இஞ்சியில் இவ்வளவு நன்மைகளா?

एनडीटीवी फूड डेस्क  |  Updated: September 10, 2018 15:51 IST

Reddit
Ginger For Stomach: From Indigestion, Bloating to Acidity Here's How Ginger Can Help

சமையல் பொருளாய் மட்டுமில்லாமல் உடல் ஆரோக்கியத்தை காக்கவும் இஞ்சி பயன்படுகிறது. ஆயூர்வேத மருத்துவத்தில் இஞ்சி முக்கிய பொருளாக கருதப்படுகிறது. குறிப்பாக, உடல் அஜீரணப் பாதிப்புகளை நீக்க இஞ்சி பயன்படுகிறது. வீட்டிலேயே எளிதாக தயாரிக்க கூடிய வீட்டு மருத்துவத்தில் இஞ்சி இடம் பெற்றிருக்கும். சில வயிற்றுப் பிரச்சனைகளுக்கான இஞ்சி வீட்டு மருத்துவத்தின் குறிப்புகள் இங்கே பகிரப்பட்டுள்ளது

இஞ்சியின் வீட்டு மருத்துவம்

அஜீரணப் பிரச்சனை

அஜீரணப் பிரச்சனைகள் நீங்க இஞ்சி பயன்படுகின்றது. இஞ்சியின் சிறு பகுதியை சுடு தண்ணீரில் கொதிக்க வைத்து, இஞ்சி டீ தயாரித்து குடிக்கவும். இதை குடித்தால், உடலில் ஏற்பட்டுள்ள அஜீரணப் பிரச்சனைகள் நீங்கும்

ginger tea

இஞ்சி டீ வயிற்றுப் பிரச்சனைகளை நீக்கும்

அசிடிட்டி

வயிற்றுப் பாதிப்புகளில் அசிடிட்டி முக்கியமானது. அசிடிட்டியினால் உடலில் அசெளகரியம் உண்டாகும். எனவே, ஒரு ஸ்பூன் இஞ்சி, எலுமிச்சை சாறு, இரண்டு ஸ்பூன் தேன் சேர்த்து கலக்கவும். அதனுடன் சுடு தண்ணீர் சேர்த்து குடித்து வந்தால், அசிடிட்டி பிரச்சனை குணமாகும்.

kqob9f18

வாயு பிரச்சனைகள் நீங்க இஞ்சி பயன்படுகின்றது

பசியின்மை

உடல் ஆரோக்கியம் குறைய பசியின்மை முக்கிய காரணமாக உள்ளது. சிறிதளவு இஞ்சி, எலுமிச்சை, உப்பு ஆகியவை சேர்த்து சாப்பிட்டால், பசியின்மை பிரச்சனை நீங்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

உடல் வாயு

இஞ்சி ஜுஸ் உடன் எலுமிச்சை சேர்த்து குடித்து வந்தால், உடல் வாயு பிரச்சனைகள் குணமாகும்.

ginger 625

இஞ்சி ஜூஸ் குடித்தால் பசியின்மை நீங்கும்

வீக்கம்

அஜீரணப் பாதிப்பு வயிற்றுப் பகுதியில் வீக்கம் ஏற்பட காரணமாக உள்ளது. எனவே, இஞ்சி ஜூஸ் எடுத்துக் கொள்வதன் மூலம், அஜீரணப் பாதிப்புகள் நீங்கி, உடல் இரத்த சர்க்கரை அளவை சீராக வைக்க உதவுகின்றன.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Advertisement