இனி டீ பேக்கில் ஸ்டேபிலர் பின்னை பயன்படுத்தக்கூடாது - உணவு பாதுகாப்பு அமைப்பு விதித்தது தடை

டீ பேக்கை ஸ்டேபில் பின் இல்லாமல் பேக் செய்வதற்கான இயந்திரங்கள் உலகமெங்கும் மிகக் குறைவான உற்பத்தியாளர்களிடம் மட்டுமே உள்ளது.

   |  Updated: February 02, 2019 17:37 IST

Reddit
FSSAI Bans Use Of Staple Pins In Tea Bags From June 30; Rules Out Possibility Of Extension
Highlights
  • அந்த டீ பேக் பிரிந்து விடாமல் இருக்க ஸ்டேபில் பின் பயன்படுத்தப்படுகிறது.
  • ஜீன் 30க்குள் தடை செய்யப்பட வேண்டும்
  • ஸ்டேபில் பின்னும் தேநீருக்குள் விழுந்துவிடும் அபாயம் உள்ளது

இந்தியாவின் டீ இன்றி எந்த வீட்டிலும் விடியல் என்பதை இல்லை என்று சொல்லலாம் அந்த அளவிற்கு டீ என்பது அனைவருக்குமான ஒன்றாக இருக்கிறது. மக்கள் அனைவரும் குடிக்கும் தேநீர் பேக் பொதுஇடங்களான ரயில் உட்பட அனைத்து இடங்களிலும் விற்கப்படுகிறது. அந்த டீ பேக் பிரிந்து விடாமல் இருக்க ஸ்டேபில் பின் பயன்படுத்தப்படுகிறது. இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயிக்கும் அமைப்பு (FSSAI) மனித உயிருக்கு அச்சுறுத்தாலான இந்த ஸ்டெபில் பின்னை இனி பயன்படுத்தக்கூடாதென கூறியுள்ளது. ஜீன் 30க்குள் இது தடை செய்யப்படுமென உணவுத் தயாரிப்பு அமைப்பினர்களிடம் அறிவித்துள்ளது. 
 

Listen to the latest songs, only on JioSaavn.com

8s1vu488

 

உணவுத் தயாரிப்பு அமைப்பினர்கள் தயாரிப்பு செலவைக் குறைப்பதற்காகவே டீ பேக்கில் ஸ்டேபில் பின் வைத்து டீ பேக்கை தயாரித்து வந்தனர். சில நேரங்களில் டீ பேக் மொத்தமாக துவண்டு விழும் நேரத்தில் ஸ்டேபில் பின்னும் தேநீருக்குள் விழுந்துவிடும் அபாயம் இருப்பதால் இந்த ஆண்டின் தொடக்கத்திலே இதற்கான அறிவிப்பை செய்துவிட்டது. டீ பேக்கை ஸ்டேபில் பின் இல்லாமல் பேக் செய்வதற்கான இயந்திரங்கள் உலகமெங்கும் மிகக் குறைவான உற்பத்தியாளர்களிடம் மட்டுமே உள்ளது. இந்த அறிவிப்புக்கான காலக்கெடு இன்னும் கூடுதலாக வழங்கப்படலாம் என்று தெரிகிறது. டீ பேக் உற்பத்தியாளர்கள் புதிய இயந்திரங்கள் வாங்க அல்லது அதற்கு தேவையான மாற்றங்களை செய்ய வேண்டும். இதனால் இந்த முடிவுக்கான காலக்கெடு இன்னும் கூடுதலாக நீட்டிக்கப் படலாம். மெட்டலில் ஸ்டேபில் பின்னை உட்கொண்டால் ஈறுகளில் இரத்தக் கசிவோ அல்லது உடலுக்குள் இரத்தக் கசிவோ ஏற்பட வாய்ப்புகள் உண்டு

Commentsஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement