உயர் இரத்த அழுத்த பாதிப்பு இருக்கிறதா? இதை படியுங்கள்!!!

குறிப்பாக மூச்சு பிரச்சனை உள்ளவர்கள் அதிமதுரத்தை தினசரி பயன்படுத்தலாம். 

Translated by: Kamala Thavanidhi (with inputs from ANI)  |  Updated: May 28, 2019 11:11 IST

Reddit
Hypertension Diet: High BP Patients Must Know Of This Dangerous Side-Effect Of Herbal Licorice Tea

அதிமுதுரம், அதன் மருத்துவ குணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.  உலகம் முழுவதும் இந்த அதிமதுரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.  அதிமதுரத்தில் டீ அல்லது காபி போட்டு குடித்து வந்தால் செரிமானம் சிறப்பாக இருக்கும்.  குறிப்பாக மூச்சு பிரச்சனை உள்ளவர்கள் அதிமதுரத்தை தினசரி பயன்படுத்தலாம்.  நுரையீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து, செரிமானம் மண்டலத்தை சிறப்பாக இயங்க வைக்கும் தன்மை அதிமதுரத்திற்கு உண்டு.  ஆனால், சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் அதிமதுரத்தின் பக்க விளைவுகள் குறித்து சொல்லப்பட்டுள்ளது.  உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள் அதிமதுரத்தில் தயாரிக்கப்பட்ட டீ குடிப்பதால் பக்க விளைவுகள் ஏற்படுகின்றன.  மூலிகை பொருட்களை எப்போதும் அளவாகவே பயன்படுத்த வேண்டும்.  அளவுக்கு அதிகமாக பயன்படுத்தும்போது அவை உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியதாய் அமையும்.  அதிமதுரம் உடலில் இரத்த அழுத்தத்தை அதிகரிக்க செய்யும்.  உடலில் நீரிழப்பு ஏற்பட செய்து பொட்டாசியத்தின் அளவையும் குறைக்கிறது.  பொட்டாசியம் என்பது உடலில் இரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவக்கூடியது.  சமீபத்தில் 84 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.  அதில் அவருக்கு இரத்த அழுத்தம் உயர்வாக இருந்ததுடன் தலைவலி, நெஞ்சு வலி, சோர்வு, மூட்டுகளில் வலி மற்றும் வெளிச்சத்தை கண்டால் அலர்ஜி போன்ற பிரச்சனைகள் இருந்தன.  அவரை பரிசோதித்ததில் அவருக்கு ஏற்கனவே உயர் இரத்த அழுத்தம் இருந்தது தெரிய வந்தது.  அத்துடன் நாள் ஒன்றுக்கு இரண்டு முறை என இரண்டு வாரங்களாக அதிமதுர டீ குடித்து வந்ததாகவும், அதன் விளைவாகவே உடல் உபாதைகள் ஏற்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.  

Listen to the latest songs, only on JioSaavn.comஇதனை தொடர்ந்து மருத்துவர்கள் கூறுவதாவது, உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள் அதிமதுரத்தை அளவாக பயன்படுத்துவது நல்லது அல்லது மருத்துவர்களின் பரிந்துரைப்படி பயன்படுத்தலாம் என்று தெரிவித்தனர். 

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement