உங்கள் உடல் எடையைக் குறைக்க உதவும் 9 பழ வகைகள்

சிறந்த எடை இழப்புத் திட்டத்தில் பழங்களின் மதிப்பை உணர்ந்துகொள்வதற்கு நிபுணர்கள் கூட ஒருபோதும் தவறியதில்லை

Sushmita Sengupta  |  Updated: July 17, 2018 20:08 IST

Reddit
Fruits For Weight Loss: 9 Fruits That Help Cut Belly Fat
Highlights
  • சீரான உணவு மற்றும் வழக்கமான உடற்பயிற்சி எடை இழப்புக்கு உதவுகிறது
  • ஆப்பிள் நார்ச்சத்து, ஃபிளவனாய்டுகள் மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளன
  • கார்னிடைன் என்ற அமினோ அமிலத்தின் உற்பத்தியை தக்காளிகள் ஊக்குவிக்கிறது

உங்கள் வயிற்றை சுற்றியுள்ள அதிகமான சதையைக் குறைக்க சிரமப்படுகிறீர்களா? உணவிலிருந்து ஜிம்மில் பல மணிநேரம் வரை, மக்கள் தங்கள் வயிற்று கொழுப்பை குறைப்பதில் பல வழிகளைப் பின்பற்றுகின்றனர். பசியுடன் இருப்பதால் எடை குறையாது. கடுமையான டயட்களும் சில நேரத்தில் வேலை செய்யாது.

ஒரு சிறந்த எடை இழப்புத் திட்டத்தில் பழங்களின் மதிப்பை உணர்ந்துகொள்வதற்கு நிபுணர்கள் கூட ஒருபோதும் தவறியதில்லை. நீங்கள் அதை ஸ்மூத்தீஸ், சலட்கள், சண்விட்ஸ்களில் சேர்த்துச் சாப்பிடலாம். ஆனால் அதை பச்சையாக ஃபிரெஸாக அப்படியே சப்பிடுவதே எடை இழப்பிற்கு சிறந்த முறையில் உதவும். நீங்கள் இதற்கான காரணத்தைக் கேட்காலாம், ஏன்னென்றால் அதில் அதிகமான ஃபைபர் இருப்பதால் அது எடை இழப்புக்கு உதவுகிறது.

weight gain

உங்களுடைய எடை இழப்பு பயணத்தில் சிறந்த நண்பனாக இருக்கக் கூடிய 9 பழங்கள்

1. பீச்

பீச்கள் டயட்டிற்கான நார்ச்சத்து நிறைந்தவை. ஒரு 100-கிராம் பீச்சில் 1.6 கிராம் ஃபைபர் கொண்டிருக்கிறது. பீச் செரிமானத்தை தாமதப்படுத்துகிறது. ஆரோக்கியமான செரிமானம் எடை குறைப்பைத் தூண்டும் வளர்சிதைமாற்றத்திற்கு  அவசியமானது. ஃபைபர் அதிக நேரம் பசியில்லாமல் இருக்க உதவுகிறது. ஒரு 100 கிராம் பீச்சஸ் 39 கலோரிகளை மட்டுமே கொண்டிருக்கின்றன. இது உங்கள் டயட்டில் சேர்ப்பதற்கான குறைந்த கலோரிக் கொண்ட சிறந்த பழங்களில் ஒன்றாகும்.

peaches 620x350

2. ஆப்பிள்

உணவில் தினமும் ஆப்பிள் எடுத்துக் கொள்வதால் வயிற்றில் சேரும் கொழுப்பு தவிர்க்கப்படுகிறது.ஆப்பிளில் நிறைய நார்சத்து மற்றும் பீட்டாகரோட்டின் இருப்பதால் உடல் எடை குறைய உதவி புரிகிறது. இது அடிக்கடி பசி எடுக்காமல் பார்த்துக் கொள்ளும்.இதிலுள்ள பெக்டின் ஃபைபர், கரையக் கூடிய ஃபைபர் செரிமான மண்டலத்தில் இருந்து நீரை உறிஞ்சி கல்லாக மாற்றுகிறது.செரிமான மண்டலத்தை சீராக வைத்து உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.

apple cider vinegar is good for health

3. தக்காளி

தக்காளியில் உள்ள மூலப்பொருள் அமினோ அமிலம் எனப்படும் கார்னைடைன் உற்பத்திக்கு முக்கிய காரணமாக உள்ளது. இதில் உள்ள ஆர்கானிக் கூறுகள் உடலில் கொழுப்பு சேர்வதைத் தவிர்த்து மெட்டபாலிசம் சிறப்பாக செயல்பட உதவுகிறது. இதனால் வயிற்றுப் பகுதியில் கொழுப்பு சேர்வது தவிர்க்கப்படுகிறது.

blanched tomatoes

4. அன்னாசி பழம்

உடல் எடை குறைப்பதில் அன்னாசிப்பழம் முக்கிய பங்காற்றுகிறது. இதில் நார்ச்சத்து மிகுந்து காணப்படுகிறது. இதில் உள்ள என்சைம் ப்ரோமெலைன்  அழற்சி நீக்கி பண்பை கொண்டது.இதனால் உடலில் புரத வளர்ச்சிதை மாற்றத்தை கவனித்துக் கொள்கிறது. எனவே வயிற்றுப் பகுதி மற்றும் உடலில் சேரும் கொழுப்பை தவிர்க்கிறது.

pineapple

5. ஸ்ட்ராபெரி

ஸ்ட்ராபெரியில் உள்ள அதிக பைபர் உடலில் கொழுப்பு சேர்வதை தவிர்க்கலாம். இது செரிமானத்தை சீராக வைப்பதுடன் டைப் 2 நீரிழிவு நோய் வராமலும் தடுக்கிறது. இதில் உள்ள நார்ச்சத்து உடலுக்கு தேவையான அளவு சர்க்கரையை உறிஞ்சிக் கொள்கிறது. எனவே உடலில் கெட்ட கொழுப்பு சேராமல் பார்த்துக் கொள்வதால் எடை அதிகரிக்காது. சுவையான ஸ்ட்ராபெர்ரி ஸ்மூத்தீ செய்து உடல் எடையை குறைத்து கொள்ளலாம்.

strawberries

6. தர்பூசணி

தர்பூசணி பழத்தில் 96% நீர் சத்து மட்டுமே உள்ளது. உணவில் தர்பூசணியில் அதிகம் நீர் சத்து உள்ளதால் உடலில் உள்ள தேவையற்ற கலோரியை எரித்து விடுகிறது  தர்பூசணி பழத்தை தினமும் சாப்பிட்டால் வயிற்றுக் கொழுப்புக்கு பை பை  சொல்லாம்.

watermelon
 

7. அவகேடோ

அவகேடோவில் உள்ள நார்ச்சத்து அடிக்கடி பசி எடுக்காமல் இருக்க உதவுகிறது. இதிலுள்ள ஃபேட்டி ஆசிட் இதற்கு ஆரோக்கியமானதாகும். குறைந்த கார்போஹைட்ரேட் உள்ள பொருட்களை எடுத்துக்கொண்டால் இது அதனை குளுக்கோசாக மாற்றி உடலின் எரிசக்திக்கு பயன்படும். கெட்டோஜெனிக் டயட்டில் முக்கிய கூறான கிளைக்கோஜனை நிலையாக வைத்து சீராக செயல்படும். இதனால் குடலில் உள்ள கொழுப்புகள் எரிக்கப்பட்டு ஆற்றலாக மாறுகிறது.

avocados

8. ஆரஞ்சு பழம்

ஆரஞ்சு பழம் கொழுப்பு இல்லாத பழமாகும் இதில் மிகக் குறைந்த கலோரிகளே உள்ளது இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் உடல் எடையை குறைக்க உதவுகிறது. இதிலுள்ள நார்சத்து முழுமையாக கிடைக்க ஒரு ஆரஞ்சு பழத்தை முழுமையாக சாறு பிழிந்து எடுத்துக்கொள்ளலாம்.

Listen to the latest songs, only on JioSaavn.com

oranges

9. கிவி

கிவி உடல் செரிமானத்தில் சிறந்த பங்காற்றுகிறது. இதிலுள்ள actinidian என்ற அமிலம் புரதத்தை செரிக்கச் செய்கிறது. இதனால் சீரான செரிமானம் நடைபெறுகிறது. இதனால் குடல் சார்ந்த எரிச்சல் மற்றும் உபாதைகள் தவிர்க்கப்படுகிறது.புரதம் சரியான முறையில் செரிமானமாகவில்லை என்றால் பல உடல் உபாதைகளை உண்டாக்கும். செரிமானம் சீராக இருக்காது. மோசமான செரிமானம் என்பது உணவிலிருந்து ஊட்டச்சத்துக்கள் உகந்ததாக பயன்படுத்தப்படுவதில்லை என்று அர்த்தம், இது நமது உடலின் வளர்சிதை மாற்றத்தை கடுமையாக பாதிக்கும்.

Comments

2nvvdr7g


About Sushmita SenguptaSharing a strong penchant for food, Sushmita loves all things good, cheesy and greasy. Her other favourite pastime activities other than discussing food includes, reading, watching movies and binge-watching TV shows.

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement