ப்ளம் டார்ட் ரெசிபியை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?

இதில் ஆண்டிஆக்ஸிடண்ட் நிறைந்திருப்பதால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றப்பட்டு, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

Edited by: Kamala Thavanidhi  |  Updated: September 16, 2019 12:53 IST

Reddit
Love Fruity Tarts? Make Plum Tart At Home With This Recipe Video
Highlights
  • ப்ளம்ஸில் நார்ச்சத்து மிகுதியாக இருக்கிறது.
  • உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
  • வீட்டிலேயே செய்ய எளிமையான டெசர்ட் ரெசிபி.

டெசர்ட் வகைகளை விரும்பாதவர்கள் யாருமே கிடையாது.  கலர்ஃபுல்லான மற்றும் பழங்களின் சுவை நிறைந்த டெசர்ட் ரெசிபிகளை வீட்டிலேயே சுவையாக தயாரிக்கலாம்.  பழங்கள் கொண்டு டார்ட் ரெசிபியை தயாரிக்கலாம்.  வீட்டிலேயே ப்ளம் டார்ட் ரெசிபியை எப்படி தயாரிக்கலாம் என்று பார்ப்போம்.  ப்ளம்ஸ், நட்ஸ் மற்றும் வெண்ணெய் சேர்த்து செய்யப்படும் இந்த சுவையான ரெசிபி கலர்ஃபுல்லாக இருக்கும்.  இதில் ஆண்டிஆக்ஸிடண்ட் நிறைந்திருப்பதால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றப்பட்டு, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.  மேலும் நாட்பட்ட நோய்கள் குணமாகிறது.  செரிமானத்தை எளிமையாக்கி, சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும்.  

தேவையான பொருட்கள்: 
முழுகோதுமை - 110 கிராம் 
பாதாம் - 40 கிராம் 
பேக்கிங் சோடா - 1/4 தேக்கரண்டி 
பேக்கிங் பவுடர் - 1/2 தேக்கரண்டி 
உப்பு - ஒரு சிட்டிகை 
நாட்டு சர்க்கரை - 30 கிராம் 
நெய் - 50 கிராம் 
ஆப்பிள் சிடர் வினிகர் - 1 மேஜைக்கரண்டி 
கிரீக் யோகர்ட் - 1 மேஜைக்கரண்டி 

ப்ளம் ஃபில்லிங் தயாரிக்க: 
ப்ளம்ஸ் - 250 கிராம் 
சர்க்கரை - 2 மேஜைக்கரண்டி 
எலுமிச்சை தோல் - சிறிதளவு
மைதா - 75 கிராம் 
ஓட்ஸ் - 40 கிராம் 
நாட்டு சர்க்கரை - 100 கிராம் 
வெண்ணெய் - 100 கிராம் 
 

செய்முறை: 
முதலில் ஒரு பௌலில் முழுகோதுமை, பாதாம் மீல், பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர், உப்பு, நாட்டு சர்க்கரை, நெய், ஆப்பிள் சிடர் வினிகர் மற்றும் கிரீக் யோகர்ட் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.  பின் அதனை சிறு கண்ணாடி கப்களில் போட்டு மைக்ரோவேவ் அவனில் 15 நிமிடங்கள் வைத்து எடுக்கவும்.  
பின் ப்ளம்ஸை வெட்டி வைத்து கொள்ளவும்.  மற்றுமொரு பௌலில் மைதா, சர்க்கரை, ஓட்ஸ், நாட்டு சர்க்கரை, வெண்ணெய் ஆகியவை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.  
மீண்டும் அந்த கண்ணாடி கப்களில் ப்ளம்ஸ் வைத்து அதன் மேல் கலந்து வைத்துள்ள கலவையை மேலே சேர்த்து மீண்டும் அரை மணி நேரம் வைத்து எடுத்து பரிமாறவும்.  இதன் ருசி இனிமையானதாக இருக்கும்.  
 Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement
 
Listen to the latest songs, only on JioSaavn.com