விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: ருசித்து மகிழ வகை வகையான கொழுக்கட்டை

ஒரே விதமான கொழுக்கட்டையை ருசித்தவர்கள் கொஞ்சம் வித்தியாச சுவையில் ருசிக்க ஸ்பெஷல் கொழுக்கட்டை ரெசிப்பி

NDTV Food  |  Updated: September 12, 2018 23:05 IST

Reddit
Ganesh Chathurthi Special: Different Puddings that can be made in home

கொழுக்கட்டை இல்லாத விநாயகர் சதுர்த்தியா என்கிற அளவுக்கு, அத்தனை பிரசித்திப் பெற்றது கொழுக்கட்டை. எப்போதும் போல ஒரே விதமான கொழுக்கட்டையை ருசித்தவர்கள் கொஞ்சம் வித்தியாச சுவையில் ருசிக்க ஸ்பெஷல் கொழுக்கட்டை ரெசிப்பியைத் தருகிறார் கோவையைச் சேர்ந்த லதா.

ராகி - பாசிப்பருப்பு கொழுக்கட்டை

தயாரிப்பு நேரம்: 10 நிமிடம்

சமைக்கும் நேரம்: 15 நிமிடம்

சர்விங்: 3

தேவையானப் பொருட்கள்

 • ராகி மாவு – 1 கப்
 • பாசிப்பருப்பு – ¼ கப்
 • துருவிய தேங்காய் – ¼ கப்
 • ஏலக்காய் பொடித்தது – தேவைக்கேற்ப
 • வெல்லம் – ½ (அ) ¾ கப்
 • எள் - விரும்பினால்

செய்முறை

 1. பாசிப்பருப்பை அரை மணிநேரம் ஊற வைக்கவும். தண்ணீரை முழுவதுமாக வடித்து நன்கு உலர்த்தி தனியே எடுத்து வைக்கவும்.
 2. ராகி மாவை சலித்து கொள்ளவும். ஊற வைத்து உலர்த்திய பாசிப்பருப்பையும், சலித்து வைத்துள்ள ராகி மாவையும் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
 3. பாசிப்பருப்பில் இருக்கக்கூடிய ஈரப்பதத்தினால் ராகி மாவும் சற்று ஈரமாகியிருக்கும். இந்த மாவை இட்லி பானையில் வைத்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
 4. வெல்லத்தை உடைத்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சி ஆற விடவும். பின் அதனை வடிக்கட்டி அத்துடன் ஏலக்காய் பொடி மற்றும் துருவிய தேங்காயை சேர்த்து கிளரவும்.
 5. இப்போது வேக வைக்கப்பட்ட மாவை கையால் உதிர்த்து, வெள்ளப்பாகுடன் சேர்க்கவும். எல்லாவற்றையும் நன்கு கிளறி சிறுசிறு உருண்டைகளாகப் பிடித்து வைத்தால் ராகி பாசிப்பருப்பு கொழுக்கட்டை தயார்.

குதிரைவாலி கொழுக்கட்டை

விநாயகர் சதுர்த்தி என்றாலே கொழுக்கட்டை தான் ஞாபகத்திற்கு வரும். ஆண்டாண்டு காலமாக ஒரே ருசியில் கொழுக்கட்டை சாப்பிட்டு வந்த நமக்கு வித்தியாசமான மற்றும் ருசியான கொழுக்கட்டை செய்வது எப்படி என்று சொல்கிறார் கோவையை சேர்ந்த லதா.

தயாரிப்பு நேரம்: 10 நிமிடம்

சமைக்கும் நேரம்: 10 நிமிடம்

சர்விங்: 3

Listen to the latest songs, only on JioSaavn.com

தேவையான பொருட்கள்

 • குதிரைவாலி – 1 கப்
 • துருவிய தேங்காய் – ¼ கப்
 • கொத்தமல்லி இலை – 1 கப்
 • கடுகு – 1 தேக்கரண்டி
 • உளுந்து – 1 தேக்கரண்டி
 • பெருங்காயம் – சிறிதளவு
 • காய்ந்த மிளகாய் – 2
 • உப்பு – தேவைக்கேற்ப
 • தண்ணீர் – தேவைக்கேற்ப
 • எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை

Comments

 1. முதலில் குதிரைவாலியை நன்கு கழுவி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
 2. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம் ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.
 3. பின் அதில் 1:3 விகிதத்தில் தண்ணீர் ஊற்றி அதில் குதிரைவாலி மற்றும் உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் வைத்து இறக்கவும்.
 4. மிக்ஸியில் கொத்தமல்லி இலையை போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
 5. பாதி வெந்த நிலையில் இருக்கும் குதிரைவாலியுடன் அரைத்து வைத்துள்ள கொத்தமல்லி மற்றும் துருவிய தேங்காயை சேர்த்துக் கிளறி, கையால் சிறுசிறு உருண்டைகளாகப் பிடித்து இட்லி பானையில் வைத்து ஆவியில் வேக வைத்து இறக்கினால் கொத்தமல்லி வாசனையுடன் கூடிய குதிரைவாலி கொழுக்கட்டை ரெடி.


உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய சமையல்

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement