வறண்ட கூந்தலை பொலிவாக்கும் தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயை கொண்டே உங்கள் கூந்தலை அடர்த்தியாக, பொலிவாகவும் வைத்திருக்கும்

   |  Updated: November 29, 2018 15:16 IST

Reddit
Hair Care: Here's Why Coconut Oil May Be The Best For Dry And Lifeless Hair

Listen to the latest songs, only on JioSaavn.com

பனிக்காலம் பொதுவாக உங்கள் கூந்தல் மற்றும் சருமத்தை வறண்டு போக செய்துவிடும். காற்றில் ஈரப்பதம் குறைந்திருப்பதால் சருமமும் கூந்தலும் பெரிதும் பாதிக்கப்படும். கூந்தலின் ஆரோக்கியத்தை அதிகரிக்க எந்த இரசாயணங்களும் தேவையில்லை. தேங்காய் எண்ணெயை கொண்டே உங்கள் கூந்தலை அடர்த்தியாக, பொலிவாகவும் வைத்திருக்கும். தேங்காய் எண்ணெயில் நற்குணங்கள் சிலவற்றை பார்ப்போம்.

Newsbeep

பொலிவிழந்த கூந்தலுக்கு தேங்காய் எண்ணெயை இப்படி பயன்படுத்துங்கள்

  1. தேங்காய் எண்ணெய் கூந்தலில் வேர் வரை சென்று கூந்தலை உறுதியாக்குகிறது.
  2. கூந்தலின் ஈரப்பதம் மற்றும் மென்மைதன்மையை தக்கவைக்கிறது.
  3. பொடுகு, நுனி பிளவு, ஸ்கால்பில் அரிப்பு, முடி உதிர்வு ஆகியவற்றை போக்கி பளபளப்பை கொடுக்கும்.
  4. தேங்காய் எண்ணெயில் ஆண்டிஆக்ஸிடண்ட், ஆண்டிவைரல், ஆண்டிஃபங்கல், ஆண்டிபாக்டீரியல் தன்மைகள் இருப்பதால் ஸ்கால்பில் நோய்தொற்று ஏற்படாமல் பார்த்து கொள்ளும்.
  5. கூந்தல் வறண்டு உடைந்து போதல், கூந்தலில் புரதம் இழப்பு ஆகியவற்றை சரிசெய்து, கூந்தல் வளர்ச்சியை தூண்டும். தேங்காய் எண்ணெய் கூந்தலுக்கு சிறந்த கண்டிஷனராக செயல்படுகிறது. தேங்காய் எண்ணெயில் இருக்கும் லாரிக் அமிலம், வைட்டமின், தாதுக்கள் மற்றும் கூந்தலுக்கு தேவையான நல்ல கொழுப்பு நிறைந்திருக்கிறது.
  6. தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்தால் ஸ்கால்பில் இரத்த ஓட்டம் சீராக இருப்பதோடு கூந்தல் வளர்ச்சியும் அதிகரிக்கும்.
  7. அடிக்கடி கூந்தலுக்கு தேங்காய் எண்ணெய் தேய்த்து வந்தால் கூந்தலின் வறட்சி குறைந்து செழித்து வளரும்.

வறண்ட கூந்தலை சரிசெய்ய

சிறிதளவு தேங்காய் எண்ணெயை ஒரு பாத்திரத்தில் ஊற்றி சூடுப்படுத்தவும். வெதுவெதுப்புடன் இருக்கும்போது அதனை கூந்தலில் தடவி மசாஜ் செய்து இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கு ஊற வைக்க வேண்டும். அல்லது இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் தலைக்கு குளித்துவிட வேண்டும். வறட்சியை போக்கி கூந்தலை மிருதுவாக்க அடிக்கடி தேங்காய் எண்ணெயை பயன்படுத்துங்கள். தேங்காய் எண்ணெயுடன் சிறிதளவு கற்பூரத்தை சேர்த்து சூடுப்படுத்தி தலைமுடிக்கு தேய்த்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement