Diwali-க்கு Special Sweet சாப்பிட வேண்டுமா.! உங்களுக்காகவே 2 பாதாம் ஸ்வீட் ரெசிபி..

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பாதாம் பருப்புகளைக் கொண்டு சுவையான 2 இனிப்பு வகைகளி தயாரிக்கலாம்.

NDTV Tamil | Written by: Ragavan Paramasivam  |  Updated: November 02, 2019 10:00 IST

Reddit
Happy Diwali 2019 : Make your festival more happier and sweeter with this 2 Almond Nutritious rich sweets..!
Highlights
  • பாதாம் - வைட்டமின் E மற்றும் ஒமேகா 3 போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது.
  • பாதாம் கிட்டத்தட்ட 19,000 ஆண்டுகளாக உள்ளது என்று நம்பப்படுகிறது.
  • மக்கானா- தாமரை காய்களிலிருந்து கிடைக்கும் விதைகளாகும்.

தீபாவளி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது இனிப்புகளும் பலகாரங்களும் தான். வீட்டில் நாம் குலாப் ஜாமுன், ரஸகுலா போன்ற சில இனிப்புகள் செய்தாலும். ஒரு சில உயர்ரக மாறுபட்ட இனிப்பு வகைகளை அதிக விலை கொடுத்து கடைகளில் வாங்கி உண்ணவே விறும்புகிறோம். ஏனென்றால், அது போன்ற இனிப்புகளை நாம் வீட்டில் அடிக்கடி செய்யமுடியாதவையாகவும், செய்யலாம் என்று நினைத்தாலும் அதன் செய்முறை தெரியாமல் இருப்பதும் தான். அந்த கவலையே இனி வேண்டாம். இந்த தீபாவளி ஸ்பெஷலாக ஆரோக்கியம் நிறைந்த, சுவையான 2 பாதாம் இனிப்பு ரெசிபிகளையும், அதன் செய்முறையையும் உங்களிடம் பகிர்ந்துக்கொள்கிறோம். உடனடியாக இந்த இனிப்புக்களை செய்து, வீட்டில் எல்லோருடனும் பகிர்ந்து தீபாவளியை இனிமையாக கொண்டாடி மகிழுங்கள்.

1.Almond and Carrot Halwa Crumble:

பாதாம் - கேரட் அல்வா Crumble சமைக்கத் தேவையான பொருட்கள் :
(6 பேருக்கு)

கேரட் அல்வாவுக்கு தேவையானவை :
கேரட் - 1/2 கிலோ
பால் (Full Cream Milk) - 1/2 லிட்டர்
சர்க்கரை     - 1/2 கப்
ஏலக்காய் - 4 (பொடித்தது)
நெய் - 2 தே. கரண்டி
பாதாம் (தோல் நீக்கப்பட்டது) - 1/4 கப்

Crumble செய்ய தேவையானவை : 
மைதா / All-purpose flour - 3/4 கப்
வெண்ணெய் (unsalted) - 1/2 கப்
சர்க்கரை - 1/2 கப்
பொடித்த பாதாம் - 1/2 கப்

7gcg8gt8

Almond and Carrot Halwa Crumble
Photo Credit: NDTV


செய்முறை :

  • ஒரு கடாயில், பால் மற்றும் கேரட்டை ஒன்றாக சேர்த்து, பால் 3/4 பாகமாகக் குறையும் வரை சமைக்கவும்.
  • அதில் ஏலக்காய் தூள், நெய், சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கவும்.
  • அதனோடு, வெட்டப்பட்ட பாதாம் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • பின், இதனை Crumble செய்ய, கேரட் அலவாவை சிறிதளவு எடுத்து அதன்மேல் மாவு, வெண்ணெய், சர்க்கரை மற்றும் பொடித்த பாதாம் ஆகியவற்றை தடவி வைக்கவும்.
  • பிறகு, அதனை எடுத்து Oven-ல் வைத்து பொன்னிறமாக மாறும் வரை 180 °C-க்கு பேக் செய்து எடுத்தால் போதும், வேலை முடிந்தது.

இப்போது இந்த வறுத்த பாதாம் கொண்ட முறுமுறுப்பான கேரட் அல்வவாவை பரிமாறலாம்.

இந்த ஸ்வீட்டில் உள்ள் ஊட்டச்சத்துக்கள் :

கலோரிகள் - 3705
புரதம் - 65.5 கிராம்

மொத்த கொழுப்பு - 216.2 கிராம்
நிறைவுற்ற கொழுப்புகள் - 77.6 கிராம்
மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் - 63.9 கிராம்
பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் - 22.6 கிராம்

கார்போஹைட்ரேட்டுகள் - 373.9 கிராம்
நார்ச்சத்து - 43.2 கிராம்
கொழுப்பு (Cholesterol) - 306 மி.கி.
சோடியம் - 359.4 மி.கி.

கால்சியம் - 1141.8 மிகி
மெக்னீசியம் - 633.9 மிகி
பொட்டாசியம் - 3329.5 மி.கி.
வைட்டமின் ஈ - 39.7 மி.கி.

2. ALMOND AND MAKHANA KHEER

சுவையான பாதாம் மற்றும் மக்கானா கீர் செய்யத் தேவையான பொருட்கள் மற்றும் அளவுகள் : (2 - 3 பேருக்கு)

பால் (Full cream milk) - 2 கப் 
சர்க்கரை - 4 தே. கரண்டி
குங்குமப்பூ இழைகள் - மிகச் சிறிய அளவு 
ஏலக்காய் பொடி -   1/2 டீ. கரண்டி 
பாதாம் துறுவல் - 1/2 கப்
மக்கனா (fox nuts, தாமரை விதைகள்) - 1 கப்
நெய் - 2 தே. கரண்டி

36rj9eu

ALMOND AND MAKHANA KHEER
Photo Credit: NDTV


செய்முறை :

  • கனமான அடித்தளம் கொண்ட பாத்திரத்தில் நெய்யை சூடாக்கவும், மக்கானா மற்றும் பாதாம் பருப்பை பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
  • பால் மற்றும் குங்குமப்பூ இழைகளை ஒரு கனமான பாத்திரத்தில் சூடாக்கி, ஒரு கொதி நிலைக்கு கொண்டு வந்து, அடிப்பிடிக்காமல் கிண்டவும்.
  • பிறகு, பாலில் சர்க்கரை சேர்த்து, நன்கு கலக்கவும்.
  • அதன் பிறகு, முழு மக்கானாவையும் பாதாம் பருப்பையும் பாலில் சேர்க்கவும்.
  • மக்கானா மென்மையாகவும், பால் சிறிது கெட்டியாகும் வரை கலவையை சமைக்கவும்.

வேறென்ன..? அவ்வளவுதான்..!  அதன் மேல் வறுத்த பாதாம் சீவல் மற்றும்  நறுக்கி வறுத்த மக்கானாவுடன் சூடாகவோ, குளிராகவோ பரிமாறவும்.

இந்த கீரில் உள்ள ஊட்டச்சத்துக்கள் :

கலோரிகள் - 1152
புரதம் - 28.1 கிராம்

மொத்த கொழுப்பு (Fats) - 88.4 கிராம்
நிறைவுற்ற கொழுப்புகள் - 13.1 கிராம்
மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் - 36.9 கிராம்
பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் - 13.4 கிராம்

கார்போஹைட்ரேட்டுகள் - 76.6 கிராம்
நார்சத்து - 12.4 கிராம்
கொழுப்பு (Cholesterol) - 30 மி.கி.
சோடியம் - 452.6 மி.கி

கால்சியம் -816 மி.கி.
மெக்னீசியம் - 375.4 மி.கி.
பொட்டாசியம் - 1138 மி.கி.
வைட்டமின் ஈ - 51.8 மி.கி

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய சமையல்

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement