அதிகபடியான புரதம் சிறுநீரகத்தை பாதிக்குமா??

உங்கள் உணவில் பீன்ஸ், நட்ஸ், இறைச்சி, கொழுப்பு குறைவான பால் பொருட்கள், முட்டையின் வெள்ளைக்கரு, பருப்பு வகைகள் போன்ற புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடலாம். 

  |  Updated: April 27, 2019 12:49 IST

Reddit
Weight Loss: Are High Protein Diets Safe For People With Kidney Problems?
Highlights
  • அதிகபடியாக புரதம் சாப்பிடும்போது சிறுநீரகம் பாதிக்கும்.
  • சிறுநீரகத்தின் இயக்கத்தை பொருத்துதான் புரதம் உட்கொள்ள வேண்டும்.
  • உடல் ஆரோக்கியத்திற்கு முக்கிய தேவை புரதம்.

பொதுவாகவே புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடும்போது உடல் எடை குறையும்.  புரதம் நிறைந்த உணவில் நமக்கு 50-55% கலோரிகள் கிடைக்கிறது.  உடல் ஆரோக்கியம் சீராக இருப்பவர்கள் அதிக புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் எந்த பிரச்னையும் இல்லை.  ஆனால், சிறுநீரக கோளாறு உள்ளவர்கள் புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏன் புரதத்தை தவிர்க்க வேண்டும்?

புரதம் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட்டால் சிறுநீரகத்தின் செயல்பாடுகள் பாதிக்கும்.  மேலும் பாதிக்கப்பட்டவர்களின் உடல் எடை, ஆரோக்கியம் மற்றும் வயதை பொருத்து சிறுநீரகத்தின் பாதிப்பு மாறுபடும்.  அதற்காக புரதத்தை முற்றிலுமாக உணவிலிருந்து தவிர்க்க வேண்டும் என்றில்லை.  ஆனால் எல்லா ஊட்டச்சத்துக்களும் சமமாக இருக்கும்படி சாப்பிட்டால் எந்த பிரச்னையும் இருக்காது.  

7tgj43pg

உணவில் பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் சோடியம் இருக்குமானால், புரதத்தை கவனத்தில் கொண்டு சேர்த்து கொள்ளுங்கள்.  சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்களின் சிறுநீர் வெளியேறும் அளவு மற்றும் டையாலிஸ் அமைப்பு பொருத்துதான் அவர்கள் நீராகங்களை எடுத்து கொள்ள வேண்டும்.  நாட்பட்ட சிறுநீரக பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்கள், இறைச்சி, முட்டை, சோயா புரதம், நட்ஸ், பீன்ஸ் போன்ற புரதம் நிறைந்த உணவை சாப்பிடுவதை தவிர்க்கலாம்.  சிறுநீரகத்தின் ஆரோக்கியம் மேம்பட சில குறிப்புகள் இங்கே....

                

1. உங்கள் உடலை எப்போதும் ஹைட்ரேட்டடாக வைத்து கொள்ளுங்கள். 

2. ஊட்டச்சத்துகள் சமமாக இருக்கும் உணவை தினசரி உட்கொண்டாலே போதும்.  நோயின்றி வாழலாம்.  உங்கள் உணவில் வைட்டமின் மற்றும் மினால் இருக்குமாறு பார்த்து கொள்ளவும்.  பொரித்த, பதப்படுத்தப்பட்ட மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிட வேண்டாம். 3. உடற்பயிற்சி செய்து உடலை ஃபிட்டாக வைத்து கொண்டாலே போதும்.  நீரிழிவு நோய், சிறுநீரக கோளாறுகள் இல்லாமல் இருக்கலாம்.  உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு சிறுநீரக கோளாறுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம். 4. உடல் ஆரோக்கியத்தின் மீது அக்கறை செலுத்த வேண்டும்.  மேலும் அடிக்கடி மருத்துவரிடம் உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். உடல் எடை குறைய:

உடல் எடை குறைப்பில் ஈடுபடுபவரானால், நீங்கள் உங்கள் உணவில் பீன்ஸ், நட்ஸ், இறைச்சி, கொழுப்பு குறைவான பால் பொருட்கள், முட்டையின் வெள்ளைக்கரு, பருப்பு வகைகள் போன்ற புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடலாம்.  எண்ணெயில் பொரித்த உணவு மற்றும் துரித உணவுகளை தவிர்த்திட வேண்டும்.  கார்போஹைட்ரேட், நார்ச்சத்து நிறைந்த உணவை சாப்பிடும்போது உடல் எடை தானாக குறையும். 

Listen to the latest songs, only on JioSaavn.com

Commentsஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement