உங்கள் காலை உணவில் கட்டாயமாக இருக்க வேண்டியவை!!

காலை உணவில் வைட்டமின், தாதுக்கள், ஊட்டச்சத்துக்கள் ஆகிய அனைத்து சத்துக்களும் சமமாக இருக்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

   | Translated by: Kamala Thavanidhi  |  Updated: July 08, 2019 17:15 IST

Reddit
The Ideal Healthy Breakfast: Top 3 Qualities That Your Breakfast Must Have
Highlights
  • காலை உணவு ஆரோக்கியமாக இருந்தால் தான் ஆற்றலுடன் இருக்கலாம்.
  • ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகமாக எடுத்து கொள்ளலாம்.
  • எண்ணெயில் தயாரித்த உணவுகளை காலை நேரத்தில் சாப்பிடுவதை தவிர்க்கவும்.

காலை உணவு என்பது ஒரு நாளுக்கான ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கக்கூடியது.  உடல் எடை குறைக்கவும், உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் காலை உணவு மிகவும் இன்றியமையாதது.  காலை உணவில் வைட்டமின், தாதுக்கள், ஊட்டச்சத்துக்கள் ஆகிய அனைத்து சத்துக்களும் சமமாக இருக்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டும்.  உங்கள் காலை உணவில் கட்டாயமாக இருக்க வேண்டிய சிலவற்றை பார்ப்போம்.  

ஊட்டச்சத்துக்கள்: 
காலை உணவு ஆரோக்கியமாகவும், ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகவும் இருக்க வேண்டும்.  ஊட்டச்சத்துக்கள் அதிகமான உணவுகளை தினமும் காலையில் சாப்பிடுவது உடல் நலத்திற்கு நல்லது.  காலை உணவாக பழங்கள், காய்கறிகள், முளைக்கட்டிய பயறுகள் ஆகியவற்றை சாப்பிடலாம்.  
 

Newsbeep

healthy breakfast recipes லோ-க்ளைசமிக் இண்டெக்ஸ்: 
க்ளைசமிக் இண்டெக்ஸ் அதிகமான உணவுகளை உட்கொள்வதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்.  காலை நேரத்தில் நீங்கள் சாப்பிடக்கூடிய உணவு தான் இரத்த சர்க்கரை அளவை சீராக வைக்கும்.  ஓட்ஸ், முஸ்லி, முழுதானியங்கள், பால், யோகர்ட், கஸ்டர்டு ஆகியவற்றை சாப்பிடுவதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.  

egg sandwich

 

Listen to the latest songs, only on JioSaavn.com

எண்ணெய் உணவுகள்: 
எண்ணெயில் தயாரிக்கப்படும் உணவான பூரி, பட்டூரா போன்றவற்றை காலை உணவாக சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள்.  எண்ணெயில் தயாரித்த உணவுகள் உங்களை எளிதில் சோர்வடைய செய்யும் என்பதால் இவற்றை தவிர்ப்பது நல்லது.  


காலை உணவாக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த மற்றும் கலோரிகள் குறைந்த உணவுகளை சாப்பிடுவதால் நீங்கள் நீண்ட நேரத்திற்கு நிறைவாக இருக்க முடியும்.  அதேபோல உடலில் கொலஸ்ட்ரால் சேராது.  இரத்த சர்க்கரை அளவு சீராக இருக்கும்.  ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். 

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement