கடலைமாவு பன்னீர் தோசை தயாரிப்பது எப்படி?

100 கிராம் சிஸில் 11 கிராம் புரதம் மற்றும் 98 கலோரிகளே உள்ளது.  மேலும் கால்சியம், சோடியம், பொட்டாஷியம் ஆகியவை நிறைத்திருப்பதால், காலை உணவிற்கு சீஸ் மிகவும் நல்லது.  

   | Translated by: Kamala Thavanidhi  |  Updated: May 28, 2019 12:14 IST

Reddit
Healthy Breakfast Recipe: Protein-Rich Paneer Besan Chilla Recipe For A Diet-Friendly Meal
Highlights
  • உடல் எடை குறைக்க புரதம் பெரிதும் உதவும்.
  • கடலைமாவு மற்றும் சீஸில் புரதம் அதிகம் உள்ளது.
  • இந்த பன்னீர் தோசையை வீட்டிலேயே செய்து அசத்தலாம்.

உடல் எடை குறைக்க புரதம் மிகவும் அவசியமானது என்பதை நாம் அறிவோம்.  புரதம் தசைகளை உறுதியாக்குவதுடன் தசைகளின் வளர்ச்சிக்கும் உதவுகிறது.  பேகான், ஆட்டு இறைச்சி ஆகியவற்றில் புரதம் நிறைந்துள்ளது ஆனால், அவற்றில் அதிகபடியான கொழுப்பும் நிறைந்துள்ளதால் உடலில் கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது.  இதற்கு பதிலாக மீன், கோழி, பன்னீர் அல்லது காட்டேஜ் சீஸ் போன்றவற்றை சாப்பிடலாம்.  கடலை மாவில் புரத சத்து அதிகம் என்பதால் இவற்றை கொண்டு ருசியான ஒரு ரெசிபியை எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்.  தேவையானவை:கடலை மாவு - 1 கப் 

உப்பு - 1/2 தேக்கரண்டி 

மிளகு - 1 தேக்கரண்டி 

நறுக்கிய வெங்காயம் - 1

துருவிய பன்னீர் - 1/2 கப் 

தக்காளி - 1 

பச்சை மிளகாய் - 2 

ஓமம் - 1/2 தேக்கரண்டி 

கொத்தமல்லி - 1/2 கப் 

தண்ணீர் - 1 கப் 

ogh1ioco

 

செய்முறை:

கடலைமாவு, உப்பு, மிளகு, வெங்காயம், துருவிய பன்னீர், தக்காளி, பச்சை மிளகாய், ஓமம், கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். 

அதில் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து தோசை மாவு பதத்திற்கு வைத்து கொள்ளவும்.  

ஒரு நான்ஸ்டிக் தவாவை மிதமான சூட்டில் வைத்து, அதில் சிறிதளவு நெய் அல்லது வெண்ணெய் சேர்க்கவும்.  கரைத்து வைத்த மாவை தோசையாய் சுட்டு பொன்னிறமாக வந்ததும் எடுத்துவிடவும்.

அதற்கு முன், இரண்டு பக்கமும் திருப்பி போட்டு, நெய் அல்லது எண்ணெய் ஊற்றி மொருமொருப்பாக வரும்வரை வைத்திருந்து எடுக்கவும்.  

துருவிய சீஸ், பொடியாக நறுக்கி வைத்த கொத்தமல்லி இலை, உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து தோசையின் நடுவில் வைத்து மடித்து எடுக்கவும்.  

இதனை தக்காளி சாஸ் அல்லது கொத்தமல்லி சட்னியுடன் சேர்த்து சாப்பிட ருசியாக இருக்கும்.  lrufrs7g
 

கடலைமாவின் ஆரோக்கிய நன்மைகள்:

பலவிதமான சமையல்களுக்கு கடலைமாவு பயன்படுத்தப்படுகிறது.  கடலைமாவில் புரதம் நிறைந்துள்ளது.  இது முழுக்க முழுக்க க்ளூட்டன் ஃப்ரீ மற்றும் வீகன் உணவு.  100 கிராம் கடலைமாவில் 22 கிராம் புரதம், 11 கிராம் நார்சத்து நிறைத்திருக்கிறது.  கொலஸ்ட்ரால் முற்றிலும் இல்லாத கடலைமாவில், பொட்டாசியம், இரும்பு சத்து, வைட்டமின் பி6 மற்றும் மக்னீஷியம் ஆகிய சத்துக்கள் அதிகமாக உள்ளது.  

bgpcsdf 

Listen to the latest songs, only on JioSaavn.com

காட்டேஜ் சீஸின் ஆரோக்கிய நன்மைகள்:

புரதம் நிறைந்த உணவு பட்டியலில் காட்டேஜ் சீஸிற்கு தனி இடம் உண்டு.  100 கிராம் சிஸில் 11 கிராம் புரதம் மற்றும் 98 கலோரிகளே உள்ளது.  மேலும் கால்சியம், சோடியம், பொட்டாஷியம் ஆகியவை நிறைத்திருப்பதால், காலை உணவிற்கு சீஸ் மிகவும் நல்லது.  

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement