ஆரோக்கியமான பற்களுக்கு இயற்கை டூத்பேஸ்ட்!

இந்த கெமிக்கல் உலகில், நமது சமையல் பொருட்கள் நம்மை சில வழிகளில் காப்பாற்றும்

Sarika Rana  |  Updated: July 20, 2018 20:30 IST

Reddit
Here's How You Can Make Your Own Natural Toothpaste At Home!

இந்த கெமிக்கல் உலகில், நமது சமையல் பொருட்கள் நம்மை சில வழிகளில் காப்பாற்றும். தோல், உடல் பராமரிப்பு மற்றும் உங்கள் வாய்வழி சுகாதாரத்திற்கும் நம் வீட்டிலேயே தீர்வு இருக்கிறது. அந்த வகையில் பற்பசையையும் வீட்டிலேயே செய்யலாம். 

தேவையானப் பொருட்கள்

  • சமையல் சோடா
  • உப்பு
  • பெப்பெர்மிண்ட் எசென்ஷியல் ஆயில் 
  • வடிகட்டிய நீர்


natural toothpaste

பேக்கிங் சோடா, உப்பு, மற்றும் பெப்பெர்மிண்ட் எசென்ஷியல் ஆயில் ஆகியவற்றை ஒன்றாக கலந்து கொள்ளவும். கொஞ்ச கொஞ்சமாளதனுடன் தண்ணீர் சேர்க்கவும். பேஸ்ட் அதன் தேவையான நிலைத்தன்மையும் அடையும் வரை தண்ணீர் சேர்த்து கலக்கவும். ஈஸியான இயற்கையான பேஸ்ட் ரெடி!

பேக்கிங் சோடா உங்கள் பற்களை சுத்தம் செய்யும். இது நச்சுத்தன்மையற்ற இது வாய்க்குள் ஆல்கலைன் தன்மையை அதிகரிக்கிறது.  இதனால் அமிலத்தன்மையின் அரிப்பைத் தடுக்கிறது.
உப்பு கறையை அகற்ற உதவுகிறது, மேலும் பற்கள் பிரகாசிக்க உதவுகிறது.  

Listen to the latest songs, only on JioSaavn.com

natural toothpaste

பெப்பெர்மிண்ட் எசென்ஷியல் ஆயில் சுவாசத்தின் போது புத்துணர்வு கொடுக்கிறது. அது மட்டும் அல்லாமல் அது உங்கள் வாயில் இருக்கும்  பாக்டீரியாவையும் இது அழிக்கும். நீங்கள் எசென்ஷியல் ஆயில் பயன்படுத்த முடியாமல் போனால், சில புதினா இலைகளை உபயோகிக்கலாம். 

தண்ணீர் பல் இடுக்கில் தங்கியிருக்கும் உணவு துகள்களை சுத்தம் செய்கிறது. 
உங்கள் பற்களை நன்கு சுத்தம் செய்ய பேஸ்ட் போலவே இந்த பற்பசையை பயன்படுத்தலாம்.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

சம்பந்தமுள்ள கட்டுரைகள்:
Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement