3 புதுமையான மாம்பழ ஃபேஸ் பேக்

இதோ மாம்பழத்தை வைத்து இயற்கையாக சருமத்தின் tanயை போக்க உதவும் சில ஃபேஸ் பக்குகள்

Deeksha Sarin  |  Updated: June 20, 2018 01:57 IST

Reddit
Here's How You Can Detan Naturally Using Mango Pulp
Highlights
  • இயற்கையான மாம்பழ பாக்ஸ்கு பல நன்மைகள் உண்டு
  • மாம்பழத்தை முகத்திற்க்கு ஃபேஸ் பக்குகளாக பயன்படுத்தலாம்.
  • இந்த கோடைகால பழம் பிடிவாதமான சருமத்தின் கருமையை போக்க உதவுகிறது.

சம்மர் முழுவீச்சில் இருக்கும் நிலையில் மாம்பழம் போன்ற கோடைகால பழங்களை  எடுத்துக் கொள்ளவேண்டும். மாம்பழம் சுவையானது மட்டுமில்லை அதில் சருமத்திற்கு தேவையான சத்துகளும் இருக்கிறது. இதை உண்பதால் ஒட்டுமொத்த உடல்நலத்திற்கும் பயனளிக்கிறது. அதுமட்டுமில்லாமல் இதை முகத்திற்கும் பயன்படுத்தலாம். வெயிலால் கருமையான முகத்தை சரி செய்ய எண்ணற்ற அழகுக் குறிப்புகளை செய்திருப்போம்.பெரும்பாலும் மாம்பழத்தை வைத்து முயற்சி செய்திருக்க மாட்டோம். இதோ மாம்பழத்தை வைத்து இயற்கையாக சருமத்தின் tanயை போக்க உதவும் சில ஃபேஸ் பக்குகள். இதை எப்படி பயன்படுத்துவது என்பதை தெரிந்துக் கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

  1. மாம்பழப் ஃபேஸ் பக் (Mango pulp face pack)

பலருக்கு ஒரே மாதிரியான நிறத்தை கொண்ட முகத்தை பெற வேண்டும் என்பது கனவாகயிருக்கலாம்.உங்கள் கனவு நினைவாக மாம்பழம் உதவுகிறது. மாம்பழத்திலிருக்கும் exfoliating பொருட்கள் உங்கள் ஸ்கினை ஹைட்ரெட் செய்கிறது.மாம்பழத்தின் சதைப் பகுதியை எடுத்து 2 முதல் 3 நிமிடம் முகத்தில் கையால் தடவிக் கொண்டேயிருங்கள் பின்பு 5 நிமிடம் ஊறவைத்து  பின்பு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவுங்கள். சருமத்தின் நிறத்தை அதிகரிக்க இது உதவும்.சிறந்த முடிவிற்கு வாரத்திற்கு மூன்று முறைகள் செய்யுங்கள்.


mango pulp
  1. மாம்பழம் மற்றும் கடலை மாவு ஃபேஸ் பக் (Mango and Besan face pack)

இந்த குறிப்பிட்ட ஃபேஸ் பக் உங்கள் சருமத்தின் கருமையை போக்க சிறப்பாக உதவும்.இந்த ஃபேஸ் பக் செய்யும் முறை, நன்கு பழுத்த மாம்பழத்தின் சதை,  2 டீஸ்புன் கடலை மாவு, ½ டீஸ்பூன் தேன் மற்றும் சில பாதாம்கள். முதலில் மாம்பழத்தின் சதையை ஒரு கின்னத்தில் போட்டு அதில் கடலை மாவு, ½ டீஸ்பூன் தேன் மற்றும் சில பாதாம்களை போட்டு  இவை பேஸ்ட் போன்ற கன்சிஸ்டிங்கை பெறும் வரை நன்றாக கலக்க வேண்டும்.பின்பு மெதுவாக முகத்தில் தடவி 10-12 நிமிடங்கள் ஊறவைத்து பின்பு முகத்தை தண்ணீரால் கழுவ வேண்டும்.இரண்டு முறை இந்த ஃபேஸ் பக்கை போட்டு முடிவுகளை பாருங்கள்.


mango puree
  1. மாம்பழம் மற்றும் தயிர் ஃபேஸ் பக்(Mango and curd face pack)

எண்ணெய் சருமத்தை உடையவரா நீங்கள் இந்த ஃபேஸ் பக் உங்களுக்கு ஏற்றது. மாம்பழத்தின்  நன்மைகளுடன் இதில் தயிர் மற்றும் தேன்னின் நன்மையும் இருக்கிறது. இந்த கிட்சனில் இருக்கும் பொருட்களை வைத்து உங்கள் சருமத்தின் கருமையை போக்கலாம்.மாம்பழத்தின் சதை,1 டீஸ்பூன் தயிர் மற்றும் 1 டீஸ்பூன் தேன் முதலியவற்றை திக்காக கலந்து முகத்தில் தடவ வேண்டும். 10 நிமிடத்திற்கு பிறகு முகத்தை கழுவ வேண்டும்.  

curd face pack

 


 

About Deeksha SarinAn eccentric foodie and a die-hard falooda lover, Deeksha loves riding scooty in search of good street food! A piping hot cup of adrak wali chai can make her day bright and shiny!

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement
 
Listen to the latest songs, only on JioSaavn.com