லாக்டவுனில் பாதம் பருப்பை பயன்படுத்தி புதியதாக சமைக்க கற்றுக்கொள்ளுங்கள்!

பாதாமில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளதாக ஆயுர்வேத, யுனானி மற்றும் சித்த நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. எடை மற்றும் நீரிழிவு நோய்களை கட்டுக்குள் வைத்திருக்கவும் பாதாம் பெரிதும் உதவுகிறது.

एनडीटीवी  |  Updated: June 19, 2020 09:26 IST

Reddit
Healthy Almond based recipes to try during quarantine

நாடு முழுவதும் கொரோனா தொற்று முன்னெச்சரிக்கையாக அமல்படுத்தப்பட்ட லாக்டவுன் காரணமாக மக்கள் தங்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். இந்நிலையில், சுய தனிமைப்படுத்தலில் இருக்கும் மக்கள் பெரும்பாலும், முற்றிலும் சத்தில்லாத நொறுக்குத் தீனிகளையே நாம் எடுத்துக்கொண்டிருக்கின்றோம். இந்த உணவுகள் நம்மை பெரும் அசௌகரியத்தில் ஆழ்த்துகிறது. இந்நிலையில் சுவையான மற்றும் பெரிதும் ஊட்டசத்துக்களை வழங்கக்கூடிய ஒரு உணவை நாங்கள் அறிமுகப்படுத்த உள்ளோம். பாதாமில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளதாக ஆயுர்வேத, யுனானி மற்றும் சித்த நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. எடை மற்றும் நீரிழிவு நோய்களை கட்டுக்குள் வைத்திருக்கவும் பாதாம் பெரிதும் உதவுகிறது. மேலும், வைட்டமின் பி 2, வைட்டமின் ஈ, மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் 1 ஆகிய சத்துக்களை பாதாம் கொண்டுள்ளது.

பாதாம் கொண்டு அருமையான உணவினை செய்வது எப்படி என்கிற வழிமுறை இங்கே.

தேவையான பொருட்கள்:

பாதாம் - 60 கிராம்
கடல் உப்பு – 1 டீஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் - 5 மிலி
கொத்தமல்லி விதைகள் - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்-2
துவரம் பருப்பு- 1 டீஸ்பூன்
கடலை பருப்பு- 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
சீரக விதைகள் (ஜீரா) - 1 டீஸ்பூன்

 • பாதாம் பருப்பை கடல் உப்பு மற்றும் ஆலிவ் எண்ணெயுடன் வறுத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
 • அதே கடாயில், சிவப்பு மிளகாய், துவரம் பருப்பு, கடலை பருப்பு ஆகியவற்றை பொன் நிறமாக வறுக்கவும்.
 • பின்னர் அதை கடாயிலிருந்து எடுத்து ஒரு தட்டில் தனியாக எடுத்து வைத்து காற்றில் ஆற வைக்கவும்.
 • கொத்தமல்லி விதைகள் மற்றும் மிளகு ஆகியவற்றை மணம் வரும் வரை வறுக்கவும். இறுதியில் ஜீராவைச் சேர்க்கவும். கடைசியாக எல்லாவற்றையும் சூடு ஆறும் வரை காற்றில் வைக்கவும்.
 • அவற்றை மிக்சியில் பாதாம் பருப்புடன் பொடி செய்து காற்று புகாத கொள்கலனில் சேமிக்கவும்.இரண்டாவது செய்முறை;

தேவையான பொருட்கள்:

வறுக்கப்பட்ட பாதாம் - 60 கிராம்
ஆலிவ் எண்ணெய் - 1 தேக்கரண்டி
அவல் - ¼ கப்
கடுகு விதைகள் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – 6
மஞ்சள் தூள் – தேவையான அளவு
வெந்தய விதைகள் – சிறதளவு

செய்முறை;

Listen to the latest songs, only on JioSaavn.com

 • அவலை நன்று வருத்து ஒரு கிண்ணத்தில் எடுத்து தனியே வைத்துக்கொள்ளவும்.
 • எண்ணெய்யை சூடாக்கி பாதாமை வறுத்து தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும்.
 • அதே எண்ணெய்யில் கடுகு கறிவேப்பிலை, மஞ்சள் தூள், மற்றும் வெந்தய விதைகளையும் வதக்க வேண்டும்.
 • 30 விநாடிகளுக்கு வதக்கவும். மீண்டும் பாதாம் சேர்த்து 1 நிமிடம் கலக்கவும்.
 • பின்னர் அவலை கொண்டு கலக்கவும்.
 • இத்துடன் எலுமிச்சை சாறை சிறிதளவு கலக்கவும்.இப்போது இரண்டாவது முறையாக உங்களுக்கு மற்றொரு உணவும் தயார்.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement