டிவி பார்த்துக் கொண்டே சாப்பிட்டால், சாப்பிட்ட உணர்வே இருக்காததற்கு என்ன காரணம்? இதோ சுவாரசியமான உண்மை!

சசக்ஸ் பல்கலைக்கழகம் சார்பில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், 120 பேர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.

  |  Updated: August 19, 2020 12:52 IST

Reddit
Why Do We Overeat While Watching TV? Here's What Experts Say

உணவருந்தும் போது செல்போனை உபயோகித்துக் கொண்டோ, டிவி பார்ப்பதோ கூடாது

நம்மில் பலர் டிவி பார்க்கும் போதோ, வீடியோ கேம்கள் விளையாடும் போதோ ஸ்நாக்ஸ், பாப்கார்ன் சாப்பிடுவோம்.  இவ்வாறு டிவி பார்த்துக்கொண்டே சாப்பிடும் போது, சாப்பிட்டதே தெரியாது. கிண்ணத்தில் இருந்த ஸ்நாக்ஸ் வகைகள் சட்டென்று காலியாகிவிடும். அதே சமயத்தில், சாப்பிட்டதற்கான, பசி அடங்கியதற்கான எந்த உணர்வும் நமக்கு இருப்பதில்லை. இதற்குப் பின்னனியில் சுவாரசியமான அறிவியல் காரணங்களும் உள்ளது.

சசக்ஸ் பல்கலைக்கழகம் சார்பில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், 120 பேர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு  சில டாஸ்க்குகள் டிவி பார்ப்பது, வேறு சில வேலைகளை செய்வது போன்றவை கொடுக்கப்பட்டன. அவர்கள் அந்தக் குறிப்பிட்ட வேலையைச் செய்யும் போதே குறைந்த மற்றும் அதிக கலோரிகள் நிறைந்த உணவுகளும், பானங்களும் வழங்கப்பட்டன.

இந்த ஆய்வின் இறுதியில் பலருக்கும் ஆச்சரியப்படத்தக்க முடிவுகள் தெரியவந்தன. அதாவது, வேறொரு வேலையில் கவனம் செலுத்தியவர்கள், தாங்கள் என்ன சாப்பிட்டோம், சாப்பிட்டு முடித்ததற்கான உணர்வுகளே எங்களுக்குத் தெரியவில்லை என்றனர்.  

அதேபோல், கவனம் குறைவாக செலுத்தப்பட வேண்டிய டாஸ்குகளில் ஈடுபட்டவர்களுக்கு, தாங்கள் சாப்பிட்ட விஷயங்கள் ஓரளவு உணர்வில் இருந்ததாக தெரிவித்தனர். சுவாரசியமான இந்த ஆய்வு முடிவுகள் அப்பிடைட் (Appetite) என்ற இதழில் வெளியாகியுள்ளன.

அதன்படி, நாம் முழு கவனத்துடன் ஒரு விஷயத்தில் இருக்கும் போது, வழக்கமாக சாப்பிடுவது போல் சாப்பிட்டாலும், குறைவாக சாப்பிட்டது போல உணர்வு தான் ஏற்படும்.  இந்த விஷயம் சுவாரசியமாக பொழுபோக்காக தெரிந்தாலும் கூட, இது ஆரோக்கியத்திற்கு முக்கியமானது ஆகும். 

எனவே, உணவருந்தும் போது செல்போனை உபயோகித்துக் கொண்டோ, டிவி பார்ப்பதோ கூடாது. சாப்பிடும் போது முழு கவனமும் நம் உணவில் தான் இருக்க வேண்டும். 

Listen to the latest songs, only on JioSaavn.com

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement