சாப்பிடும் முன் உணவைச் சுற்றி தண்ணீர் தெளிப்பது ஏன் தெரியுமா?

Sarika Rana  |  Updated: June 18, 2018 17:35 IST

Reddit
Here's What The Ancient Practice Of Sprinkling Water Around Food Meant!
Highlights
  • முன்னோர்கள் விட்டுச் சென்ற பாரம்பரிய பழக்கங்களுக்கு அறிவியல் காரணங்கள் உண
  • சாப்பிடும் தட்டைச் சுற்றி தண்ணீர் தெளிப்பது ஒரு பாரம்பரிய வழக்கம்
  • இந்த பழக்கம் இன்றளவும் வட மற்றும் தென்னிந்தியாவில் வழக்கத்தில் உள்ளது.
நம் முன்னோர்கள், நம்முடைய கலாச்சாரத்தின் இன்றிமையமையாத அங்கமாக மாறிவிட்ட பல்வேறு பாரம்பரிய பழக்கங்களை விட்டுச் சென்றிருக்கின்றனர். பல்வேறு பின்புலங்களைக் கொண்ட இந்த பழக்கங்களை நாம் மறந்துவிட்டோம். இதில் ஒன்று தான் சாப்பிடும் தட்டு அல்லது இலையைச் சுற்றி வட்டமாக மூன்று முறை தண்ணீர் தெளிப்பது. இந்த பழக்கம் இன்றும் வட மற்றும் தென்னிந்தியாவின் பெரும்பாலான இடங்களில் வழக்கத்தில் உள்ளது. தெய்வங்களிடம் இருந்து ஆசீர்வாதம் பெறுவது தான் இதன் பொதுவான நம்பிக்கையாக இருந்தாலும், அது மட்டும் தான் ஒரே காரணமா அல்லது சாப்பிடும் தட்டைச் சுற்றி தண்ணீர் தெளிப்பதில் வேறு ஏதேனும் முக்கியத்துவம் இருக்கிறதா?ஆன்மிகத்தில் இதன் முக்கியத்துவம்:

சாப்பாட்டைச் சுற்றி தண்ணீர் தெளிப்பது “சாப்பிட உணவு தந்து ஆசீர்வதித்த கடவுளுக்கு நன்றி தெரிவிப்பதை” குறிக்கிறது. ஒரு சில மக்கள் உணவின் சிறு பகுதியை சாப்பிடும் முன்பு இயற்கையை நிர்வகிக்கும் கடவுளுக்கு படையலாக எடுத்து வைக்கின்றனர். இந்த பழக்கம் சித்ராஹுதி என்றழைக்கப்படுகிறது. இது பழமையான வழக்கமாக இருந்தாலும் பிராமண சமூகத்தைச் சேர்ந்த பலர் இதை இன்றும் கடைபிடிக்கின்றனர்.
 
food

எதார்த்தமான காரணம்:

இந்த பழக்கம் பழங்காலத்தில் முனிவர்களால் தொடங்கப்பட்டதாக நம்பப்படுகிறது. அவர்கள் பெரும்பாலும் தங்களுடைய வாழ்க்கையை காடுகளில் தான் கழித்தனர்.அங்கு கான்கிரீட் அல்லாத தரையில் அமர்ந்து தான் உண்ண வேண்டும். அதுமட்டுமில்லாமல் உணவு பெரும்பாலும் வாழை இலைகளில் தான் பரிமாறப்படும். உணவு மண்தரைகளில் பட்டு ஆரோக்கியமற்றதாக இருக்க வாய்ப்புள்ளது, அதனால் தான் அதைச் சுற்றியுள்ள மண் மற்றும் தூசிகளை சுத்தம் செய்வதற்காக தட்டைச் சுற்றி தண்ணீர் தெளிக்கப்படுகிறது.

மற்றுமொரு காரணம் வெளிச்சம் இல்லாத இரவு நேரங்களில் பூச்சிகளை விலக்கி வைப்பதற்கு தண்ணீர் தெளிப்பது சிறந்த வழியாக இருக்கிறது. எறும்பு அல்லது பூச்சிகள் தண்ணீரை தாண்டி செல்ல முடியாது எனக் கூறப்படுகிறது.
 
water

மற்ற கதைகள்:

ஒரு சிலர் இந்திய உணவுகளில் அதிகமாக காரம் மற்றும் அமில பொருட்கள் இருக்கின்றன என்றும், இதனால் சிறிதளவு தண்ணீர் உணவின் மீதும், சுற்றியும் தெளிப்பது இதை சமன்செய்ய பயன்படும் என்றும் நம்புகின்றனர்.

மற்றொரு கதை இந்திய உணவுகளில் அதிக அளவில் அரிசி மற்றும் ஸ்டார்ச் பொருட்கள் இருக்கிறது என்றும் சிறிதளவு தண்ணீர் தெளிப்பதனால் ஸ்டார்ச் அளவு நீர்த்துப்போகச் செய்து செரிமானத்தை எளிதாக்கும் என்று நம்புகின்றனர்.

Commentsஇன்று கான்கிரீட் வீடுகளின் வளர்ச்சியால் இந்த பழக்கம் பயனின்றி போகியிருக்கலாம். ஆனாலும் முன்னோர்களால் உருவாக்கப்பட்ட இந்த பாரம்பரியமான பழக்கத்தை சிலர் இன்றும் கடைப்பிடிக்கின்றனர். எனவே அடுத்த முறை யாராவது சாப்பிடும் உணவு அல்லது தட்டின் மீது தண்ணீர் தெளித்தால் ஏனென்று உங்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும்.

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Advertisement