முடி உதிர்கிறதா? : 3 வழிகளில் எளிய தீர்வு

Shubham Bhatnagar  |  Updated: December 11, 2018 16:26 IST

Reddit
Hair Loss: 3 Simple Home Remedies To Prevent Hair Thinning

இந்த தலைமுறை இளைஞர்களுக்கு முடி உதிர்வது பெரும் பிரச்னையாக உள்ளது. காற்று மாசுபாடு, மன அழுத்தம், வேலையில் பிரச்னை, தண்ணீர் ஆகியவை முடி உதிர்வதற்கு காரணமாக உள்ளது. அதே நேரம் வாழ்வியல் முறை, உணவுப் பழக்கம், தூக்கமின்மை, ஹார்மோன்கள், அலர்ஜி போன்றவையும் காரணமாக உள்ளது.

இதற்கு எளிய தீர்வுகள் உண்டு. அதை வீட்டில் இருந்தே செய்து பார்க்கலாம்.

கற்றாழை

கற்றாழையில் பல்வேறு ப்ரோடியோலைட்டிக் என்சைம்கள் உள்ளன. அவை முடியின் வேர் பகுதியில் இருக்கும் இறந்த செல்களை ஆராயும் ஆற்றல் கொண்டது. இதன் மூலம் முடி வளர்வதை ஊக்கப்படுத்த முடியும். இதனால் முடி அடர்த்தி அதிகரிக்கும். இதை பயன்படுத்துவதால் பொடுகு தொல்லை குறையும். கற்றாழை ஜூஸ் குடிப்பது மிகவும் நல்லது.

aloe vera

எப்படி பயன்படுத்துவது ?

 1. கற்றாழையை வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.
 2. மிக்ஸியில் போட்டு நன்கு அரைக்க வேண்டும்.
 3. பின்னர் அதை தலையில் முடியின் அடிப்பகுதியில் தடவவேடும்.
 4. பின்னர் கைகளால் அழுந்த தேய்க்க வேண்டும்.
 5. அதன் பின்னர் குளித்தால் முடி நன்றாக இருக்கும்.

முட்டை

முட்டையில் முடியை வலுப்படுத்தும் சக்தி உண்டு. அதை எடுத்துக்கொள்வதன் மூலம் முடிக்கற்றைகள் ஆரோக்கியமாக இருக்கும். இதில் புரோட்டின், விட்டமின் பி12, இரும்பு, ஜிங்க் போன்ற தாதுக்கள் உள்ளன.

eggs

எப்படி பயன்படுத்துவது ?

 1. ஒரு பாத்திரத்தில் முட்டையையும், ஆலிவ் எண்ணெயையும் கலந்து கொள்ள வேண்டும்.
 2. அதை நன்கு கலக்கி, தலையில் தடவ வேண்டும்.
 3. அரை மணி நேரம் கழித்து, தலைக்கு குளித்தால் முடி வலுப்பெறும்.

நெல்லிக்காய்

நெல்லிக்காயில் முடி வளரவைக்கும் ஆற்றல் அதிகம் உள்ளது. அதை அரைத்து தேய்த்தோ அல்லது ஜூஸாகவோ பயன்படுத்தினால், முடி வளர்ச்சி அதிகரிக்கும். நெல்லிக்காயில் விட்டமின் சி, மினரல்கள், தாதுக்கள், அமினோ ஆசிட்டுகள், ஆன்டி ஆக்ஸிடன்டுகள் உள்ளன. இது முடியை நன்கு வளர வைக்கும்

amla

எப்படி பயன்படுத்துவது ?

Comments

 1. பாத்திரத்தில் இரண்டு டீஸ்பூன் நெல்லிக்காய் பொடி, எலுமிச்சை சாறு ஆகியவற்றை கலந்து கொள்ள வேண்டும்.
 2. அதை தலையில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும்.
 3. சிறிது நேரம் கழித்து தலைக்கு குளிக்க வேண்டும்.


உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Advertisement