குழந்தைகளுக்கு பிடித்த இனிப்பு சமோசாவை தயாரிப்பது எப்படி??

இனிப்பு சமோசாவை வீட்டிலேயே செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

Translated by: Kamala Thavanidhi  |  Updated: June 29, 2019 16:33 IST

Reddit
Recipe Video: Healthy, Sweet Samosa With Fruits Filling For Kids
Highlights
  • குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய ஸ்நாக்ஸ்களில் சமோசாவும் ஒன்று.
  • பழங்கள் நிரப்பப்பட்ட சமோசா ஆரோக்கியமானது.
  • வாழைப்பழம் மற்றும் ஸ்ட்ராபெர்ரி இரண்டுமே ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது.

உருளைக்கிழங்கு, பட்டாணி மற்றும் மசாலா சேர்த்து செய்யப்படும் சமோசாவை காரசாரமான சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டிருப்போம்.  சில குழந்தைகள் இதனை விரும்பி சாப்பிட மாட்டார்கள்.  ஆனால் குழந்தைகளுக்கு எப்போதுமே இனிப்பு சுவையின் மீது அலாதியான பிரியம் இருக்கும்.  எந்த ஒரு உணவிலும் இனிப்பு சுவை இருக்குமானால் அதனை விரும்பி சாப்பிடுவார்கள்.  அப்படி சாப்பிடக்கூடிய உணவுகளில் ஆரோக்கியம் இருக்கிறதா என்றால் அது சந்தேகம் தான்.  பழங்களை கொண்டு ஆரோக்கியமாகவும் ருசியாகவும் சமோசா எப்படி தயாரிக்கலாம் என்று பார்ப்போம்.  இந்த இனிப்பு சமோசாவில் வாழைப்பழம் மற்றும் ஸ்ட்ராபெர்ரி சேர்த்து தயாரிக்கப்படுவதால் ருசியும் ஆரோக்கியமும் நிறைந்திருக்கிறது. 

தேவையான பொருட்கள்: 
மைதா - ஒரு கப் 
கோதுமை - ஒரு கப் 
ஸ்ட்ராபெர்ரி - சிறிதளவு 
வாழைப்பழம் - சிறிதளவு 
மேஷ்மெல்லோ - ஒரு கப் 
உப்பு - தேவையான அளவு 
சர்க்கரை - தேவையான அளவு 
தண்ணீர் - தேவைக்கேற்ப
சாக்லேட் - ஒரு கப் 
பிஸ்கட் - ஒரு கப் 

செய்முறை: 
ஒரு பாத்திரத்தில் உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து அத்துடன் தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும். 
அதில் கோதுமை மற்றும் மைதா சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்து கொள்ளவும். 
பின் அதன் மேல் ஈரத்துணியை போட்டு 20 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும். 
ஊறியபின் அந்த மாவை தேய்த்து சப்பாத்தி போல் செய்து பாதியளவு வேகவைத்து எடுத்து கொள்ளவும். 
பின் அதனை ஓரங்களை வெட்டிவிட்டு, மூன்று பாகமாக வெட்டி கொள்ளவும்.  அதில் நறுக்கி வைத்துள்ள பழங்களை வைத்து சமோசா போல் மடித்து கொள்ளவும்.  
அடுப்பில் கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, சூடானதும் மடித்து வைத்துள்ள சமோசாவை போட்டு பொரித்து எடுத்து சூடாகவோ அல்லது ஆரியபின் சாப்பிடலாம். 
அதன்மேல், சர்க்கரை தூவி பரிமாறலாம். 

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement