நீங்கள் ஏன் டார்க் சாக்லேட் சாப்பிட வேண்டும்?

சாக்லேட் சாப்பிடுவதால் உடல் எடை குறைத்து அழகான வடிவத்தைப் பெற முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது.  ஏனென்றால் சாக்லேட்டில் 70% கோகோவும் குறைந்த அளவு சர்க்கரையும் இருப்பதால் இது சாத்தியமாகிறது.

Edited by: Kamala Thavanidhi  |  Updated: March 26, 2019 13:38 IST

Reddit
weight Loss: Here's Why You Should Snack On Dark Chocolate To Stay In Shape
Highlights
  • Dark chocolate is known to decrease body fat.
  • Hundred grams of dark chocolate (70% cocoa) contains around 9 grams of fi
  • Eating dark chocolate helps improve fat metabolism

சாக்லேட் சாப்பிட்டால் உடல் குறையுமா? ஆம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?  உண்மைதான். சாக்லேட் சாப்பிடுவதால் உடல் எடை குறைத்து அழகான வடிவத்தைப் பெற முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது.  ஏனென்றால் சாக்லேட்டில் 70% கோகோவும் குறைந்த அளவு சர்க்கரையும் இருப்பதால் இது சாத்தியமாகிறது. சாக்லேட்டால் எந்த அலர்ஜியும் இல்லாதவர்கள் தங்கள் டயட்டில் தாரளமாக பயன்படுத்தலாம். ஆனால், சாக்லேட்டில் நீங்கள் பால் மற்றும் சர்க்கரை சேர்த்து சாப்பிடும்போது கோகோவின் அளவு மாறி அது கலோரியை அதிகப்படுத்திவிடும். நிச்சயம் உங்களுக்கு அது பலனளிக்காது. 

dark chocolate

 மற்ற ஹெல்தி ஸ்நாக்ஸ்களோடு இந்த டார்க் சாக்லேட்டை முதலிடத்தில் வையுங்கள். டார்க் சாக்லேட் உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கும். தொடர்ந்து டார்க் சாக்லேட் சாப்பிடுவதால், ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கும், மெட்டபாலிஸத்தை தூண்டி எனர்ஜியை தரும். அதற்கும் மேலாக டார்க் சாக்லேட்டில் நார்ச்சத்து உள்ளது. 100 கிராம் டார்க் சாக்லேட்டில் (70% கோகோ)  9 கிராம் நார்ச்சத்து உள்ளது.  இது கீரை, கொய்யா மற்றும் ஓட்ஸை விட அதிக அளவு கொண்டது. டார்க் சாக்லேட் கலந்த டோனட்ஸ், மக்கரோன்ஸ் மற்றும் பை வகை உணவுகள் பெஸ்ட் சாய்ஸ்.

fjvr7gho

  உணவு இடைவேளையில் டார்க் சாக்லேட் சாப்பிடுவதால் மற்ற ஜங்க் ஃபுட் வகைகள் சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். அதற்காக டார்க் சாக்லேட்டை அதிக அளவு சாப்பிடுவது நல்லதல்ல. சிறிய துண்டுகள் அல்லது டார்க் சாக்லேட் கலந்த ஷேக் வகை பானங்கள் அருந்தலாம். வீட்டிலேயே டார்க் சாக்லேட் பயன்படுத்தி ரெசிப்பிகள், ஸ்வீட்கள், ஷேக்குகள் செய்து சாப்பிடுங்கள்.

Commentsஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement