இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்: தனித்துவமான இந்திய உணவு வகைகள்

இந்தியாவின் 72 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் நம் இந்திய உணவுவகைகளை பற்றி அறிந்து கொள்வோம்

   |  Updated: August 15, 2018 11:12 IST

Reddit
Happy Independence Day: 18 Types Of Everyday Indian Breads We Love To Eat

இந்தியாவின் 72 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் நம் இந்திய உணவுவகைகளை பற்றி அறிந்து கொள்வோம்.

இங்கு 18 ரொட்டி வகைகள் பற்றி அறிவோம், இவை நம் இந்திய உணவை மிகவும் தனித்துவமானவையாக மாற்றுகிறது.

1. காமிரி ரோட்டி

கமீர் ஒரு உருது வார்த்தை, அதாவது ஈஸ்ட் என்று பொருள். இது காஷ்மீர் உணவு வகையை சேர்ந்தது. இந்த ரொட்டி வகை ட்ரய் ப்ரூயட்ஸ் மற்றும் மசாலா சேர்த்து செய்யப்படுகிறது.

khamiri roti with mutton

2. மலபார் பராத்தா

இது கேரளா நாட்டு உணவு வகையை சேர்ந்தது. மைதாவால் செய்யப்படும் இந்த பராத்தா பலரின் விருப்பமான உணவாகும்.

Newsbeep
malabar parotta 625

3. ரூமாலி ரொட்டி

மெல்லிய, நீளமான இந்த ரொட்டி, இந்தியாவின் வட மாநிலங்களில் மிகவும் பிரபலம். ரூமாலி என்றல் கைக்குட்டை என்று பொருள். பெயருக்கு ஏற்ற படி மிகவும் மெல்லியதாக இருக்கும்.

roomali roti

4. ஆலு பராத்தா

இது பஞ்சாபி உணவுவகையை சேர்ந்தது. சப்பாத்தி மாவில் உருளைகிழங்கை மசித்து செய்யப்படும் இந்த ரொட்டியை பிடிக்காதவர் யாரேனும் இருப்பாரோ?

o76ka39o

5. முகலாய் பராத்தா

இது மேற்கு வங்க மாநிலத்தின் உணவுவகையை சேர்ந்தது. ரொட்டிகுள் முட்டை அல்லது கீமாவை நடுவில் வைத்து எண்ணையில் பொரித்து எடுக்கப்படும், மிகவும் ருசியாக இருக்கும்.

mughlai paratha

6. பைடா ரொட்டி

இந்த ரொட்டி பார்சி உணவு வகையை சேர்ந்தது. மகாராஷ்டிராவில் இது மிகவும் பிரபலம்.

7. பட்டோரா

பூரியை போல் காணப்படும் இந்த உணவு சன்னா மசாலாவுடன் பரிமாறப்படும். இது வட மாநில உணவுவைகையை சேர்ந்தது.

chole bhature

8. பூரி

மைதா அல்லது கோதுமை மாவில் செய்யப்படும் பூரிகளை எந்த மசாலா உடனும் சாப்பிடலாம். சுவைக்கு குறையே இருக்காது.

poori

9. லுச்சி

நம் பூரியை போலவே இருக்கும் பெங்காலி வகை பூரி. இதுவும் சன்னா மசாலாவுடன் பரிமாறப்படும்.

luchi

10. பாவ்

பாவ் மற்றும் மிசல் பாவ் எல்லோருக்குமே பிடிக்கும் !! பாவை காய்கறி சப்ஜி உடன் சாப்பிடும்போது அலாதி ருசியாக இருக்கும்.

pav

11. ஆப்பம்

ஆப்பம் தேங்காய் பால், ஆப்பம் ஸ்டூ கேரளாவில் மிகவும் பிரபலம்.

appam 625

12. கஹோபா ரொட்டி

ஜோத்பூர் உணவு வகையை சேர்ந்தது. இது மிகவும் கெட்டியான ரொட்டியாக காணப்படும். சப்ஜி உடன் சாப்பிடும்போது மிகவும் ருசியாக இருக்கும்.

13. மக்கி கி ரொட்டி

இந்த மக்கி ரொட்டி பஞ்சாபி உணவு வகையை சேர்தது.

14. அம்ரிட்சரி ரொட்டி

இதுவும் பஞ்சாபி உணவு வகையை சேர்தது. சோலே மசாலா உடன் பரிமாற படும்.

amritsri kulcha

15. ஷெர்மால்

மாவு, நெய், உப்பு, சர்க்கரை மற்றும் குங்குமப்பூ பால் ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்பட்ட மாவை கொண்டு, செய்யப்படும் இந்த ரொட்டி பஞ்சாபி உணவு வகையை சேர்தது.

sheermal

16. நாண்

இது மிகவும் பிரபலமான வட இந்திய உணவுவகையை சேர்ந்தது. ஆனால் இப்போது இது அணைத்து இந்தியர்களின் பிரியமான உணவில் ஒன்றாக உள்ளது.

naan

17. தோசை

தமிழ் நாட்டை சேர்ந்த இந்த உணவுவகைக்கு ஈடேதும் இல்லை. குழந்தை முதல் பெரியவர் வரி அனைவரின் விருப்பமான உணவில் இதுவும் ஒன்று.

masala dosa

18. பேசறட்டு

Listen to the latest songs, only on JioSaavn.com

ஆந்திராவை சேர்ந்தது இந்த பேசறட்டு எனப்படும் பருப்புகள்லால் செய்யப்படும் தோசை. கார சட்னி அல்லது தேங்காய் சட்னி உடன் பரிமாற படும்.உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement