சளி தொல்லைக்கு சிறந்த நிவாரணம் அளிக்கும் தேன்!

குளிர்காலத்தில் சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற உடல் உபாதைகள் ஏற்படும். இவற்றை உண்டாக்கும் பாக்டீரியாக்கள் காற்றில் நிறைந்திருக்கும்

एनडीटीवी फूड डेस्क  |  Updated: December 28, 2018 20:15 IST

Reddit
Winter Care: Here's How Just A Teaspoon of Honey May Help Soothe Cold and Cough

குளிர்காலத்தில் சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற உடல் உபாதைகள் ஏற்படும். இவற்றை உண்டாக்கும் பாக்டீரியாக்கள் காற்றில் நிறைந்திருக்கும். குளிர்ந்த மற்றும் துரித உணவுகள் உடலுக்கு பெரும் தீங்கு விளைவிக்க கூடியதாக இருக்கும். குறிப்பாக ஏரேட்டட் ட்ரிங்க்ஸ், ஐஸ் க்ரீம் ஆகியவை தவிர்க்க வேண்டிய ஒன்று. உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்தி மற்றும் ஆண்டிஆக்ஸிடண்ட் இருக்கக்கூடிய உணவு பொருட்களே நோய் தொற்றுக்களில் இருந்து நம்மை பாதுகாக்கும். அதில் முக்கியமானது தேன். தேனின் நன்மைகள் குறித்து பார்ப்போம்.

எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க

தேனில் இயற்கையாகவே ஆண்டிஆக்ஸிடண்ட் நிறைந்திருக்கிறது. இதில் தாதுக்கள் மற்றும் வைட்டமின் சி, டி, ஈ, கே மற்றும் பி மற்றும் பீட்டா கெரட்டின் அடங்கியிருக்கிறது. தேன் சாப்பிட்டு வந்தால் தூக்கம் சிறப்பாக இருக்கும். இதில் ஆண்டிமைக்ரோபியல் தன்மை இருப்பதால் சலி தொல்லையில் இருந்து விடுபடலாம்.

cough

 

இரண்டு தேக்கரண்டி தேனை வெந்நீருடன் கலந்து சாப்பிட்டு வந்தால் சளி தொல்லை இருக்காது. தினமும் காலை எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து வெந்நீரில் கலந்து குடித்து வரலாம். இது உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலில் உள்ள நச்சுக்களை அகற்றிவிடும்.


தேன் மற்றும் மிளகு

ஒரு கப் தண்ணீரில் அரை தேக்கரண்டி துளசி சாறு, அரை தேக்கரண்டி மிளகு, அரை தேக்கரண்டி நறுக்கிய இஞ்சி சேர்த்து கொதிக்க வைக்கவும். இத்துடன் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து குடித்து வந்தால் சளி தொல்லையில் இருந்து விடுபடலாம்.

Commentsஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Advertisement