ஆரோக்கியம் நிறைந்த க்ளூட்டன் ஃப்ரீ பர்ஃபி!!!

இதில் ட்ரைக்ளிசரைட் இருப்பதால் உடலில் இரத்த அழுத்தம் குறைக்க இதனை சாப்பிடலாம்.  இருதய ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.  

Translated by: Kamala Thavanidhi  |  Updated: July 02, 2019 11:41 IST

Reddit
Watch: Nutritious Gluten-Free Flaxseed Barfi Recipe For Your Post-Workout Cravings

உணவில் அடிக்கடி விதைகளை சேர்த்து கொள்வதால் இருதயம் மற்றும் உடல் எடை பராமரிக்கப்படுகிறது.  பொதுவாகவே விதைகளில் உடலுக்கு தேவையான ஆரோக்கியமான கொழுப்புகள் இருக்கிறது.  உதாரணமாக ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் இருப்பதால் மூளை செயல்பாடுகள் சிறப்பாக இருக்க விதைகளை சாப்பிடலாம்.  உடலில் இரத்தம் உறைவதற்கும், உடலில் வீக்கம் போன்றவற்றை ஏற்படுத்தும் ஹார்மோனை சீராக சுரக்க செய்கிறது.  இருதய நோய்களை தடுப்பதற்கு இந்த ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் மிகவும் முக்கியமானது.  சைவ பிரியர்கள் விதைகள் மற்றும் கொட்டைகளை சாப்பிடலாம்.  இதில் இருந்து அவர்களுக்கு தேவையான கொழுப்பு சத்து கிடைத்துவிடுகிறது.  

flaxseeds
சமீப காலமாக நம்மில் பலரும் சூரியகாந்தி விதை, சியா விதை, ஆளி விதை போன்றவற்றை உணவில் சேர்த்து கொள்ள ஆரம்பித்துவிட்டனர்.  இவற்றுள் ஆளி விதையையே அதிகம் பயன்படுத்தப்படுகிறது.  இந்த ஆளி விதை ஸ்மூத்தி, ப்ரட், டெசர்ட், புட்டிங் போன்றவற்றில் சேர்க்கப்படுகிறது.  அப்படியே அல்லது அரைத்து பொடியாக இவை பயன்படுத்தப்படுகிறது.  ஆளி விதையின் சில ஆரோக்கிய நன்மைகள் குறித்து பார்ப்போம். 

* நார்ச்சத்து நிறைந்த க்ளூட்டன் ஃப்ரீ உணவு பொருட்களுள் ஆளி விதையும் ஒன்று. 
* இதில் புரதம் அதிகமாக இருப்பதால், உடற்பயிற்சிக்கு முன் மற்றும் பின் இதனை சாப்பிட்டு வரலாம். 
* ஆளி விதையில் ஆல்ஃபா லினொலெனிக் அமிலம் இருப்பதால் உடலுக்கு ஆற்றல் கிடைக்கிறது.  
* இதில் ட்ரைக்ளிசரைட் இருப்பதால் உடலில் இரத்த அழுத்தம் குறைக்க இதனை சாப்பிடலாம்.  இருதய ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.  
 ஆளி விதையை கொண்டு ஆரோக்கியமான பர்ஃபி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ளுங்கள்.  வால்நட், பாதாம், முந்திரி, தேன் அல்லது மேப்பிள் சிரப் சேர்த்து செய்யப்படும் இந்த க்ளூட்டன் பர்ஃபியில் ஏலக்காய் சேர்த்தால் இன்னும் ருசியாகவும் மணமாகவும் இருக்கும்.  குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதனை விரும்பி சாப்பிடுவார்கள்.  இதனை எப்படி செய்வதென்று பார்ப்போம்.  

தேவையான பொருட்கள்: 
வால்நட் - 1/2 கப் (பொடித்தது)
ஆளி விதை பொடித்தது - 1/2 கப் 
பாதாம் - 1/2 கப் (பொடித்தது)
முந்திரி - 1/2 கப் (பொடித்தது)
ஏலக்காய் - 1 தேக்கரண்டி 
சர்க்கரை - 1 கப் 
தண்ணீர் - தேவையான அளவு 

செய்முறை: 
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, அதில் அரைத்து வைத்த ஆளி விதையை சேர்த்து லேசாக வறுக்கவும்.  
அத்துடன் பொடித்து வைத்துள்ள பாதாம், முந்திரி, வால்நட் ஆகியவற்றை சேர்த்து மீண்டும் லேசாக வறுத்து கொள்ளவும். 
பொடித்து வைத்திருந்த ஏலக்காயை சேர்த்து கலந்து கொள்ளவும். 
சுகர் சிரப் தயாரிக்க, ஒரு பாத்திரத்தை சிறிதளவு தண்ணீர் ஊற்றி, அதில் சர்க்கரையை சேர்த்து பாகு காய்ச்சி கொள்ளவும்.  
பின் அதில் ஏற்கனவே வறுத்து வைத்திருந்த விதைகளை சேர்த்து கிளறி இறக்கவும்.  
பின் ஒரு தட்டில் இந்த கலவையை வைத்து ஆறிய பின் சிறு துண்டுகளாக வெட்டி சாப்பிடலாம்.  
இந்த ஆரோக்கியமான ஆளி விதை பர்ஃபியை அடிக்கடி செய்து சாப்பிட உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைத்துவிடும். 

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement