காலை உணவு ஐடியாஸ்: வித விதமான ஆம்லேட்!

உடலுக்குத் தேவையான புரோட்டின் முட்டையில் உள்ளது, அதோடு முடி வளர்ச்சிக்கு இது முக்கியமானது

   |  Updated: July 23, 2018 17:31 IST

Reddit
Healthy Breakfast: Top 5 Ways To Make Your Omelettes Healthier And More Filling

முட்டை உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது. முட்டை பொரியல், ஆம்லெட், வேகவைத்த மசாலா முட்டை என பல வகைகளில் சாப்பிடலாம். ஆனால், முட்டை சாப்பிடுவதை மேலும் ஆரோக்கியமாக்க, உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு பொருட்களை அதனுடன் சேர்த்து கொள்ள வேண்டும். பொதுவாக, ஆம்லெட்டுகளில் அதிக கலோரிகள் உள்ளன. எனவே, ஊட்டச்சத்து நிறைந்த டாப்பிங்ஸ், காய்கறி வகைகளை ஆம்லெட்டில் சேர்த்து சாப்பிடலாம்

ஆரோக்கியமான, சுவையான ஆம்லெட் வகைகள்

1. காய்கறிகள்: கேரட், ப்ரக்கோலி, கீரை போன்ற காய்கறி வகைகளை ஆம்லெட்டில் சேர்த்துக் கொள்ளலாம். ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்த இந்த காய்கறிகளுடன் செய்யும் இந்த ஆம்லெட் முழு திருப்தியைத் தரும்.

Newsbeep
sv5kh12o

2. புரதச்சத்து: உடலுக்குத் தேவையான புரதச்சத்து கிடைத்தால், உடல் எடை குறையும், தசைகள் வலுவடையும். காளான், கினோவா போன்றவற்றை ஆம்லெட்டில் சேர்த்து கொள்வதினால், புரதச்சத்து அதிகமாக கிடைக்கின்றன. ஆம்லெட்டிற்கு சுவையும் கூடும்.

3. எண்ணெய்: தேங்காய் எண்ணெய், கடுகு எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை இதற்குப் பயன்படுத்தலாம். ஆரோக்கியமான எண்ணெய்களை பயன்படுத்துவதால், ஆம்லெட்டில் உள்ள கொழுப்புகள் நீங்கும். வெண்ணெய் பயன்படுத்தி ஆம்லெட் செய்பவர்கள், ஒரு ஸ்பூன் அல்லது இரண்டு ஸ்பூன் வெண்ணெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும்

Listen to the latest songs, only on JioSaavn.com

4. சீஸ்: அனைத்து சீஸ் வகைகளும் உடலுக்கு கேடு விளைவிப்பது இல்லை. ஃபெட்டா சீஸ், காட்டேஜ் சீஸ், சுவிஸ் சீஸ், ஆகியவற்றில் அதிக புரதச்சத்து, கால்சியம் நிறைந்துள்ளது. எனவே, ஆம்லெட்டில் வேகவைத்த சிக்கன் துண்டுகளுடன் சீஸ் சேர்த்துக் கொள்ளலாம்.

l5r372ag

5. சுவை: மிளகு, சிவப்பு மிளகு, சீரகம் ஆகியவற்றை ஆம்லெட்டின் சுவை கூட்டப் பயன்படுத்தலாம். எது சேர்த்தாலும் உடலுக்கு ஆரோக்கியமானதாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement