கோடைக்கால பழங்களின் கலோரிகளின் அளவு

இந்தியாவில் கோடைக்காலம் வந்துவிட்டால், உணவு பழக்கங்களில் மாற்றம் ஏற்படுவது வழக்கம்

एनडीटीवी फूड  |  Updated: June 12, 2018 17:41 IST

Reddit
Healthy Summer Fruits: The Exact Amount Of Calories In Your Favourite Summer Fruits!
Highlights
  • கோடைக்கால பழங்கள் அதிக ஊட்டச்சத்து நிறைந்ததாக இருக்கும்
  • வெயிலுக்கு, ஊட்டச்சத்து மிக்க பழங்கள் அதிக அளவில் சாப்பிட வேண்டும்
  • தர்பூசணியில் 90 சதவித தண்ணீர் உள்ளதால், வெயில் காலத்திற்கு ஆரோக்கியமானது
இந்தியாவில் கோடைக்காலம் வந்துவிட்டால், உணவு பழக்கங்களில் மாற்றம் ஏற்படுவது வழக்கம். அவ்வாறு, காய்கறிகள் பழங்கள் ஆகியவை ஜூஸ் வடிவிலும், லேசான உணவு வகைகளாகவும் எடுத்து கொள்ளப்படுகிறது. குறிப்பாக, கோடைக்கால பழங்கள் அதிக ஊட்டச்சத்து நிறைந்ததாக இருக்கும். அதுமட்டுமில்லாமல், கோடைக்காலத்து பழங்கள் சுவை கூடியவை, காலம் மாறும் போது சுவையும் குறைந்துவிடும்.
 
fruitsHealthy Summer Fruits: Eating seasonal has many health benefits

கோடைக்கால வெயிலுக்கு தினசரி உணவுகள் உடன், ஊட்டச்சத்து மிக்க பழங்கள் அதிக அளவில் சாப்பிட வேண்டும்.  சாலடாக, குளிர்பானமாக அல்லது பச்சை பழங்களை அப்படியே சாப்பிடலாம். எனினும்,  உடல் பாதிப்புகள் உள்ளவர்கள், மருத்துவரின் பரிந்துரையை கேட்டு குறிப்பிட்ட அளவில் சாப்பிடலாம் கோடைக்கால பழங்களில் இருக்கும் கலோரியின் அளவு(அமெரிக்க விவாசாய துறை கொடுத்த தகவலின்படி)

மாம்பழம்

கோடைக்கால பழங்கள் என்றாலே நினைவுக்கு வருவது மாம்பழங்கள். அதிக இரத்த சர்க்கரை அளவு உள்ளவர்கள் மாம்பழம் சாப்பிட கூடாது என்றாலும்,  கட்டுப்பாட்டான அளவில் எடுத்து கொண்டால், உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படாது. 100 கிராம் மாம்பழத்தில் 60 கலோரிகள் உள்ளன என அமெரிக்க விவசாய துறை கூறியுள்ளது.  அதனால், குறைந்த கலோரி உணவுகளுக்கு மாம்பழம் எடுத்து கொள்ளலாம்.
 
mangoesHealthy Summer Fruits: Mangoes have a bad rapport with health freaks
 
தர்பூசணிப்பழம்

தர்பூசணிப்பழம், முலாம் பழம் போன்ற வகையான பழங்கள் இந்தியாவில் கோடைக்காலத்திற்கு அதிகம் கிடைக்கக் கூடியவை. தர்பூசணியில் 90 சதவிதம் தண்ணீர் உள்ளதால், வெயில் காலத்திற்கு மிகவும் ஆரோக்கியமானது. 100 கிராம் தர்பூசணியில் 30 கலோரிகளும், முலாம்பழத்தில் 34 கலோரிகளும் உள்ளன. 

 
watermelonHealthy Summer Fruits: Watermelon is one of the best low-calorie summer fruits out there

பெர்ரி

மல்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி மற்றும் பல்சா போன்ற பெர்ரி வகை பழங்கள் இந்தியாவில் கிடைக்கின்றன. 100 கிராம் மல்பெர்ரியில் 43 கலோரிகளும், ஸ்ட்ராபெர்ரியில் 33 கலோரிகளும் உள்ளன. பல்சா பழங்களில் அதிக கலோரிகள் உள்ளன.

லிச்சி

ஆசிய நாடுகளில் அதிகம் விளைய கூடிய லிச்சி பழங்கள், கோடைக்காலத்திற்கு ஏற்ற பழமாக உள்ளது. பழச்சாறுகளில்,  காக் டெயில்களில், லிச்சி பழம் பயன்படுத்தப்படுகிறது. 100 கிராம் லிச்சி சாறு 66 கலோரிகள் கொண்டுள்ளது. 

செர்ரி

பாலைவனப் பகுதிகளில் பெரும்பாலும் இருக்க கூடிய செர்ரி பழங்கள், இந்தியாவிலும் கிடைக்கின்றன. இனிப்பு சுவை தரக்கூடிய பழம். செர்ரி பழச்சாறு செய்து குடிக்கலாம். 100 கிராம் செர்ரி பழத்தில் 50 கலோரிகள் உள்ளன.
 
cherriesCherries
 
சாத்துக்குடி

இந்தியாவின் பெரும்பாலன வீடுகளில், கோடைக்காலத்திற்கு சாத்துக்குடி வாங்கி வைத்திருப்பர்.  தோள், தலைமுடி,மற்றும் முழு உடல் ஆரோக்கியத்திற்கு சாத்துக்குடி பயன்படும்.  100 கிராம் சாத்துக்குடி சாறு 43 கலோரிகள் கொண்டிருக்கும். எனவே, குறைந்த கலோரி உணவாக உள்ளது.

sweet lime
Sweet lime ( Mosambi)

Commentsஇந்த கோடைக்கால பழங்கள், செயற்கை இனிப்புகள் மற்றும் வேறு பொருட்கள் சேர்க்காது, இயற்கையாக சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தரும். நீரிழிவு மற்றும் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளோர், மருத்துவரின் பரிந்துரை கேட்டு, இந்த பழங்களை குறிப்பிட்ட அளவு சாப்பிட வேண்டும்.

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Advertisement