பொடுகு, தலை அரிப்பை நீக்கும் இஞ்சி ஹேர் மாஸ்க்…!

இஞ்சி சாறு பொடுகு, தலை முடி உதிர்தல் மற்றும் அரிப்பு நீக்கவும் பயன்படுகிறது.

   | Translated by: Saroja  |  Updated: February 25, 2019 14:02 IST

Reddit
Got A Case Of Dandruff And Itchy Scalp? All You Need Is Ginger To Control It!
Highlights
  • இஞ்சியில் ஆண்டி பாக்டீரியல் அதிகமுள்ளது
  • செரிமான கோளாறு, சளி மற்றும் இருமல் ஆகியவற்றிக்கும் பயன்படுத்த முடியும்
  • தலை முடியில் ஏற்படும் பிரச்னைக்களுக்கும் தீர்வளிக்கிறது

இந்திய மற்றும் ஆசிய சமையலில் பயன்படுத்தப்படும் முக்கியமான பொருள் என்றால் அது இஞ்சி தான். சமையலில் சுவையை அதிகரிக்கிறது. இஞ்சியை குழம்பு வகைகள் மற்றும் இனிப்பு மற்றும் டீ யாகவும் செய்து  பயன்படுத்துவதைப் பார்க்கலாம். இஞ்சியை வீட்டு வைத்தியங்களில் ஒன்றாகவும் பயன்படுத்துவதைப் பார்க்கலாம். செரிமான கோளாறு, சளி மற்றும் இருமல் ஆகியவற்றிக்கும் பயன்படுத்த முடியும். இஞ்சி வலி நிவாரணியாகவும், தூக்கத்தை அதிகரிக்கவும் வைக்கிறது. இஞ்சியில் ஆண்டி பாக்டீரியல் அதிகமுள்ளது. 

இஞ்சி உடலில் ஏற்படும் அலர்ஜியை போக்குகிறது. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மருத்துவ குணம் நிறைந்த இஞ்சி பொடுகு மற்றும் தலையில் ஏற்படும் அரிப்பு ஆகிய பிரச்னைகளுக்கும் தீர்வளிக்கிறது. இஞ்சியை சருமப் பராமரிப்பிற்கும் பயன்படுத்த முடியும். இஞ்சி சாறை முகம் மற்றும் முடிக்கான மாஸ்க்காக பயன்படுத்த முடியும். தலை முடியில் ஏற்படும் பிரச்னைக்களுக்கும் தீர்வளிக்கிறது. இஞ்சி சாறு பொடுகு, தலை முடி உதிர்தல் மற்றும் அரிப்பு நீக்கவும் பயன்படுகிறது. 

Newsbeep
o9agd3n
 

பொடுகுமற்றும்தலைஅரிப்பைநீக்கும்இஞ்சிஹேர்மாஸ்க்

1. இஞ்சியை எடுத்து பொடி பொடியாக வெட்டியோ அல்லது துருவியோ  வைக்கவும்.

2. பொடியாக நறுக்கிய இஞ்சியை தண்ணீர் ஊற்றி மிதமான சூட்டில் அடுப்பில் கொதிக்க விடவும்.  சிறிது நேரத்தில் தண்ணீரில் நிறம் மாறத்தொடங்கும். மென்மையான மஞ்சள் நிறத்தில் மாறியிருக்கும்.

3. அடுப்பை அணைத்து விட்டு வடிக்கட்டி தனியே எடுத்து வைக்கவும்.

4. நன்றாக பிழிந்து அதிகபட்ச இஞ்சி சாறை எடுத்து தனியாக கண்டெய்னரில் வைக்கவும்.

5. இஞ்சி சாறு நன்றாக சூடு தணிந்த பின் சின்ன ஸ்பிரே பாட்டிலில் வைத்து நேரடியாக தலை முடியின் வேர்கால்களில் படும் விதமாக பயன்படுத்தவும் .

Listen to the latest songs, only on JioSaavn.com

6. அரை மணி முதல் 1 மணிநேரம் வரை இந்த மாஸ்க் தலையில் இருக்கும் விதமாக வைத்துவிட்டு ஷாம்பு தேய்த்த்து தலை முடியையை மென்மையாக கழுவவும். இந்த ஹேர்மாஸ்க்கை வாரம் ஒரு முறை பயன்படுத்துவது நல்லது. இதனால் பொடுகு குறைந்து தலை அரிப்பும் குறைந்து விடும். அன்றாடம் தலைக்கு எண்ணேய் வைத்து மசாஜ் செய்வதும் மிகவும் அவசியம். 

Disclaimer: This content including advice provides generic information only. It is in no way a substitute for qualified medical opinion. Always consult a specialist or your own doctor for more information. NDTV does not claim responsibility for this information.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement