பற்களை சுத்தமாக வைக்க கடுகு எண்ணெய்!!

கடுகு எண்ணெய் மற்றும் உப்பு ஆகிய இரண்டையும் கொண்டு பற்களை பிரகாசிக்க செய்யலாம். 

Edited by: Kamala Thavanidhi  |  Updated: April 03, 2019 17:14 IST

Reddit
Here's How Mustard Oil And Salt Help Keep Your Teeth Clean!
Highlights
  • வயது முதிர்ச்சி காரணமாக பற்களில் உள்ள எனாமல் பாதிப்படையும்.
  • கடுகு எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து பல் துளக்கினால் பற்கள் பளிச்சிடும்.
  • கடுகு எண்ணெய் வாயில் உள்ள கிருமிகளை அழிக்க வல்லது.

சருமம், கூந்தல், பற்கள் மற்றும் உடல் உறுப்புகள் என அனைத்தையுமே ஆரோக்கியமாக வைத்து கொண்டால் தான் நீங்கள் அழகாக காணப்படுவீர்கள்.  அதிலும் குறிப்பாக பற்கள்.  உங்கள் பற்கள் வெண்மையாக இருந்தால் தான் உங்கள் புன்னகை மற்றவரை ஈர்க்கும்.  பளிச் பற்கள் தான் எல்லோருடைய சாய்ஸ்.  ஆனால் நம் உணவு பழக்கம் மற்றும் வயது முதிர்ச்சி காரணமாக பற்கள் ஒளியிழந்தும் அசுத்தமாகவும் காணப்படும்.  உங்கள் பற்களின் அழகை பராமரிக்க வீட்டிலேயே சில எளிய பொருட்கள் உள்ளது.

mustard oil and sea salt

கடுகு எண்ணெய் மற்றும் உப்பு ஆகிய இரண்டையும் கொண்டு பற்களை பிரகாசிக்க செய்யலாம்.  பற்களில் மஞ்சள் கறை, பல் சொத்தை, ஈறுகளில் இரத்த கசிவு மற்றும் வீக்கம் போன்றவற்றை சரி செய்யவும் இவை பயன்படுகிறது.  பற்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும் சில விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

                  

  1. இனிப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவை அதிகம் உட்கொள்ளுதல்.
  2. பற்களை சரியாக சுத்தம் செய்யாமல் இருப்பது.
  3. பற்களில் உள்ள மஞ்சள் கறைகளை அகற்றாமல் இருப்பது.
  4. புகையிலை, பாக்கு போன்றவற்றை அதிகம் பயன்படுத்துவது.
  5. இரசாயணங்கள் நிறைந்த தண்ணீரை கொதிக்க வைக்காமல் குடிப்பது.கடுகு எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து பல் தேய்த்தால் பற்களில் உள்ள கிருகிகள் அழிந்து ஈறுகள் சுத்தமாகும். உப்பு பற்களில் உள்ள கறைகளை அகற்றி பளிச்சிட செய்யும்.  மேலும் ஈறுகளில் இரத்த கசிவு, வீக்கம் போன்றவற்றை சரிசெய்து விடும்.  ஒரு சிட்டிகை கல் உப்பு மற்றும் கடுகு என்ணெய் இரண்டையும் சேர்த்து கலந்து கொள்ளவும்.  தூள் உப்பு பயன்படுத்துவதற்கு முன் சூரிய ஒளியில் 3 மணி நேரம் வைத்திருந்து பின் பயன்படுத்தவும்.  இதில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து கலந்து பின் பல் மற்றும் ஈறுகளில் தேய்த்து 2 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும்.  இரண்டு நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் வாய் கொப்பளித்து விடவும்.  தொடர்ச்சியாக இப்படி செய்து வந்தால் பற்கள் சுத்தமாகவுன், பளிச் நிறத்திலும் இருக்கும். Listen to the latest songs, only on JioSaavn.com

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Advertisement