உடல் எடையை குறைக்கும் 6 பழங்கள்

உடல் எடையை குறைப்பது தான் இங்கு பலருக்கும் சவாலான விஷயமாக இருக்கிறது

एनडीटीवी फूड  |  Updated: September 10, 2018 15:16 IST

Reddit
Fruits For Weight Loss: Top 6 Low-Carb Fruits To Include In Your Diet

உடல் எடையை குறைப்பது தான் இங்கு பலருக்கும் சவாலான விஷயமாக இருக்கிறது.  நாம் உண்ணும் உணவில் அதிகளவு புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்தும் அதேசமயம் கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் குறைந்தும் இருக்க வேண்டும்.  அப்படியான உணவுகளை தேர்ந்தெடுத்து உண்பதால் மட்டும் உடல் எடை குறைப்பு சாத்தியப்படுகிறது.  பழங்கள் இயற்கை நமக்கு அளித்த வரப்பிரசாதம்.  இதில் நம் உடலுக்கு தேவையான வைட்டமின், தாதுக்கள், கொழுப்பு, சர்க்கரை, புரதம், நார்ச்சத்து மற்றும் ஆண்டிஆக்ஸிடண்ட் நிறைந்துள்ளது.  இதனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவும் சீராக இருக்கும்.  அப்படி உடலுக்கு தேவையான சத்துக்களை கொடுத்து கூடவே உடல் எடையை குறைக்கக்கூடிய பழங்கள் என்னவென்று பார்ப்போம்


1. ஸ்ட்ராபெர்ரீஸ்

உடல் எடை குறைப்பில் ஸ்ட்ராபெர்ரி பழத்திற்கு முக்கிய பங்குண்டு.  இதில் மிக குறைந்த அளவே கார்போஹைட்ரேட் உள்ளது.  ஆனால் ப்ளூபெர்ரியில் அதிகளவு கார்போஹைட்ரேட் உள்ளது.  இவை இரண்டிலுமே அதிகபடியான ஆண்டிஆக்ஸிடண்ட் உள்ளதால், தினசரி சாப்பிட்டு வரலாம்.   மேலும் இதில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் உடல் எடையை குறைக்க உதவும்.  100 கிராம் ஸ்ட்ராபெர்ரியில் 8 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளதாக ஐக்கிய நாடுகளின் வேளான் நிறுவனம் தகவல் அளித்துள்ளது.

strawberries

2. தர்பூசணி

உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும் தன்மை தர்பூசணிக்கு உண்டு.  உடலுக்கு தேவையான வைட்டமின்கள், ஆண்டிஆக்ஸிடண்டுகள் மற்றும் அதிகபடியான நீர்ச்சத்தும் அதிகம் உள்ளதால் உடல் எடை குறைப்பில் நல்ல பலனை தருகிறது.  

watermelon

3. பீச்சஸ்

நீர்ச்சத்து நிறைந்திருக்கும் இதில் கார்போஹைட்ரேட் குறைவாக இருக்கிறது.  இந்த பழம் குடலை சுத்தம் செய்யும் தன்மை கொண்டது. மேலும் இதில் ஃபினோலிக் அமிலம் இருப்பதால் தொப்பையை கரைக்க உதவுகிறது.  இதில் கேட்டேசின் ( Catechins) மற்றும் ப்ளேவோனால் (Flavonols) போன்ற சத்துக்கள் நிறைந்திருக்கிறது என்பதால் தினமும் கூட சாப்பிடலாம்.

peaches

4. ப்ளாக்பெர்ரி

ப்ளாக்பெர்ரிகள் ஜாம், கேக் மற்றும் டெசர்ட்ஸ் போன்றவற்றில் அதிகம் சேர்க்கப்படுகிறது.  இதில் நார்ச்சத்து மற்றும் விட்டமின் சி உள்ளதால் செரிமான பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கிறது.  100 கிராம் பழத்தில் 10 கிராம் கார்போஹைட்ரேட் மட்டுமே இருக்கிறது என்பதால் தினமும் சாப்பிடலாம்

blackberries

5. முலாம்பழம்

Listen to the latest songs, only on JioSaavn.com

முலாம்பழத்தில் 95 சதவிகிதம் நீர்ச்சத்தும், உடலுக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது.  உடலுக்கு குளிர்ச்சி அளிக்கிறது.  மேலும் சிறுநீரகத்தை சுத்தப்படுத்துகிறது.  இதில் நார்ச்சத்து அதிகம் என்பதால் செரிமானத்தை தூண்டி மலச்சிக்கலை சரி செய்யும்.  மேலும் இதில் சர்க்கரையின் அளவு குறைவு என்பதால் உடல் எடையை குறைக்க ஏற்ற பழம்.  

muskmelon
 
6. அவகேடோ
 
இதில் நல்ல கொழுப்புகள், மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் கே1, வைட்டமின் பி6 போன்ற உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்திருக்கிறது.  இதனை அப்படியே சாப்பிடுவதை விட மில்க் ஷேக் அல்லது ஜூஸ் போட்டு குடித்து வரலாம்.  இது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளின் அளவை குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும்.  மேலும் இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் உடல் எடையைக் குறைக்க உதவும்.  இதிலுள்ள கொழுப்பு சத்து இதயத்திற்கும் சருமத்திற்கும் மிகவும் நல்லது. 
avocado

சரியான உணவு, உடற்பயிற்சி மற்றும் உறக்கம் இருந்தால் தான் உடல் எடையை கூட்டவும் குறைக்கவும் முடியும்.  மற்றொருபுறம் உடல் எடையை குறைக்கக்கூடிய பழங்களை இயற்கையே நமக்கு அளித்துள்ளது.  இந்த பழங்களை தினசரி உணவில் சேர்த்து கொண்டு ஸ்லிம்மான உடலை பெற வாழ்த்துக்கள்!

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement