எந்த நேரம் அதிகளவு உணவினை சாப்பிடலாம்… ? ஆயுர்வேதம் கூறும் பதில் இதுதான்

சூரியன் மதியத்தில் தீவிரமான வெப்பத்தை வெளியிடுவது போல் நம் உடலின் செரிமானமும் மதியம் தான் அதிகமாக உள்ளதாக தெரிவிக்கிறது. சூரியன் மறையும் மாலை நேரத்தில் குறைவாக சாப்பிடவே அறிவுறுத்துகிறது.

Translated by: Saroja  |  Updated: March 14, 2019 14:07 IST

Reddit
Here's Why Ayurveda Says Lunch Should Be Your Biggest Meal Of The Day

நம்மில் பலருக்கும் நீண்ட காலம் சந்தேகம் இருப்பதுண்டு. எந்த நேரத்தில் அதிகளவு உணவு சாப்பிடலாம். சிலர் காலை நேர உணவை ராஜாவை போல் சாப்பிட வேண்டும் என்று கூறுவதைப் பார்க்கலாம்.  நாளின் வேலை நேரம் தொடங்கும் நேரத்தில் தேவையான சக்தியைப் பெற நிச்சயம் உதவும். நிபுணர்கள் சிலர் உணவை இரண்டாகப் பிரித்து சாப்பிடுவதை வழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டுமென்கின்றனர். இரவு உணவை எளிமையாக சாப்பிடவே வலியுறுத்துகின்றனர். 

ஒவ்வொரு நாளும் தொடங்கும்போது நேரம் கூடக் கூடத்தான் உடலின் வளர்சிதை மாற்றம் அதிகரிக்கிறது. மாலை  நேரத்தில் உடலின் செரிமான சக்தி குறையவே செய்யும். இரவு அதிக உணவு சாப்பிட்டால் செரிமானம் செய்வது மிகவும் சிரமமான ஒன்றாகவே இருக்கும். அதனால் மாலையில் உணவைக் குறைத்துக் கொள்ளவது நல்லது.

 ஆயுர்வேத முறை நம்முடைய உணவு எடுத்துக் கொள்ளும் முறை மற்றும் செரிமானத்தை வைத்து செயல்படக்கூடிய மருத்துவமுறையாகும். ஒட்டுமொத்த உடல் நலனுக்கும் செரிமானத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆரோக்கியமற்ற செரிமான முறை உடல் எடை அதிகரிப்பு, மலச்சிக்கல், வயிறு உப்புசம், அமிலத்தன்மை ஆகியவற்றிக்கு காரணமாக அமைகிறது.  

lunch recipes
 

ஆயுர்வேதத்தில் உடலின் செரிமான முறையை அக்னி என்று குறிப்பிடுவது வழக்கம். நம் உடலின் செரிமான சக்தியை சூரியனைப் போன்று செயல்படுவதாக ஆயுர்வேதம் கூறுகிறது. சூரியன் மதியத்தில் தீவிரமான வெப்பத்தை வெளியிடுவது போல் நம் உடலின் செரிமானமும் மதியம் தான் அதிகமாக உள்ளதாக தெரிவிக்கிறது. சூரியன் மறையும் மாலை நேரத்தில் குறைவாக சாப்பிடவே அறிவுறுத்துகிறது. 

இது குறித்து ஆயுர்வேத நிபுணரான டாக்டர் தன்வந்திரி தியாகி கூறுகையில் “ உங்களி உடலின் பயோலாஜிக் கிளாக் இயற்கையின் இயல்பான சக்திகளின் தொந்தரவால் மாற்றமடையலாம். உங்கள் ஆரோக்கியம், வாதம், பித்தம், கபம் ஆகியவை சமச்சீர் நிலையில் இருந்தால் உடல் ஆரோக்கியமாகவே  இருக்கும். ஆரோக்கியமான செரிமானத்திற்கு பித்தம் மிகவும் முக்கிய பங்காற்றுகிறது. மதிய உணவு சாப்பிடும் நேரமான காலை 10 மணி முதல் 2 மணி வரை உடலின் பித்தம் மேம்பட்ட நிலையில் இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் சாப்பிடும் உணவும் எளிதாக சீரணமடைந்து விடும். 

இந்த நேரத்தில் நீங்கள் விரும்பியபடி உணவை அளவை பற்றி நினைக்காமல் சாப்பிடலாம். சர்க்கரையான, கொழுப்பு சத்துள்ள உணவினை சாப்பிட்டாலும் நன்றாக செரித்து விடும். என்று கூறுகிறார். 

Listen to the latest songs, only on JioSaavn.com

டாக்டர் தியாகி மேலும் கூறியது “ இது ஆரோக்கியமாக இருக்கும் நபர்களுக்கு மட்டுமெ பொருந்தும். சிலர் நோய்களின் மருத்து சாப்பிட்டுக் கொண்டிருப்பவர் என்றால் அவர்களுக்கு இது பொருந்தாது. நீங்கள் ஒரு சர்க்கரை நோயாளியாக இருந்தால் மதிய உணவில் அதிகம் சர்க்கரை உள்ள உணவை எடுத்துக் கொண்டால் அது உடலின் சர்க்கரையின் அளவை பாதிக்கும். 

நாள் முழுவதும் ஹெவியான உணவுகளை எடுத்துக் கொண்டால் உடலின் களைப்பு அதிகரிக்கவே செய்யும். மேலும் உடலின் நச்சுத்தன்மையையும் அதிகரிக்கிறது. இரவு உணவை சூப், சாலட்வகைகள், ஆவியில் வேகவைத்த காய்கறிகள் ஆகியவற்றை சாப்பிடலாம். 

Commentsஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
Tags:  AyurvedaLunch

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement