உணவகங்களில் ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்த தடை

இந்த சட்டம் மார்ச் 1, 2019 முதல் நடைமுறைக்கு வரும். 

एनडीटीवी फूड  |  Updated: February 15, 2019 12:08 IST

Reddit
FSSAI Set To Take Action Against Re-Use Of Cooking Oil By Restaurants
Highlights
  • சமையல் எண்ணெய்யை 3 முறைக்கு மேல் பயன்படுத்தக் கூடாது
  • பழைய எண்ணெய்யுடன் மீண்டும் புதிய எண்ணெய்யை சேர்க்கவும் எச்சரிக்கை
  • இந்த விதி மார்ச் 1, 2019 முதல் நடைமுறைக்கு வரும்.

சுகாதார வல்லுநர்கள் பலரும் ஒரு முறை பயன்படுத்திய சமையல் எண்ணெய்யை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதால் ஏற்படும் அபாயங்கள் குறித்து தொடர்ந்து பேசி வருகின்றனர். ஆனால், உணவகங்களில் பழைய எண்ணெய்யை வெளியேற்றுவது குறித்த விதிமுறை முறையாக பின்பற்றப்படுகிறதா என்பது கேள்விக்குறியே. இந்நிலையில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுபாடு அமைப்பு உணவகத் தொழில் நடத்துபவர்களுக்கு சமையல் எண்ணெய்யை 3 முறைக்கு மேல் பயன்படுத்தக் கூடாது என்று விதிமுறை விதித்துள்ளது. இந்த விதிமுறை தினமும் 50 லிட்டர் எண்ணெய் வரை பயன்படுத்தும் உணவகங்களுக்கு மட்டுமே இது பொருந்தும்.

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுபாடு வெளியிட்டுள்ள ஆணைப்படி உணவுப் பொருளினை வறுக்கப் பயன்படுத்தும் எண்ணெய் மாற்றப்படுவது குறித்து முறையாக குறிப்புகள் நோட்டில் எழுதி ஆவணமாக அதை தொடர்ந்து வைத்திருக்க வேண்டும். புதியதாக மாற்றப்பட்ட எண்ணெய்  3 முறை பயன்பாடுகளுக்குப் பின் முறையாக வெளியேற்றப்பட வேண்டும். பின் அதையும் ஆவணக் குறிப்பில் குறிப்பிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. இந்த சட்டம் மார்ச் 1, 2019 முதல் நடைமுறைக்கு வரும்.  ஏற்கனவே பயன்படுத்திய எண்ணெய்யுடன் மீண்டும் புதிய எண்ணெய்யை சேர்க்கவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மீறினால் சட்டப்பிரிவு16(5) கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். 

ஆணையில் “சமையல் எண்ணெய்யை திரும்ப திரும்ப பயன்படுத்துவதால் அதில் சமைக்கப்படும் உணவு பொருட்களின் ஊட்டச்சத்து பண்புகளை மாற்ற வழிவகுக்கிறது. உணவு பாதுகாப்பு மற்றும் தர நிலைகள் முதல் திருத்தம் ஒழுங்குமுறை, 20170ன் படி மொத்தம் 25 சதவிகிதத்தை விட போலார் சேர்மங்கள் அதிகரித்தால் வெஜிடபிள் ஆயில் பயன்பாட்டிற்கு தகுதியற்றதாகிவிடும் என்று தெரிவித்துள்ளது.

 வீட்டிலும் சமைத்த எண்ணெய்யை 2 முறைக்கு மேல் பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். 

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement
 
Listen to the latest songs, only on JioSaavn.com