உணவுக் கலப்படம் குறித்த போலி வீடியோக்களுக்கு எதிராக நடவடிக்கை - இந்திய உணவு பாதுகாப்பு அமைப்பு

பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் முட்டை என்று தவறான செய்திகள் வீடியோவாக சமூக ஊடகங்களில் வெகுவாக பரவியது.

   |  Updated: January 23, 2019 14:16 IST

Reddit
FSSAI Takes Action Against 'Fake Videos' And News On Food Safety In India
Highlights
  • பிளாஸ்டிக் அரிசி, முட்டை ஆகிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது
  • இந்திய உணவு பாதுகாப்பு அமைப்பு இதை தவறான செய்தி என்று கூறியுள்ளது
  • தவறான செய்தியினால் மக்களுக்கு உணவு பொருட்கள் மீதான நம்பிக்கை குறைகிறது

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை அதிகார அமைப்பு (FSSAI ) இந்தியாவில் உணவு பாதுகாப்பு குறித்து வெளியாகும்  போலி வீடியோ மற்றும் பொறுப்பற்ற அறிக்கைகளை பற்றி கவலை தெரிவித்துள்ளது.  அரசாங்க அமைப்பு இதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. சமூக ஊடகங்களில் உணவு பாதுகாப்பை கேள்விகுறியாக்கும் வகையில் தவறான வீடியோக்கள் பல உலவி வருகின்றன. 

FSSAI  அமைப்பு NDTV Food உடன் இது குறித்து சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டது. “பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் முட்டை என்று தவறான செய்திகள் வீடியோவாக சமூக ஊடகங்களில் வெகுவாக பரவியது. கடந்த சில மாதங்களுக்கு முன் மெலமைன் (melamine) என்ற கலவையை அதிகளவில் பால் பொருட்களில் கலப்பது போன்ற வீடியோவும் வெளியானது. இந்த வீடியோக்கள் அனைத்தும் அடிப்படையே இல்லாத தவறான செய்தி” என்று கூறியுள்ளது. 

Listen to the latest songs, only on JioSaavn.com

jhr7811
 

இந்திய உணவு பாதுகாப்பு நிறுவனம் குறிப்பிட்ட அளவில் மெலமைன் என்ற பொருளை குறிப்பிட்ட அளவில் சேர்க்க அனுமதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இது குறித்து அமைப்பின்  சிஇஓ பவன் அகர்வால், “இந்த செய்திகள் பொதுமக்களின் மத்தியில் பெரும் பயத்தை உருவாக்குகிறது. நம் நாட்டு உணவு தரத்தின் மீது நம்பிக்கையின்மையை அதிகரிக்கும்” என்று தெரிவித்தார். மேலும், இந்த அமைப்பு மின்னனும் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திடம் இத்தகைய போலிய செய்திகளை கண்காணித்து பரப்புகிறவர்களை தண்டிக்க  வலியுறுத்தியுள்ளது. சமூக வலைதளங்களான கூகுள், ஃபேஸ்புக், மற்றும் ட்விட்டர் ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் இது குறித்து பேசி தீர்வுகாணப் போவதாகவும் தெரிவித்துள்ளது. பல ஊடக அறிக்கைகள் மற்றும் கணக்கெடுப்புகள் இந்தியாவில் பால் நுகர்வு பாதுகாப்பற்றது என்ற வகையில் பிரசாரம் செய்து வருகிறது. இது பொது சுகாதார மற்றும் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றும் அகர்வால் தெரிவித்தார். 

Commentsஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement