நிச்சயமா இப்படி ஒரு சுவையான சீஸ் பாதாம் டிஷ் சாப்பிட்டுருக்க மாட்டீங்க..!

பார்மேசன் சீஸ் பொடியில் ஏற்கனவே உப்பு இருப்பதால், தேவைப்பட்டால் ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கலாம். அவ்வளவுதான், சில்லி சீஸ் பாதாம் தயார்.

Written by: Ragavan Paramasivam  |  Updated: January 23, 2020 14:34 IST

Reddit
Have you ever tried this delicious and Healthy, more over easy almond dish 'Chilly Cheese Badam'

மாதாம் பருப்பில் நமக்குத் தேவையான பல சத்துக்கள் உள்ளன. அதனால் பாதாமை தினமும் உட்கொள்வது மிகவும் நல்லது. இருப்பினும், அதை வெறுமென சாப்பிடுவதைவிட, சுவையான இனிப்பு வகையாகவோ, காரசாரமான உணவாகவோ எடுத்துக்கொளவதியே பலரும் விருப்பப்படுகின்றனர். அப்படி சுவையை எதிர்பார்ப்பவர்களுக்காகவே பல வகையான உனவுகள் உள்ளன. அந்த வகையில், சற்று வித்தியாசமாக இத்தாலிய வகை உணவை தயார் செய்யலாம்.

சுவையுடன் ஆரோக்கியத்தைக் கொடுக்கும் சில்லி சீஸ் பாதாம் செய்வது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.

சில்லி சீஸ் பாதாம் (Chili Cheese Almonds)

தேவையான பொருட்கள் :

கலிபோர்னியா பாதாம் - 120 கிராம்
மிளகாய் செதில்களாக (flakes) - 5 கிராம்
பார்மேசன் (Parmesan) சீஸ் தூள் - 40 கிராம்
உப்பு - தேவையான அளவு
ஆலிவ் எண்ணெய் - 20 மில்லி
நறுக்கிய வோக்கோசு (Parsley) -  5 கிராம்

செய்முறைக்கான வீடியோவை கீழே பார்க்கலாம்...செய்முறை :

ஒரு கிண்ணத்தில் வறுத்த பாதாம், மிளகாய் செதில்கள், ஆலிவ் எண்ணெயை சிறிது சேர்க்கவும். (மிளகாய் செதில்களின் அளவு நீங்கள் எவ்வளவு விரும்புகிறீர்கள் என்பதைப் பொறுத்தது)

இப்போது, ​​பார்மேசன் சீஸ் பவுடர் சேர்த்து, ஸ்பூன் வைத்து நன்கு கலக்கவும். பிறகு ஆலிவ் எண்ணெயை இன்னும் கொஞ்சம் சேர்க்கவும், இது பார்மேசன் சீஸுடன் வறுத்த பாதாமை பிணைக்க உதவுகிறது. இப்போது, ​​அதை மீண்டும் கலக்கவும்.

Listen to the latest songs, only on JioSaavn.com

பின், சிறிது நறுக்கிய வோக்கோசு சேர்த்து நன்கு கலக்கவும். இப்போது, ​​நீங்கள் விரும்பினால் இன்னும் சில பார்மேசன் சீஸ் பொடியைச் சேர்க்கலாம்..

பார்மேசன் சீஸ் பொடியில் ஏற்கனவே உப்பு இருப்பதால், தேவைப்பட்டால் ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கலாம். அவ்வளவுதான், சில்லி சீஸ் பாதாம் தயார்.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

சம்பந்தமுள்ள கட்டுரைகள்:
Advertisement
Advertisement