பச்சைப்பயிறு

பச்சைப்பயிறு அதிக அளவில் அமினோ அமிலங்கள் கொண்டுள்ளது

एनडीटीवी  |  Updated: June 13, 2018 01:41 IST

Reddit
Green Gram
Highlights
  • உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது
  • பச்சைப்பயிறு ஊற வைத்த தண்ணீர், காலரா, அம்மை போன்ற நோய்களுக்கு மருந்தாகு
  • பச்சைப்பயிறு தென் ஆசியாவின் உணவு வகைகளில் ஒன்று
பச்சை நிறத்தில் உள்ள சிறிய பருப்பு வகை, பச்சைப்பயிறு. விக்னா ரேடியாட்டா என்ற பாசிப்பருப்பின் விதைகள் ஆகும். இவை  தென் ஆசியாவின் உணவு வகைகளில் ஒன்று. பச்சை நிற தோளை விலக்கினால், மஞ்சள் நிறத்தில் இருக்கின்றன.

பயன்பாடு
பொதுவாக சாப்பாட்டிற்கு சேர்த்து சாப்பிடபடும் முக்கியன் உணவு வகையாக அல்லது இனிப்பு வகையாக செய்யப்படுகிறது.  மசாலா பொருட்கள் சேர்த்து பச்சைப்பயிறை வேகவைத்து சமைக்கலாம். அல்லது, உப்பு எலுமிச்சை சேர்த்து சாலட்டாக சாப்பிடலாம். சாலட் போன்ற பச்சைப்பயிறு உணவு செய்வதற்கு, முதலில் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பிறகு, தோளை எடுத்துவிட்டு உண்ணலாம்.சீனா நாட்டில், டெசர்ட் எனப்படும் உணவு வகையை செய்ய பச்சைப்பயிறு பயன்படுகிறது.  இன்னும் சில நாடுகளில், பச்சைப்பையிறு கலவை செய்து ஐஸ்க்ரீமில் பயன்படுத்தப்படுகிறது.  ஆந்திர மாநிலத்தில் பச்சைப்பயிறு மாவு கொண்டு ‘பெசரட்டு’ எனும் உணவு வகை செய்யப்படுகிறது.

Commentsஊட்டச்சத்து
  • குறைந்த கொழுப்பு புரதச்சத்து நிறைந்தது. அதிக அளவில் அமினோ அமிலங்கள் கொண்டுள்ளது
  • கரைந்த மற்றும் கரையாத நார்சத்துகள் அதிகம் இருக்க கூடியது
  • இருதயம் சார்ந்த பிரச்சனைகளுக்கு, தண்ணீர் அதிகம் நிறைந்த நார்ச்சத்துகள் பச்சைப்பயிறில் உள்ளன
  • உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது
  • பச்சைப்பயிறு ஊற வைத்த தண்ணீர், காலரா, அம்மை போன்ற நோய்களுக்கு மருந்தாக அமையும்.


உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
Tags:  Ingredients

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement
 
Listen to the latest songs, only on JioSaavn.com