இப்படிதான் கரன் ஜோஹர் உடல் எடையை குறைத்தாராம்!!

உடல் எடையை குறைக்க நினைத்தால் தொடர்ச்சியாக உணவு பழக்கம் மற்றும் உடற்பயிற்சி என கட்டுப்பாடு மிகவும் அவசியம். 

Translated by: Kamala Thavanidhi  |  Updated: May 25, 2019 17:33 IST

Reddit
Happy Birthday Karan Johar: 5 Things The Filmmaker Did To Lose 17 Kgs In 4 Months
Highlights
  • தனது 47 வது பிறந்த நாளை இன்று உற்சாகமாக கொண்டாடினார் கரன் ஜோஹர்.
  • நான்கே மாதத்தில் 17 கிலோ குறைத்துள்ளார் இவர்.
  • கடுமையான உணவு கட்டுப்பாட்டை பின்பற்றினார் கரன் ஜோஹர்.

சமூக வலைதளமாகிய இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர் கரன் ஜோஹர்.  இவர் நான்கே மாதத்தில் 17 கிலோ குறைத்திருக்கிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?  ஆம்.  தொடர்ச்சியாக ஃபிட்னெஸில் கவனம் செலுத்தி வரும் கரன் ஜோஹர் மிகவும் கடுமையான  வழிமுறைகளை பின்பற்றியே உடல் எடையை குறைத்திருக்கிறார்.  ரன்பீர் சிங், ரானா டகுபதி, ரகுல் ப்ரீத் சிங் போன்றோருக்கு பயிற்சியளித்த குனால் கிர் தான் கரன் ஜோஹரின் ஆலோசகர்.  அவர் பரிந்துரையின்படியே, தன் உடல் எடையையும் தோற்றத்தையும் மெருகேற்றியிருக்கிறார் கரன் ஜோஹர்.  இவரது லேட்டஸ்ட் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவேற்றியதில் அனைத்தும் வைரலாகி போனது.  உடல் எடையை விரைவில் குறைக்க சில எளிய குறிப்புகளை குனால் கிர் வெளிப்படுத்தியுள்ளார்.  சர்க்கரை:

சர்க்கரை என்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்க கூடியது.  தினமும் உங்கள் உணவில் சர்க்கரையை அதிகமாக சேர்த்து கொண்டால் உடல் எடை அதிகரிக்கும்.  உடல் எடை குறைக்க நினைத்தால் சர்க்கரையை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். கார்போஹைட்ரேட்:

உணவில் கார்போஹைட்ரேட் அளவை குறைக்க வேண்டும்.  கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள் உங்கள் எடையை அதிகரிக்கும்.  அதனால் புரதம் நிறைந்த காய்கறிகளை சாப்பிடலாம்.  

 

விதைகள் மற்றும் கொட்டைகள்:

கார்போஹைட்ரேட் உணவுகளை தவிர்த்து விட்டு புரதம் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை தொடர்ச்சியாக சாப்பிடும்போது உடல் எடை தானாகவே குறையும்.  இதனை கீடோஜெனிக் டயட் என்று சொல்வார்கள்.  உலர் திராட்சைகள், ஆளிவிதை, ட்ரை ஃப்ரூட்ஸ் போன்றவற்றில் புரதம் மற்றும் ஆரோக்கிய கொழுப்புகள் அதிகம் உள்ளது.  மேலும் வைட்டமின் மற்றும் மினரல் நிறைந்திருப்பதால் உடல் எடையை குறைக்க இதனை சாப்பிடலாம்.  

பிடித்ததை சாப்பிடலாம்:

தொடர்ச்சியாக கீடோஜெனிக் டயட்டில் இருப்பவர்கள் அவ்வப்போது டயட்டில் இருந்து விலகி என்ன பிடிக்குமோ அதை சாப்பிடலாம்.  இதனால் உடலுக்கு கார்போஹைட்ரேட் கிடைக்கிறது.  கட்டுப்பாடு அவசியம்:

உடல் எடையை குறைக்க நினைத்தால் தொடர்ச்சியாக உணவு பழக்கம் மற்றும் உடற்பயிற்சி என கட்டுப்பாடு மிகவும் அவசியம்.  உடல் எடை குறைப்பதற்கு மன கட்டுப்பாடு மிகவும் அவசியம்.  தொடர்ச்சியாக முயற்சி செய்தால் நீங்கள் நினைத்த உடல் தோற்றத்தை பெற முடியும் என்று குனால் தெரிவித்தார்.  Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement
 
Listen to the latest songs, only on JioSaavn.com