Like (Recipe Inside)
Highlights
  • இந்திய உணவு மசாலாப் பொருட்களுக்கு பெயர் பெற்றது
  • மசாலா வெவ்வேறு வடிவங்களில் பயன்படுத்தப்படுகிறது
  • இந்த மசாலா கலவையை, விரும்பும் எந்த உணவிலும் எளிதாகப் பயன்படுத்தலாம்

இந்திய உணவுகள் மசாலாப் பொருட்களுக்குப் பெயர்பெற்றது.  சாட் மசாலாவின் சுவை, ஷாஹி கரம் மசாலாவின் ராயல்டி, மற்றும் தந்தூரி மசாலாவின் வெப்பம் - பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இந்தியா பல்வேறு வகையான மசாலாப் பொருள்களை உற்பத்தி செய்கிறது மற்றும் அவை காலநிலைக்கு ஏற்ப நாட்டின் பல்வேறு பகுதிகளில் வேறுபடுகின்றன. பல வடிவங்களில் மசாலா பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதாவது, நறுக்கி, வறுத்து, அரைத்து எனப் பல விதங்களில் பயன்படுத்தப்படும். அவற்றின் மாறுபட்ட சமையல் பயன்பாடுகளைத் தவிர, இந்த மசாலாப் பொருட்கள் மருத்துவ பயன்பாட்டிற்கும் உபயோகிக்கப்படுகின்றன. சளி மற்றும் காய்ச்சலுக்கு சிகிச்சையளிப்பதில் இருந்து செரிமானத்திற்கு உதவுவது வரை, ஒவ்வொரு மசாலாவுக்கும் அதன் தனி மருத்துவ குணமுள்ளது. 

வறுத்த மசாலா கலவை செய்முறையை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம், இதைக் குழம்பு, சாஸ் (தயிரில் செய்யப்படும் பானம்), சாட் அல்லது நீங்கள் விரும்பும் எந்த உணவிலும் எளிதாகப் பயன்படுத்தலாம். இதற்குத் தேவையான பொருட்கள் - சீரகம், தனியா, ஓமம் மற்றும் மிளகாய் வத்தல். இந்த ஒவ்வொரு மசாலாவுக்கும் தனிச் சுவை உண்டு. இவை அனைத்துக்கு நிறைய மருத்துவ குணங்களும் உண்டு.  

சீரகத்தின் ஆரோக்கிய நன்மைகள்:

ஜீரா அல்லது சீரகம், ஆண்டி-ஆக்ஸிடண்ட், பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் கிருமி நாசினிகள் போன்ற பண்புகளைக் கொண்டுள்ளது. வீக்கம், மலச்சிக்கல் மற்றும் பிற குடல் தொடர்பான பிரச்னைகளை அகற்ற இந்த மசாலா உதவும். அவை நச்சுத்தன்மைக்கு நல்லது, செரிமானத்தை அதிகரிக்கும் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்துகின்றன.

v0au82ig

தனியாவின் ஆரோக்கிய நன்மைகள்:

தனியா விதைகளில் ஆண்டி-ஆக்ஸிடண்ட் மற்றும் உணவு நார்ச்சத்துக்கள் உள்ளன. அவை கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன மற்றும் குடல் பிரச்னைகளை எளிதாக்குகின்றன என்று அமோல் கோஷ், மருத்துவ ஆசிரியர் (Rtd), N.R.S. ஹோஸ்பியல், கொல்கத்தா கூறுகிறார். இந்த மசாலாவில் உள்ள நார்ச்சத்து நிறைந்த உணவு செரிமானத்திற்கு உதவுகிறது. அவை நார், பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் ஆகியவை நிறைந்துள்ளது.

fg6tvnmo

ஓமத்தின் ஆரோக்கிய நன்மைகள்:

ஓம விதைகளில் வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் ஆண்டி-ஆக்ஸிடண்ட் அதிகம் உள்ளன. இது உடலை நச்சுத்தன்மையடையாமல் தடுப்பது மட்டுமல்லாமல் நல்ல செரிமானத்திற்கும் உதவுகிறது. பெங்களூரைச் சேர்ந்த ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கிய ஆலோசகர் டாக்டர் ஷீலா கிருஷ்ணசாமி கூறுகையில், அதன் வளமான நறுமணம் மற்றும் சிறந்த செரிமான பண்புகள் காரணமாக, ஓமத்தை பொதுவாக மசாலாக்களில் சேர்க்கப்பட்டு, ரோட்டி அல்லது பராத்தாக்களை தயாரிப்பதற்கு முன்பு மாவில் சேர்க்கின்றனர்.

ajwain

மிளகாய் வத்தலில் ஆரோக்கிய நன்மைகள்:

மிளகாய், உங்களுக்குக் காரம் கொடுப்பது மட்டுமின்றி, மூட்டு வலிகளைக் குணமாக்குகிறது, எடை இழப்புக்கு ஊக்குவிக்கிறது, ஒவ்வாமைகளைத் தடுக்கிறது மற்றும் பல.

e0gua8c8

வறுத்த மசாலாவை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?

1. சீரகம், தனியா மற்றும் ஓமம் ஆகியவற்றை 3:2:1 என்ற அளவில் எடுத்துக்கொள்ளவும்

2. காரத்துக்கு ஏற்றவாறு மிளகாய் வத்தலை எடுத்துக்கொள்ளவும்

3. வெறும் கடாயில் அனைத்தையும் வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

4. எல்லா மசாலாவையும் ஒன்று சேர்த்து அரைத்துக்கொள்ளவும். 

வறுத்த கலவையை எவ்வாறு சேமிப்பது:

சிறந்த பகுதி என்னவென்றால், நீங்கள் விரும்பும் எந்த உணவிலும் இதைப் பயன்படுத்தலாம் மற்றும் குறைந்தது ஒரு மாதமாவது சேமித்து வைக்கலாம். மசாலா சேரிக்கும் பாக்ஸை டைட்டாக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

இந்த மசாலாவை, உங்களுக்குப் பிடித்த உணவில் சேர்த்து, உண்டு மகிழுங்கள்.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement
 
Listen to the latest songs, only on JioSaavn.com