ஈறுகளில் பிரச்சனையா? காய்கறிகளே மருந்து …!!

ஜின்ஜிவிடிஸ் என்பது கிருமிகளின் தாக்கத்தால் ஈறுகளில் ஏற்படும் வீக்கம். 

Edited by: Kamala Thavanidhi  |  Updated: April 04, 2019 16:19 IST

Reddit
Eating A Plant-Based Diet May Reduce Gingivitis Risk: Study

தொடர்ச்சியாக கீரைகள் மற்றும் பச்சை காய்கறிகள் சாப்பிடுவதனால், ஈறுகளில் தொந்தரவு ஏற்படாமல் இருக்கும் என்று Journal of Clinical Periodontology நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.  ஜின்ஜிவிடிஸ் என்பது கிருமிகளின் தாக்கத்தால் ஈறுகளில் ஏற்படும் வீக்கம்.  நாம் சாப்பிடும் உணவு பொருட்களால் பற்களில் பாக்டீரீயா தங்கிவிடும்.  இதன் விளைவாகவும் ஈறுகளில் வீக்கம் ஏற்படும். 

இந்த பிரச்னையை உணவு பழக்கத்திலே சரிசெய்யலாம் என்று மருத்துவர் ஜோஹன் தெரிவித்துள்ளார்.  ஈறுகளில் பிரச்னை இருக்கக்கூடிய 30 பேரை இவரது குழு ஆய்வுக்குட்படுத்தினர்.  பாதிப்படைந்தவர்களுக்கு நான்கு வாரங்கள் தொடர்ச்சியாக பதப்படுத்தப்படாத கார்போஹைட்ரேட், புரதம், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், வைட்டமின் சி, வைட்டமின் டி, ஆண்டிஆக்ஸிடண்ட், நைட்ரேட்ஸ் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகள் வழங்கப்பட்டது.

இதன் விளைவாக, சோதனையில் இருந்தவர்களுக்கு உடலில் வைட்டமின் டி அதிகமாகியும், உடல் எடை குறைந்தும் காணப்பட்டனர்.  மேலும், ஈறுகளில் இரத்த கசிவு குறைந்திருப்பதையும் கண்டறிந்தனர்.  ஈறு பிரச்னை சம்பந்தமாக மருத்துவரை அணுகுபவர்களுக்கு முறையான டயட் சார்ட்டையும் கொடுப்பது அவசியம் என்றும் தெரிவித்தார்.  

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement
 
Listen to the latest songs, only on JioSaavn.com