குளிர்காலத்தில் ஆரஞ்சு பழத்தை ஏன் சாப்பிட வேண்டும்?

சிட்ரஸ் பழத்திற்கு ஏற்றது குளிர்காலம். இதன் ருசிக்காக மட்டுமின்றி ஆரோக்கிய பண்புகளுக்காகவும் இதனை தினசரி சாப்பிடலாம்

एनडीटीवी फूड डेस्क  |  Updated: December 14, 2018 15:02 IST

Reddit
Here’s Why You Should Eat Oranges During Winters

சிட்ரஸ் பழத்திற்கு ஏற்றது குளிர்காலம். இதன் ருசிக்காக மட்டுமின்றி ஆரோக்கிய பண்புகளுக்காகவும் இதனை தினசரி சாப்பிடலாம். இதனால் உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வறண்ட சருமத்தை மென்மையாக்கி பொலிவாக செய்யும். மேலும் ஜீரண மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இதில் வைட்டமின் சி நிறைந்திருப்பதால், இருதய நோய்கள், சிறுநீரக கற்கள், நோய் தொற்று ஆகியவற்றை தடுக்கும் தன்னை ஆரஞ்சு பழத்திற்கு உண்டு. உடலில் உள்ள நச்சுத்தன்மையை அகற்ற சிறந்த உணவு. ஆரஞ்சு பழத்தின் சில நன்மைகளை பார்ப்போம்.

உடல் எடை குறைய
ஆரஞ்சு பழத்தில் நார்ச்சத்து மிகுதியாக இருப்பதால் செரிமானத்தை அதிகரித்து உடல் எடையை குறைக்கும். இதனால் மலச்சிக்கல் தவிர்க்கப்படும். ஆரஞ்சு பழச்சாறு அருந்தும்போது வடிகட்டிவிட்டு குடிப்பது தவறு. வடிகட்டுவதால் அதில் இருக்கக்கூடிய நார்ச்சத்து நீக்கப்படுகிறது.

சரும ஆரோக்கியத்திற்கு
நோய் எதிர்ப்பு சக்தி, சரும ஆரோக்கியம் மற்றும் ஜீரண மண்டலம் ஆகியவற்றை ஆரோக்கியமாக வைத்திருக்கும். வைட்டமின் சி நிறைந்த இந்த ஆரஞ்சு பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை உண்டு. தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிட்டு வந்தால் சருமம் ஆரோக்கியமாகவும் பொலிவாகவும் இருக்கும்.

சளியை போக்க
ஆரஞ்சு பழம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதால் சளி தொல்லை நீங்கிவிடும். வைட்டமின் சி நிறைந்திருப்பதால் சளி, இருமல் ஆகியவை நெருங்காது.

இருதய பலப்படும்
ஆரஞ்சு மற்றும் திராட்சை பழங்களில் சிட்ரஸ் அமிலம் நிறைந்திருக்கிறது. இதனை தினசரி சாப்பிட்டு வந்தால் பக்கவாதம், இருதய நோய்கள், வீக்கம் போன்றவை குணமாவதோடு இரத்த நாளங்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

சிறுநீரக ஆரோக்கியத்திற்கு
சிறுநீரில் சிட்ரேட் பற்றாக்குறை ஏற்படும்போது தான் சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகும். சிட்ரஸ் அமிலம் நிறைந்த பழங்களை சாப்பிடுவதால் சிட்ரேட் தன்மை அதிகரித்து கற்கள் உருவாவதை தடுக்க முடியும்.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement