இனி மாதவிடாய் வலியால் அவதிப்பட வேண்டாம்!

மாதவிடாய் வலிக்கு எவ்வித மருந்துகளும் உட்கொள்ளாமல் இயற்கையான முறையில் எப்படி சரி செய்வது

 , NDTV   |  Updated: October 04, 2018 17:35 IST

Reddit
7 Brilliant Home Remedies for Period Pain

ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய மாதவிடாய் வலியின் காரணமாக, “அய்யோ! பையனா பொறந்திருக்கலாம்” என்பது போன்ற வார்த்தைகளை உதிர்த்து கொண்டிருப்பார்கள் பெண்கள். மாதவிடாய் காரணமாக ஏற்படும் வலி சில நேரங்களில் மாரடைப்பை விட கொடுமையானதாக இருக்கும் என்பதை மறுக்க முடியாது. மாதவிடாய் காலத்தில் அடிவயிற்று வலி, இடுப்பு வலி, தலைவலி, உதிரப்போக்கு போன்றவை உடலளவில் ஏற்படும் வலிகள் மட்டுமல்லாமல் மனநிலையிலும் சில மாற்றங்களை உணர நேரிடும். உணர்ச்சி நிலையில் ஏற்ற இறக்கங்கள், கோபம், துக்கம் போன்றவற்றால் உணர்ச்சி கலவையால் பாதிக்கப்படுவர். தாங்க முடியாத வயிற்று வலியால் இனி அவதிப்பட வேண்டாம். மாதவிடாய் வலிக்கு எவ்வித மருந்துகளும் உட்கொள்ளாமல் இயற்கையான முறையில் எப்படி சரி செய்வதென்பதன் விளக்கமே இக்கட்டுரை.

Newsbeep

நல்லெண்ணெய் கொண்டு மசாஜ் செய்யுங்கள்

நல்லெண்ணெய்க்கு உடல் சூட்டை குறைக்கும் தன்மை உண்டு. அதனால் தான் உடல் முழுக்க நல்லெண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. நல்லெண்ணெயில் லினொலிக் அமிலம் இருக்கிறது. இது ஆண்டிஆக்ஸிடண்ட் மற்றும் ஆண்டி இன்ப்ளமேட்ரி தன்மை கொண்டது. மாதவிடாய் காலத்தில் அடிவயிற்று பகுதியில் நல்லெண்ணெய் கொண்டு தேய்த்து வந்தால் வயிற்று வலி குறைந்துவிடும்.


 

வெந்தயம்

வெந்தயத்தை தொடர்ச்சியாக சாப்பிட்டு வருவதனால், உடல் எடை குறையும். கல்லீரல் மற்றும் சிறுநீரக ஆரோக்கியத்திற்கு வெந்தயம் பெரிதளவு பயன்படுகிறது. மேலும் உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க செய்யும். ஒரு பாத்திரத்தில் சிறிதளவு வெந்தயத்தை போட்டு, அதில் தண்ணீர் ஊற்றி 12 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின் அந்த நீரை குடித்து வந்தால் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியானது பறந்து போகும்.


 

ஹாட் வாட்டர் பேக்

பெரும்பாலும் மாதவிடாய் காலத்தில் பெண்கள் வெந்நீரில் குளிப்பது வழக்கம். இந்த வெப்பமானது அடிவயிற்றில் ஏற்படும் வலியை குறைக்கக்கூடியது. கர்பப்பை தசைகளை தளர்வடைய செய்து வலியை குறைத்துவிடும். மேலும் சூடான பானங்களை பருகும்போதும் சற்றே வலி குறைவதை உணர முடியும். மருந்தகங்களில் ஹாட் வாட்டர் பேக் கிடைக்கும். மாதவிடாய் காலத்தில் இதை பயன்படுத்தி வலியில் இருந்து நிவாரணம் காணலாம்.

hot water bottle period pain 620
 

உடற்பயிற்சி

மாதவிடாய் காலத்தில் நகர்வதே சிரமம், இதில் எப்படி உடற்பயிற்சி செய்வதென்பது தானே உங்கள் கேள்வி. கடினமான ஒன்றுதான். மறுக்க முடியாது. ஆனால், உடற்பயிற்சி செய்வதனால், உங்கள் இடுப்பு பகுதியில் இரத்த ஓட்டம் அதிகரித்து எண்டார்பினை வெளியேற்றி கர்ப்பப்பை தசையை தளர்வடைய செய்து வலியை குறைக்கும். பிராணயாமம், சவாசனம் போன்ற யோக பயிற்சிகளை செய்தும் வயிற்று வலியை குறைக்க முடியும். அன்றாடம் உடற்பயிற்சி செய்வதனால், இரத்த ஓட்டம் அதிகரித்து, மாதவிடாய் காலத்தின் போது ஏற்படும் வயிற்று வலியை முற்றிலுமாக குறைத்துவிடும்.


 

சுக்கு மிளகு டீ

உலர்ந்த இஞ்சி, மிளகு, சுவைக்கேற்ப சர்க்கரை சேர்த்து டீ தயாரித்து குடித்தால் உடலில் மாதவிடாய் காலத்தில் சுரக்கும் ப்ரொஸ்டாக்லேண்டின்ஸை குறைத்து, வயிற்று வலியும் குறையும். மேலும் ஒழுங்கற்ற மாதவிடாயை சரிசெய்து, வலியால் உண்டாகும் சோர்வை சரிசெய்யும்.


 

சீரகம்

ஒரு பாத்திரத்தில் சீரகத்தை போட்டு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து இந்த நீரை குடித்து வந்தால் மாதவிடாயால் ஏற்படும் வயிற்று வலி குணமாகும். சீரகத்தில் ஆண்டி-ஸ்பாஸ்மோடிக் மற்றும் ஆண்டி-இன்ப்ளமேட்ரி குணங்கள் இருப்பதால் வலியால் உண்டாகும் சோர்வை விரட்டிவிடும்.

Listen to the latest songs, only on JioSaavn.com


 

கேமோமைல் டீ

உடலில் ஏற்படும் வலி மற்றும் சோர்வை சரிசெய்யும் தன்மை கேமோமைல் டீக்கு உண்டு. ப்ரோஸ்டாக்லேண்டின்ஸின் சுரப்பை குறைத்து மாதவிடாய் வலியை போக்கும். கர்ப்பப்பைக்கு மிகவும் நல்லது என்பதால் தினமும் கூட இதனை குடிக்கலாம். இந்த குறிப்புகளை தவறாமல் கடைப்பிடித்து மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியில் இருந்து தப்பித்து கொள்ளுங்கள்.

Comments

chamomile tea


உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement