மயோனீஸிற்கு பதிலாக இதை சாப்பிடலாம்!!

ஒரு மேஜைக்கரண்டி மயோனீஸில் 94 கலோரிகள் இருக்கிறது.  அதில் 10 கிராம் கொழுப்பு இருப்பதுடன் வைட்டமின், தாதுக்கள், புரதம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் ஏதும் இல்லாத உணவு மயோனீஸ். 

Edited by: Kamala Thavanidhi  |  Updated: April 23, 2019 12:04 IST

Reddit
Genius Healthy Substitutes For High-Cal Mayonnaise
Highlights
  • மயோனீஸ் ஆரோக்கியமற்ற உணவுகளில் ஒன்று.
  • இதனை தவிர்த்து ஹம்மஸ், அவகாடோ, நட் பட்டர் போன்றவற்றை சாப்பிடலாம்.
  • தொடர்ச்சியாக மயோனீஸ் சாப்பிடும்போது உடல் பருமனாகிறது.

தினசரி நம் உணவில் மயோனீஸ் இருந்து கொண்டுதான் இருக்கிறது.  காரணம், நாம் விரும்பி சாப்பிடக்கூடிய சாண்ட்விச், பர்கர் அல்லது சிப்ஸ் ஆகியவற்றுடன் நான் மயோனீஸ் தொட்டு சாப்பிடுவது வழக்கம்.  அதேபோல இப்போதெல்லாம் எல்லோர் வீட்டு ஃப்ரிட்ஜிலும் இந்த மயோனீஸ் குடிபுகுந்துவிட்டது.  தற்போது, நம்மில் பலருக்கும் எடை குறைப்பு பற்றிய விழிப்புணர்வு வந்துவிட்டது.  மயோனீஸ் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் கெடுதல்.  அத்துடன் உடல் பருமனாவதற்கு காரணமாகவும் இருக்கிறது.  ஒரு மேஜைக்கரண்டி மயோனீஸில் 94 கலோரிகள் இருக்கிறது.  அதில் 10 கிராம் கொழுப்பு இருப்பதுடன் வைட்டமின், தாதுக்கள், புரதம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் ஏதும் இல்லாத உணவு மயோனீஸ்.  மயோனீஸ் தவிர்த்து ஆரோக்கியம் நிறைந்த உணவுகள் சிலவற்றை பார்ப்போம். ஹங் கர்ட்:

தயிரை ஒரு முஸ்லின் துணியில் ஊற்றி இரவு முழுவதும் வெளியே கட்டி தொங்க விடுங்கள்.  காலையில் எழுத்து பார்த்தீர்களானால் தயிரின் தன்மை மாறி மயோனீஸ் போல் இருக்கும்.  மிகவும் க்ரீமியாக இருக்கும் இந்த தயிரின் ருசியும் அருமையாக இருக்கும். k9jp1638

 

ஹம்மஸ்:

வேகவைத்த கொண்டைக்கடலை, ஆலிவ் எண்ணெய், பூண்டு, வெங்காயம் மற்றும் மற்ற மசாலா பொருட்கள் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த ஹம்மஸ் கலோரிகள் குறைவான உணவு.  ஆனால் இதில் புரதம், ஆண்டிஆக்ஸிடண்ட் மற்றும் நார்ச்சத்து இருக்கிறது.

uha73gj

 

காட்டேஜ் சீஸ்:

கொழுப்பு குறைந்த மற்றும் புரதம் நிறைந்த இந்த காட்டேஜ் சீஸை மயோனீஸிற்கு பதிலாக சாப்பிடலாம்.  இதில் வெங்காயம், குடைமிளகாய், உப்பு மற்றும் மசாலா பொருட்கள் சேர்த்து உங்கள் ருசிக்கேற்ப புதுமையான ரெசிபி செய்து சாப்பிடலாம். 

771dg708

 

அவகாடோ:

அவகாடோவில் அதிகபட்ச ஆரோக்கிய நன்மைகள் உண்டு.  இதில் கொழுப்பு சத்து அதிகம் ஆனாலும் உடல் எடை குறைப்பிற்கு உதவும் பழம்.  இதனை நன்கு மசித்து வீட் ப்ரட் அல்லது சப்பாத்தி போன்றவற்றில் தடவி சாப்பிடலாம்.

9or3fov

நட் பட்டர்:

நாம் பயன்படுத்தும் வழக்கமான வெண்ணெய் போன்றில்லாமல் இந்த நட் பட்டரில் நிறைய கொழுப்பு இருக்கிறது.  பாதாம், ஹேசல் நட், கடலை, பிஸ்தா மற்றும் முந்திரி ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படும் இந்த நட் பட்டர் உடலுக்கு மிகவும் வலிமை சேர்க்கக்கூடியது.  இத்துடன் ட்ரை ஃப்ரூட்ஸ் சேர்த்தும் சாப்பிடலாம்.  இதனை சில மாதங்கள் வரை வைத்திருந்து சாப்பிடலாம். உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

சம்பந்தமுள்ள கட்டுரைகள்:
Advertisement
Advertisement